இளநரையை தடுக்கும் வீட்டு தயாரிப்பு ஷாம்பு

Oštecena-kosa-575x386இன்றைய இளசுகளின் மாபெரும் பிரச்சனையான இள நரையை வராமலேயே தடுத்துவிடும் இந்த `ஹோம் மெட்’ ஷாம்பு.

நெல்லிமுள்ளி,
செம்பருத்தி இலை,
மருதாணி இலை…

இந்த மூன்றையும் சம அளவு எடுத்து, பொடி செய்யுங்கள். அதிலிருந்து 4 டீஸ்பூன் எடுத்து, இதனுடன் தேங்காய் பால்-2 டீஸ்பூன், கொஞ்சம் டீ டிகாஷன் (பேஸ்ட் ஆகும் அளவுக்கு) கலந்து, தலைக்குத் தேய்த்துக் குளியுங்கள்.

வாரம் ஒருமுறை இதுபோல குளித்து வந்தால், இளநரை கிட்டவே வராது.

திடீரென்று முன்புற முடி கொட்டி, வழுக்கையாகி கவலைப்படுகிறீர்களா?

இதற்கும் தீர்வு இருக்கிறது தேங்காயில். 2 டீஸ்பூன் தேங்காய்ப் பாலில் ஒரு சின்ன வெங்காயத்தை ஊறவைத்து, மை போல் அரையுங்கள். இந்த விழுதை முடி கொட்டிய பகுதியில் பத்து போல பூசி, நன்றாகத்தேய்த்து அலசுங்கள்.

வாரம் ஒருமுறை இப்படிச் செய்து வாருங்கள். விரைவிலேயே வழுக்கையை மறைத்தபடி, முடி முளைக்கத் தொடங்கிவிடும்.

Leave a Reply