t 14
Other News

சுவையான இறால் முட்டை பொடிமாஸ்

தேவையான பொருட்கள்

இறால் – 100 கிராம்

முட்டை – 2
மிளகு தூள் – சிறிதளவு
உப்பு – அரை ஸ்பூன்
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிது
மிளகாய் தூள் – சிறிதளவு
வெங்காயம் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
வெங்காயத்தாள் – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் இறாலை சுத்தம் செய்து சிறிது மிளகாய் தூள், உப்பு, இஞ்சி, பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்துசுமார் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் அதனை தோசை கல்லையில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும். வறுத்த இறாலை பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயத்தாள், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பின்னர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், வெங்காயத்தாள் போட்டு வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகு தூள், மிளகாய் தூள், கறிவேப்பிலை, உப்பு போட்டு வதக்கவும். அடுத்ததாக அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறவும்.

முட்டை நன்றாக வெந்து உதிரி உதிரியாக வந்ததும் பொடியாக நறுக்கிய இறால், வெங்காயத்தாள் சேர்த்து நன்றாக கலந்து இறக்கி பரிமாறலாம்.

இப்போது சுவையான இறால் முட்டை பொடிமாஸ் ரெடி.

Courtesy: MalaiMalar

Related posts

EXCLUSIVE PHOTOS: Salma Hayek Without Makeup Is as #Flawless as You’d Expect

nathan

ரஷ்மிக்கா மந்தனாவின் செம்ம கியூட்டான புகைப்படங்கள்

nathan

அம்மாடியோவ் என்ன இது? அழகு சீரியல் நடிகை ஸ்ருதி நடித்த மோசமான படம் தெரியுமா.. பட லிங்க் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்

nathan

ஆஸ்திரேலியாவில் சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ள விமான ஊழியர்!!

nathan

ராகவா லாரன்ஸ் நடித்த சந்திரமுகி 2 படத்தின் 2 நாள் வசூல்- முழு கலெக்ஷன்

nathan

நடிகை ரஞ்சனாவிடம் நீதிபதி அதிரடி கேள்வி-ஒரு தாய் இப்படித்தான் பேசுவார்களா…

nathan

ஒரே நேரத்தில் 2 வாலிபருடன் உல்லாசமாக இருந்த பெண் டாக்டர்

nathan

நடிகர் மாரிமுத்துவின் தற்போதைய சொத்து மதிப்பு

nathan

கல்யாணமான ஒரே மாதத்தில் டைவர்ஸ் – புதிய காரை வாங்கிவிட்டு சம்யுக்தா

nathan