மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…முகத்தை வைத்தே ஒரு பெண்ணுக்கு மலட்டுத்தன்மை பிரச்சனை இருக்கிறது என கண்டுபிடிப்பது எப்படி?

பெண்களின் கர்ப்ப காலம் என்பது மிகவும் உன்னதமான காலம் ஆகும். தாய்மை அடைவது தான் ஒரு பெண்ணுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய ஒரு சந்தோஷம் ஆகும். கர்ப்ப காலத்தில் ஒரு பெண் தனது முழுமையை அடைகிறாள். இது அந்த பெண்ணுக்கு மட்டுமில்லாமல் அந்த பெண்ணின் குடும்பத்தை சார்ந்த அனைவருக்கும் மகிழ்ச்சியை தருவதாக உள்ளது.

ஒரு பெண் தனது உடல் ஆரோக்கியத்தில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தாமல் தன் கருவுறுதல் ஆரோக்கியத்திலும் தனது கவனத்தை செலுத்த வேண்டியது அவசியமாகிறது. சில பெண்களுக்கு இந்த கருவுறும் பாக்கியம் கிடைக்காமல் போகிறது.. இதற்கு ஒரு முக்கிய காரணம் அலச்சியப்போக்கு தான்.. ஒரு பெண் கருவுற முடியாத நிலையை பல காரணங்களால் அடைகிறாள்.. ஒரு சில அறிகுறிகள் பெண் கருவுறாமல் போவதை வெளிப்படுத்துவதாக உள்ளது.

1. அசாதாரண கருப்பை இரத்தப்போக்கு

ஃபைப்ராய்டுகள் வழக்கமாக அசாதாரண கருப்பை இரத்தப்போக்கு ஏற்படுத்துகின்றன. இந்த ஃபைப்ராய்டுகள் முதலில் ஒரு கட்டியாக உருவெடுக்கும். இந்த ஃபைப்ராய்டுகள் பொதுவாக பெண் கருவுறாமையை உண்டாக்கிவிடும். உங்களுக்கு அசாதாரண கருப்பை இரத்தப்போக்கு உண்டானால் உடனடியாக மருத்துவரை அணுகி தீர்வு காண வேண்டியது அவசியமாகும்.

2. முகத்தில் முடி வளர்ச்சி

முகத்தில் முடி வளர்ச்சியை உண்டாக்கும் டெஸ்ட்ரோன் ஹார்மோன் ஆண் செக்சுவல் ஹார்மோன் ஆகும். இது பெண்களுக்குள்ளும் இருக்கும். ஆனால் இது பெண்களுக்குள் மிக குறைந்த அளவு மட்டுமே இருக்கும். ஆனால் உங்களுக்கு இந்த ஆண் ஹார்மோன்களின் அளவு அதிகமானால் அதை உங்களது முகத்தை வைத்தே கண்டு கொள்ளலாம்.

இந்த ஹார்மோன் அளவு அதிகரிக்கும் போது உங்களுக்கு முகத்தில் உள்ள முடிகளின் வளர்ச்சியானது அதிகமாக இருக்கும். முக்கியமாக உதடுக்கு மேல் பகுதியிலும், கன்னங்களிலும் முடி வளர்ச்சி அதிகமாக இருக்கும். நீங்கள் கர்ப்பமாக வேண்டும் என்றால் இந்த ஹார்மோன் பிரச்சனைகளை முதலில் சரி செய்ய வேண்டியது அவசியமாகும்.

3. மாதவிடாய் பிரச்சனை

பெண்களின் மாதவிடாய் ஒழுங்கான முறையில் நடைபெற்றால் தான் பெண்களுக்கு கருவுறும் தன்மையில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று அர்த்தம்.. மிக நீண்ட நாட்கள் கழித்தோ அல்லது சுத்தமாக வரமலேயே போனாலோ நீங்கள் கண்டிப்பாக மருத்துவரை அணுகி தீர்வு காண வேண்டியது அவசியமாகும்.

மாதவிடாய் காலத்தில் வழக்கத்திற்கு மாறாக மிக அதிக வலியை உணர்ந்தாலோ அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்ப்பட்டாலோ உடனடியாக மருத்துவரை அணுகி தீர்வு காணுங்கள்.

4. பின்புற வலி, இடும்பு எழும்பு வலி

PID என்பது உங்களது கர்ப்ப குழாயில் ஒரு வித தழும்புகளை உண்டு செய்ய கூடியது. இந்த தழும்புகளானது கருமுட்டை கர்ப்பப்பையை அடைய சிரமத்தை உண்டு செய்கிறது. இது கர்ப்பத்திற்கு தடையாக உள்ளது. பல பெண்களுக்கு இந்த பிரச்சனை உள்ளது. இதற்கு உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்வது தான் சிறந்தது. தாமதமான சிகிச்சையானது ஆபத்தை உண்டு செய்யும்.

5. உடலுறவின் போது வலி

உடலுறவு என்பது சற்று வலியை தரக்கூடியது தான். ஆனால் நீங்கள் அசாரணமான வலியை உடலுறவின் போதோ அல்லது உடலுறவுக்கு பின்னரோ உணர்ந்தால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இந்த நிலையானது கருவுறாமை உண்டாக காரணமாக உள்ளது. இந்த அசாதாரண வலியானது உங்களது பவுள் மூமண்டை கூட பாதிக்கும். எனவே இது போன்ற வலிகளை உணர்தால் நீங்கள் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவதே மிகச்சிறந்த வழியாகும்.

6. உடல் எடை அதிகரிப்பது

வேகமான உடல் எடை அதிகரிப்பு கூட கருவுறாமைக்கு காரணமாக இருக்கலாம். எனவே உங்களது உடல் எடையில் அசாதாரண மாற்றம் தெரிந்தால் நீங்கள் மருத்துவரை அணுகி தீர்வு காண்பது நல்லது.

7. முகப்பருக்கள்

முகப்பருக்கள் வருவது சாதாரணமான ஒரு பிரச்சனை தான் என்றாலும் கூட, தீடிரென பெருகும் அதிகப்படியான முகப்பருக்கள் கூட பெண்களின் கருவுறா தன்மையை வெளிப்படுத்தும் ஒரு சில மாற்றங்களாக உள்ளன. நீங்கள் திடிரென இந்த முகப்பருக்களின் பிரச்சனைகளை சந்தித்தால் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.

8. முடி உதிர்வு

முடி உதிர்வு இயற்கையாக நடப்பது தான்.. ஆனால் மிக அதிகமாக உள்ள முடி உதிர்வானது, இந்த முடி உதிர்வானது தைராய்டு பிரச்சனைகள், அனிமியா, சொரியாஸிஸ் அல்லது கருவுறுதல் சம்மந்தமான பிரச்சனையாக கூட இருக்கலாம். எனவே நீங்கள் இது போன்ற பிரச்சனைகளை சந்தித்தால் மருத்துவரின் ஆலோசனையை பெறலாம்.

9. அத்திப்பழம்

பெண்கள் அத்திப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் பெண் மலட்டுத்தன்மை பிரச்சனை குறையும். அத்திப்பழத்தை இரவில் பால் உடனோ அல்லது தேன் உடனோ கூட கலந்து சாப்பிடலாம். இது நல்ல தீர்வாக அமையும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button