ஆரோக்கிய உணவு

மொறுமொறுப்பான மீன் மிளகு வறுவல்!

கடல் உணவுகளில் மீன் ஒரு சத்தான சுவையான உணவாகும்.

மீனில் நம் உடலுக்கு தேவையான புரதச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது.

மீனை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொள்வதால் கண் பார்வை குறைபாடு, இதயம் சார்ந்த நோய்கள் வருவது தவிர்க்கப்படும்.

மீன் குழம்பு , மீன் வறுவல் என இரண்டு விதமாக செய்யலாம். அதில் மீன் வறுவல் மிகவும் ருசியான உணவாகும். சுவையான மீன் மிளகு வறுவல் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

 

தேவையான பொருட்கள்
மீன் – 1 கிலோ
மிளகு தூள் – 2 ஸ்பூன்
சீரகம் தூள் – 1 ஸ்பூன்
சோம்பு தூள் – 1 ஸ்பூன்
தனி மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – ¼ தூள்
இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – சிறிதளவு
சோள மாவு – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை
மீனை நன்கு சுத்தம் செய்து கழுவி துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

மீனை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதில் மஞ்சள் தூள், சீரகத் தூள், மிளகு தூள், தனி மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, சோள மாவு, தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.

மசாலா முழுவதும் மீனுடன் சேரும் அளவிற்கு நன்கு பிசறி விடவும்.

தேவை என்றால் கேசரி கலர் சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம். மீனை ½ மணி நேரம் ஊற விடவும். ½ மணி நேரம் ஊறிய பின் மீனை தோசை தவாவில் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் சிவந்து வரும் வரை வறுத்து எடுக்கவும்.

மீனை வறுக்கும் போதே சிறிதளவு கறிவேப்பிலையை மீனுடன் சேர்த்து வறுத்து பரிமாறினால் சுவையான மீன் மிளகு வறுவல் தாயார்.

Related posts

உங்களுக்கு தெரியுமா தினமும் மாதுளை ஜூஸைக் குடித்து வந்தால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

உங்களுக்கு தெரியுமா கறிவேப்பிலையை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா??

nathan

உடலுக்கு வலுகொடுக்கும், முப்பருப்பு வடை.!

nathan