சமையல் குறிப்புகள்

தெரிஞ்சிக்கங்க…தமிழர்கள் விரும்பி உண்ணும் இந்த உணவில் அடங்கியுள்ள எண்ணற்ற சத்துக்கள் என்னென்ன?

சேப்பங்கிழங்கு இலைகளில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளது. இந்த இலைகள் பார்ப்பதற்கு இதய வடிவில் அடர்ந்த பச்சை நிறத்தில் காணப்படும்.

இந்த இலைகளை சமைத்து சாப்பிடும் போது கீரை சுவையுடன் இருக்கும். ருசியான இந்த கீரையை நீங்கள் சாப்பிடலாம். மேலும், சேப்பங்கிழங்கு இலையில், விட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்ற பொருட்கள் உள்ளன.

எனவே இது புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கிறது. அதிலும் குடல் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் கொண்டுள்ளது. பெண்களுக்கு வரும் மார்பக புற்று நோய் வராமல் தடுக்க இது உதவுகிறது.

இந்த இலையை பச்சையாக சாப்பிட்டால், விஷத்தன்மையை கொண்டுள்ளதாம். ஆனால் சமைத்து சாப்பிட்டால் பல நன்மைகளை தருகிறதாம்.

இந்த இலைகளின் சாற்றைக் கொண்டு எலிகளில் ஆராய்ச்சி செய்த போது அதன் ஆண்டிஹைர்பெர்ட்டென்சியஸ் மற்றும் கடுமையான டையூரிக் தன்மை எலிகளின் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது தெரிய வந்தது.

இதிலுள்ள விட்டமின் சி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நோயெதிர்ப்பு செல்களான டி செல்கள், போகோசைட் போன்றவை வேலை செய்ய விட்டமின் சி அவசியம்.

உங்கள் உடலில் விட்டமின் சி பற்றாக்குறை இருந்தால் நோயெதிர்ப்பு சக்தியும் குறைவாக இருக்கும். மேலும், இதில் மறைந்துள்ள பல நன்மைகளை காணொளியுன் மூலம் விளக்கப்பட்டுள்ளதை கண்டு தெரிந்துகொள்ளுங்கள்.

Related posts

பன்னீரில் இட்லி செய்தால் அதன் சுவை எப்படி இருக்கும் தெரியுமா?

nathan

சூப்பரான கார்ன் இட்லி

nathan

வெள்ளரி சாலட்டை இவ்வாறு செய்து கொடுங்கள் குழந்தைகளுக்கு!…

sangika