இராசவள்ளிக் கிழங்கு இனிப்பு கூழ்

10450934_426217040849966_782960967565387886_n (1)இராசவள்ளிக் கிழங்கு – 1

தேங்காய்ப்பால் (முதற்பால்) – 1/2 கப்

தேங்காய்ப்பால் (இடண்டாம்பால்) – 2 கப்

சீனி – 1 – 11/2 கப்

உப்பு – 1 சிட்டிகை

 

•இராசவள்ளிக் கிழங்ககை தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டவும் – ~2 கப் வர வேண்டும்.

•பின்னர் ஒரு பாத்திரத்தில் தேங்காய் இரண்டாம் பால், கிழங்கு துண்டுகளைப்போட்டு அவிய விடவும்.

•கிழங்கு நன்கு அவிந்ததும் சீனி, உப்பு போட்டு கலந்து மெல்லிய நெருப்பில் கொதிக்க விடவும்.

•சீனி கரைந்ததும் கிழங்கை அகப்பை அல்லது மத்தால் நன்கு மசித்து கூழாக்கி விடவும்.

•பின்னர் தேங்காய் முதற் பாலை விட்டு காய்ச்சவும்.

•ஒன்று அல்லது இரண்டு கொதி வந்ததும் இறக்கவும்.

•சுவையான இராசவள்ளிக்கிழங்க் கூழ் தயார். சுடச்சுடவும் குடிக்கலாம். அல்லது ஆறவிட்டும் குடிக்கலாம். மிகவும் சுவையாக இருக்கும்.

Leave a Reply