மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க… அனைத்து உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கும் சிறந்த உணவுகள்!!

பெண்களும் அவர்களது உடல் சார்ந்த பிரச்சனைகளும் உடன் பிறவா சகோதரிகள் போல. ஆண்கள், “இது எல்லாம் ஒரு பிரச்சனையா…” என கிண்டலும் கேலியுமாக பேசினாலும். அவர்களது வலியை உணர்ந்துப் பார்த்தல் தான் தெரியும். அந்த மூன்று நாட்கள் மட்டுமல்லாது அவர்களது உடல்நிலை ஒவ்வொரு காலநிலை மாற்றத்தின் போதும் ஏதாவது ஒரு உடல்நல பிரச்சனையை சந்திக்கிறது. இதற்கான சரியான தீர்வினை இன்றைய நவீன மருத்துவத்தினாலும் கூட தர இயலவில்லை என்பது தான் உண்மை. தற்காலிக தீர்வு மறுபடியும் கொஞ்சம் நாட்கள் கழித்து பிரச்சனை எழுவது என 100 இல் 80 சதவீத பெண்கள் பல உடல் சார்ந்த பிரச்சனைகளை எதிர் கொள்கின்றனர்.

 

இதற்கான சரியான தீர்வு என்ன? தற்போது வரும் பிரச்சனைகள் போல 30 வருடங்களுக்கு முன்பு இருந்த பெண்களுக்கு ஏதும் இருந்ததில்லை. இருந்தாலும் அந்த காலத்து இயற்கை வைத்தியம் அவர்களுக்கு பூரண தீர்வை தந்தது. இயற்கை வைத்தியம் என்றால் ஏதோ வானத்தில் இருந்தோ அல்லது அடர்ந்த வனத்தில் இருந்தோ இலைகளை பறித்து வந்து அவர்கள் வைத்தியம் செய்யவில்லை. அவர்களது அன்றாட உணவுப் பழக்கங்களில் இருந்த ஊட்டச்சத்துகளின் நன்மைகளினால் தான் சீரியப் பயனடைந்தனர். சரி இனி, பெண்களின் அனைத்து உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கும் சிறந்த உணவுகள் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்…

 

மாதவிடாய் பிடிப்புகள்

மாதவிடாய் பிடிப்புகள் ஏற்படும் பெண்கள் கீரை வகைகள், நார்ச்சத்து மற்றும் குறைந்து கொழுப்புச்சத்து, தானியம் போன்ற உணவு வகைகளை நீங்கள் உட்கொள்ளும் போது மாதவிடாய் பிடிப்பு பிரச்சனைகளில் இருந்து தீர்வுக் காணலாம். நார்ச்சத்து நிறைந்த உணவுகள் சீரிய முறையில் தீர்வளிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

செரிமானம் மற்றும் மலச்சிக்கல்

தயிர், பீன்ஸ், ஓட்ஸ் போன்ற உணவுகளை நீங்கள் சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சனைகளுக்கு நல்லதோர் தீர்வு காண இயலும். மற்றும் அதிக அளவில் தண்ணீர் அருந்துவதும் பயனளிக்கும். பொதுவாகவே தண்ணீர் நன்கு பருகிஎவந்தால் உடல்நலம் நல்ல நிலையடையும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

தூக்கமின்மை

தூக்கமின்மையை சரிசெய்ய அன்னாசிப்பழம், ஆரஞ்சு மற்றும் வாழைப்பழங்கள் சாப்பிட்டு வந்தால் தீர்வுக் காண முடியும். இந்த மூன்று பழங்களும் சீரம் மெலடோனின் எனப்படும் நமது உடலில் தூக்கநிலையை கட்டுப்படுத்தும் ஹார்மோனை சீர்செய்கிறது. இதனால் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படும் பெண்கள் இந்த பழங்களை சாப்பிட்டு வந்தால் நல்ல தீர்வினை பெற முடியும்.

அழுத்தம் மற்றும் பதட்டம்

அஸ்பாரகஸ் (Asparagus), மீன் மற்றும் ப்ளுபெர்ரி உணவுகள் பெண்களின் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்க உதவுகிறது. ப்ளுபெர்ரியில் இருக்கும் வைட்டமின் சி குறைந்த இரத்தக் அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. மீனில் இருக்கும் ஒமேகா 3 அமிலச்சத்து உடல்நலத்திற்கு மிகவும் நன்மை விளைவிக்கும். அஸ்பாரகஸில் இருக்கும் ஃபோலிக் அமிலச்சத்து பெண்களுக்கு தினசரி தேவைப்படும் சத்து ஆகும். இது அவர்களது மனநிலையை சீராக்க உதவும்.

தலைவலி

கருப்பட்டி டீ மற்றும் பசலை கீரை சாப்பிட்டு வந்தால் தலைவலி குறையும். மிகுந்த தலைவலியாக நீங்கள் உணரும் பட்சத்தில் அன்றைய நாளில் பசலை கீரையை சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் இருக்கும் வைட்டமின் சத்துகள் உடல்நிலை புத்துணர்ச்சி அடைய உதவுகிறது.

வயிறு வீக்கம்/உப்புசம்

வயிறு உப்புசமாக இருந்தாலோ அல்லது உப்பியது போல இருந்தாலோ எலுமிச்சை, கிரீன் டீ, வெள்ளரி மற்றும் வாழைப்பழம் போன்ற உணவுகள் இந்த பிரச்சனைகளில் இருந்து தீர்வு காண உதவும். இந்த உணவுகளில் பொட்டாசியம் சத்து அதிகமாக இருக்கிறது, பொட்டசியம் வயிறு சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கும். வயிற்று கோளாறுகளுக்கு எலுமிச்சை ஒரு நல்ல இயற்கை நிவாராணி ஆகும்.

தசை வலி

வெண்ணெய்பழம் (Avocado), ப்ளுபெர்ரி, இஞ்சி, நட்ஸ், சர்க்கரைவள்ளி கிழங்கு போன்ற உணவுகள் தசை வலி பிரச்சனைகளுக்கு நல்ல பயன் தரும். இவைகளில் பொட்டசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துகள் இருக்கின்றன. மற்றும் இவைகளில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தசை வலிகளை குறைக்க உதவுகிறது. பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் தசைகளை மென்மையடைய உதவுகிறது.

மனநிலை மற்றும் எரிச்சல்

புரதம், தயிர், டார்க் சாக்லேட் போன்ற உணவுகள் பெண்களின் மனநிலையை சரி செய்கிறது. இதுமட்டுமல்லாது பெண்களுக்கு ஏற்படும் பி.எம்.எஸ். (PMS) பிரச்சனை மற்றும் எரிச்சல்களுக்கும் கூட பிரச்சனை அளிக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button