சமையல் குறிப்புகள்

சூப்பரான கார்ன் இட்லி

குழந்தைகளுக்கு சோளம் என்றால் ரொம்ப பிடிக்கும். ஆகவே அத்தகைய ஆரோக்கியத்தைத் தரும் சோளத்தை எப்போதும் ஒரே போன்று வேக வைத்து கொடுக்காமல், சற்று வித்தியாசமாக அதனைக் கொண்டு இட்லி செய்து கொடுங்கள். அதிலும் காலை வேளையில் இதனைக் கொண்டு இட்லி செய்து கொடுத்தால், அவர்களின் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.

இங்கு அந்த சோளத்தைக் கொண்டு செய்யப்படும் இட்லியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து, அந்த கார்ன் இட்லியை உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள். குறிப்பாக இந்த கார்ன் இட்லியானது வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

Healthy Corn Idli Recipe
தேவையான பொருட்கள்:

கார்ன்/சோளம் – 1 1/2 கப்
உளுத்தம் பருப்பு – 3/4 கப்
வறுத்த கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 5
தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
கடுகு – 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் சோளம் மற்றும் உளுத்தம் பருப்பை நீரில் 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை நன்கு கழுவி, கிரைண்டர் அல்லது மிக்ஸியில் போட்டு, அத்துடன் கடலைப்பருப்பு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர் ஊற்றி, இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதில் உப்பு மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, அத்துடன் கொத்தமல்லியை சேர்த்து வதக்கி, பின் அதனை அரைத்து வைத்துள்ள மாவில் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

இறுதியில் அந்த மாவைக் கொண்டு இட்லிகளாக சுட்டு எடுத்தால், கார்ன் இட்லி ரெடி!!!

Related posts

சுவையான உருளைக்கிழங்கு பீன்ஸ் சப்ஜி

nathan

சுவையான ஜவ்வரிசி வத்தல் செய்வது எப்படி?

nathan

கண்டந்திப்பிலி உடல் வலியை போக்கக்கூடியது….

sangika