ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…தினமும் நல்லெண்ணெயில் சமைத்து சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

நல்லெண்ணெயில் விட்டமின், ஈ, விட்டமின் பி6, மக்னீசியம், காப்பர், கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க் போன்றவை அதிகமாக நிறைந்துள்ளது. நல்லெண்ணைய், சருமத்தின் ஈரப்பதத்தைச் சமப்படுத்துகிறது.

உடல் வெப்பத்தைத் தணிக்கிறது. ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கிறது. அதுமட்டுமின்றி இதில் பல மருத்துப்பயன்கள் நிறைந்துள்ளது.

அந்தவகையில் தற்போது நல்லெண்ணெயில் சமைத்து சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

நிம்மதியான தூக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கு எள் எண்ணெய் சிறந்த தீர்வாக இருக்கும். எள் எண்ணெயை நெற்றியில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்வது தூக்கம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

நாட்பட்ட மூட்டு பிரச்சனைகள் மற்றும் மூட்டழற்சி உள்ளவர்கள் பாத்திக்கப்பட்ட மூட்டுகளில் எள் எண்ணெயை தடவி மசாஜ் செய்து வருவது சிறந்த தீர்வை தரும். மூட்டு பகுதியில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கவும் எள் எண்ணெய் உதவும்.

குளிர்காலத்தில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தசை வலி, இருமல் மற்றும் சளி உள்ளிட்டவற்றை குறைக்க எள் எண்ணெய் உதவுகிறது. இந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது உடலை சூடாக மற்றும் அமைதியாக உணர வைக்கும்.

எள் எண்ணெய் விரைவில் செரிமானம் ஆகும் தன்மை கொண்டது. எள் எண்ணெயில் காணப்படும் நார்ச்சத்து உணவை சிறப்பாக செரிமானம் செய்ய உதவுகிறது. மலச்சிக்கல் அபாயங்களை குறைக்கிறது.

நம் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களின் சேதத்திலிருந்து எள் எண்ணெய் பாதுகாக்க கூடும். இந்த எண்ணெயில் காணப்படும் வைட்டமின் ஈ புற ஊதா கதிர்கள், மாசுபாடு மற்றும் நச்சுகளிலிருந்து சரும செல்களை பாதுகாக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button