21 6188360c013
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…யார் யாரெல்லாம் தினமும் கேரட் ஜூஸ் குடிக்கலாம்!

கேரட் சாப்பிடுவதற்கு பதிலாக ஜூஸ் செய்து தினமும் பருகினால் இரு மடங்கு நன்மைகளை பெற்று கொள்ள முடியும்.

கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.

இத்தகைய வைட்டமின்களை முழுவதும் பெற்று கொள்ள தினமும் கேரட்டை ஜூஸ் செய்து குடியுங்கள்.

 

கேரட்டை ஜூஸ் செய்ய தேவையான பொருட்கள்
கேரட் – 4
எலுமிச்சை – 1/2 (சாறு எடுத்துக் கொள்ளவும்)
தேன்
செய்முறை
முதலில் கேரட்டை நன்கு நீரில் கழுவி, அதன் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதனை வடிகட்டி, பின் அதில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி கலந்து பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும்.

சுவைக்கு தேன் விரும்பினால் கலந்து கொள்ளலாம்.

 

நன்மைகள்
கேரட்டில் உள்ள நார்ச்சத்து நன்மை அளிக்கக்கூடிய கிருமிகளை உருவாக்குகிறது.
அளவாக சாப்பிட்டால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.
கேரட்டில் இருக்கும் வைட்டமின் A கண்களின் பார்வையைத் தெளிவாக்கி ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.
குறைவான கலோரிகளே இருப்பதால் டயட்-ல் இருப்பவர்கள் கேரட்டைச் சாப்பிடுவது நல்லது.
புற்றுநோய் உருவாவதை ஆரம்பத்திலேயே அழிக்கும் வல்லமை கேரட்டில் இருப்பதால் தினமும் எடுத்துக்கொள்ளுதல் நல்லது.
உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல. உடல் அழகைப் பராமரிக்கவும் கேரட் உதவும்.
தினமும் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் முகம் பளபளப்பாகும்.

Related posts

பாடி பில்டர் போன்ற உடற்கட்டு பெற எப்படி உணவுப் பழக்கம் பின்பற்ற வேண்டும்!!!

nathan

சாப்பிடக்கூடாத காய்கறிகள் என்னென்ன தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

கோடையில் தாக்கும் ஆபத்தான வெப்ப மயக்கம் நோய்!!!தெரிஞ்சிக்கங்க…

nathan

க்ரில் சிக்கன் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா?

nathan

மீந்து போன சாதத்தில் சூப்பரான ஸ்நாக்ஸ்

nathan

பழங்கள் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்க கூடாது தெரியுமா?அவசியம் படிக்க..

nathan

உங்களுக்கு தெரியுமா ஜப்பான் மக்கள் நீண்ட நாள் உயிர் வாழ இது தான் காரணமா?

nathan

உங்களுக்கு தெரியுமா இத தினமும் கொஞ்சம் சாப்பிட்டா, உடம்பு எப்பவும் சுத்தமா இருக்கும் ?

nathan

சுவையான ஆட்டுக் குடல் சூப்…

nathan