மருத்துவ குறிப்பு

கிட்னி கற்களுக்கு தொடர்ந்து மாத்திரை சாப்பிடுறீங்களா? கட்டாயம் இதை படியுங்கள்

ஃபோலேட். இதனை விட்டமின் பி 9 என்றும் சொல்லப்படுகிறது. நம் உடலுக்கு தேவையான மிக அத்தியாவசியமான ஓர் விட்டமின் இதுவாகும். புது செல்களை உருவாக்கவும், நோய் எதிர்ப்பு சக்த்திக்கும், டிஎன் ஏ வளர்ச்சிக்கும் இந்த விட்டமின் முக்கியப் பங்காற்றுகிறது.

இது தண்ணீரில் கரையக்கூடிய ஓர் விட்டமின் ஆகும். இது இயற்கையாகவே சில உணவுகளில் இருக்கிறது. ஃபோலேட் அதிகமிருக்கும் உணவுகளை எடுத்துக் கொள்வதினால் புற்றுநோய் வராமல் தவிர்க்க முடியும். இதைத் தவிர இதய நோய், பிறக்கும் போதே ஏற்படுகிற சில பிறவிக் குறைபாடுகள் ஆகியவற்றையும் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஃபோலேட் பற்றி நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

குறைபாடு :

உடலில் ஃபோலேட் குறைபாடு மிகவும் சீரியசாக எடுத்துக் கொள்ளக்கூடிய ஒரு பிரச்சனையாகும். ஆனால் இதனை யாரும் அவ்வளவு சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை, ஆரம்பகட்டத்திலேயே இதனை கண்டு கொண்டால் பல மிகப்பெரிய நோய்களிலிருந்து நாம் தப்பிக்க முடியும்.

நோய் முற்றிய பிறகே சிகிச்சை எடுக்கவே ஆரம்பிப்பதனால் தான் இங்கே சிக்கலே ஆரம்பிக்கிறது.

அறிகுறிகள் :

இதனை சில அறிகுறிகளை வைத்தே நீங்கள் கண்டுபிடிக்கலாம். நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். சளித்தொல்லை அடிக்கடியிருக்கும், காய்ச்சல், தலைவலி ஆகியவை தொடர்ந்து உங்களை பாடாய் படுத்தும்.

எப்போதும் சோர்வாக இருப்பது போல உணர்வீர்கள். சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதில் சிக்கல்கள் உண்டாகிடும். உடலில் ஹீமோக்ளோபின் அளவு குறைவாக இருக்கும்.

கர்ப்பம் :

கருத்தரிப்பதில் பிரச்சனைகள், சிக்கல்கள் உண்டாகும், அல்லது நீண்ட நாட்களாக கருத்தரிக்காமல் இருப்பீர்கள். எதற்கெடுத்தலாம் எரிச்சலாக ஒரு அமைதியான மனநிலையில் இல்லாமல் இருப்பீர்கள். காரணமில்லாமல் கோபப்படுவீர்கள், சருமத்தில் திட்டு திட்டாக மாற்றங்கள் தெரிந்திடும், இளநரை ஏற்படும்.

மிகத் தீவிரமாக :

இது ஆரம்ப கட்டத்தில் இருக்கக்கூடிய மக்களுக்கு தான் இப்படியான அறிகுறிகள் தென்படும். இதைத் தவிர சிலருக்கு பிறரை விட மிக வேகமாக ஃபோலேட் குறைந்திடும். யாருக்கு எல்லாம் மிகவும் வேகமாக ஃபோலேட் குறைய வாய்ப்பிருக்கிறது தெரியுமா? கர்ப்பிணிப்பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், மதுப்பழக்கம் உடையவர்கள், கல்லீரல் பாதிப்பு இருப்பவரக்ள், டயலாசிஸ் செய்து கொண்டிருப்பவர்கள், கிட்னி கல் பிரச்சனை இருப்பவர்கள், சர்க்கரை நோய்க்கு தொடர்ந்து மாத்திரை சாப்பிடுபவர்கள், ஆகியோருக்கு பிறரை விட வேகமாக ஃபோலேட் குறையக்கூடும்.

எதில் அதிகம் :

ஃபோலேட் உணவுகள் சைவ உணவுகளில் தான் அதிகம் கிடைக்கின்றன. அதனால் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். முளைக்கட்டிய தானியங்கள், ப்ரோக்கோலி, பட்டாணி ஆகியவற்றை சாப்பிடலாம்.

டயட் :

பொதுவாக நாம் சாப்பிடக்கூடிய சத்தான உணவுகள் மூலமாகவே இந்த ஃபோலேட் சத்து குறைப்பாட்டினை தவிர்த்திட முடியும். ஒவ்வொருவருக்கும அவரது உடல் வாகுக்கு ஏற்ப ஃபோலேட் கிரகத்துக் கொள்ளும் தன்மை அவர்கள் எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் ஆகியவற்றினால் சில வேறுபாடுகள் தெரியக்கூடும்.

உடலில் :

ஒரு நாளைக்கு உங்களுக்கு முப்பது முதல் நாற்பது மில்லிகிராம் வரையில் ஃபோலேட் தேவைப்படும். இவற்றில் சரிபாதி உங்களது கல்லீரலிலேயே சேமிக்கப்பட்டிருக்கும்,மீதமிருப்பவை ரத்ததிலும், திசுக்களிலும் கலந்திருக்கும்.

ஃபோலேட் பற்றாகுறை இருக்கிறது என்பதை கண்டறிய சீரம் ஃபோலேட் கான்சன்ட்ரேசன் டெஸ்ட் எடுக்கப்படும்.

எதில் அதிகம் :

எதில் எல்லாம் ஃபோலேட் அதிகமாக இருக்கிறது என்று தெரிந்து கொண்டு அந்த உணவுகளை அதிகம் உங்கள் உணவுகளில் சேர்த்து வாருங்கள். கீரை, மாட்டின் கல்லீரல்,கருப்பு சுண்டல்,ப்ரோக்கோலி,ராஜ்மா,அவகோடா.

பிறந்த குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 65 மில்லிகிராம் வரை தேவைப்படும். வளரும் குழந்தைகளுக்கு 80 முதல் 150 மில்லிகிராம் வரை தேவைப்படும். டீன் ஏஜில் இருப்பவர்களுக்கு ஒரு நாளைக்கு 300 கிராம் வரை தேவைப்படும். கர்ப்பிணிப்பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு 600 கிராம் வரையிலும் தேவைப்படும்.

சத்துக்கள் :

ஃபோலேட் பற்றாகுறை ரத்த சோகைக்கு வழி வகுத்திடும். அதானால் இயற்கையாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய சத்துக்கள், உணவுகளிலிருந்து கிடைக்கக்கூடிய சத்துக்கள் கூட உங்களுக்கு சரி வர கிடைக்காது. இதனால் பிரச்சனை மேலும் தீவிரமடையும் முன்பை விட எப்போதும் சோர்வாகவே உணர்வீர்கள்.

மன அழுத்தம் :

இன்றைக்கு இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு மன அழுத்தம் தான் மிக முக்கியமான பிரச்சனையாக இருக்கிறது. காரணமேயில்லாமல் மன அழுத்தம் பிரச்சனை ஏற்படுகிறது என்றால் உங்களுக்கு ஃபோலேட் சத்து குறைந்திருக்கும்.

இதைத் தவிர வயதானவர்களுக்கு ஏற்படக்கூடிய மறதி நோய் குறைய ஃபோலேட் உணவுகளை நிறைய எடுத்துக் கொள்ள வேண்டும்.

மாரடைப்பு :

பி விட்டமின் மற்றும் ஃபோலேட் ஆகியவை ரத்தத்தில் இருக்கும் ஹோமோசிஸ்டின் அளவை குறைக்கும். இந்த ஹோமோசிஸ்டின் தான் மாரடைப்பு மற்றும் பக்கவதாம் ஏற்படுத்தக்கூடியதாகும்.

ஹோமோசிஸ்டின் ப்ரோட்டீன்களின் கலவையினால் செய்யப்பட்டது. இது ஒரு வகை அமினோ அமிலமாகும்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button