மருத்துவ குறிப்பு

இள வயதுக்காரர்களை மிரட்டும் சைலண்ட் ஸ்ட்ரோக்! தெரிந்துகொள்வோமா?

சர்க்கரை நோய், மாரடைப்பினை தாண்டி மரணத்தை கொடுக்கக்கூடியவற்றில் அடுத்து நிற்பது பக்கவாதம், கை கால்கள் செயலிழந்து கிட்டத்தட்ட நம்முடைய வாழ்க்கையே உருக்குலைத்துவிடும் பக்கவாதம் குறித்து இன்னமும் போதிய விழிப்புணர்வு இல்லை என்றே சொல்ல வேண்டும்.

எப்படி இதயத்திற்கு ரத்தன் செல்ல வேண்டிய இடத்தில் அடைப்பு ஏற்பட்டால் மாரடைப்பு ஏற்படுகிறதோ அதே போல மூளைக்கு ரத்தம் செல்லும் வழியில் அடைப்பு ஏற்பட்டாலோ அல்லது ரத்தக் கசிவு ஏற்பட்டாலோ பக்கவாதம் ஏற்படும்.

மூளை சீராக இயங்குவதற்கு ரத்தம் மட்டுமல்ல போதுமான அளவு ஆக்ஸிஜன், சில நியூட்ரிசியன்கள் தேவைப்படும். அப்போது தான் மூளையில் இருக்கக்கூடிய செல்கள் உயிருப்புடன் இருக்கும். ரத்தம் கிடைப்பதில் தடை ஏற்பட்டால், செல்கள் மரணிக்கத் துவங்கும், இதனால் மூளை சரியாக செயல்படமுடியாமல் உடலின் பிற பாகங்களுக்கான கட்டளைகளை வழங்க முடியாது. இதனைத் தான் நாம் பக்கவாதம் என்கிறோம்.

தவிர்க்க :

பக்கவாதம் ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் மட்டுமே நாம் காப்பாற்ற முடியும், அதனால் அதன் ஆரம்ப அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும் போதே மருத்துவரிடம் சிகிச்சை பெறுவது மிகவும் நல்லது.

பக்கவாதத்திலேயே பல வகைகள் இருக்கின்றன, உங்களுக்கு தாக்கியிருப்பது பக்கவாதம் தானா? அவை என்ன வகை ஆகியவற்றை கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றினாலே இந்த பக்கவாதம் என்ற பிரச்சனை வராமல் தவிர்க்க முடியும்.

வகைகள் :

இந்த பக்கவாதத்தில் குறிப்பாக மூன்று முக்கிய வகைகள் சொல்லப்படுகிறது அவற்றில் இஸ்கீமிக் ஸ்ட்ரோக் தான் பெரும்பாலானோருக்கு தாக்குகிறது. இரத்த உறைவு ஏற்பட்டு ஆக்ஸிஜன் மற்றும் ரத்தம் செல்ல தடை ஏற்படும் போது இந்த இஸ்கீமிக் ஸ்ட்ரோக் ஏற்படுகிறது.

பிற வகைகள் :

இரண்டாவதாக ஹீமோராகிக் ஸ்ட்ரோக் என்ற வகையைச் சொல்கிறார்கள். இது மூளைக்குச்ச் செல்லக்கூடிய ரத்த நாளங்கள் பலவீனமாக இருந்தால் ஏற்படக்கூடிய பக்கவாதத்தினை இந்த வகையில் சேர்க்கிறார்கள்.

மூன்றாவதாக ட்ரான்ஸைண்ட் இஸ்கீமிக் அட்டாக் என்கிறார்கள் இதனை மீனி ஸ்ட்ரோக் என்கிறார்கள். மூளையின் குறிப்பிட்ட பகுதிக்கு ரத்தம் செல்ல தாமதம் ஏற்பட்டாலோ அல்லது ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் இந்த பிரச்சனை ஏற்படும்.

குறைந்த நேரத்தில் :

பெரும்பாலும் இவை குறிப்பிட்ட கால இடைவேளியில் சரியாகிடும், மயக்கம் ஏற்படுவது,வலிப்பு ஏற்படுவது எல்லாம் இப்படித் தான். நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளாமல் விரைவில் இரண்டு அல்லது மூன்று நிமிடங்களில் அது நிவர்த்தியாகும்.

அதனால் இதனை நாம் கண்டுகொள்ளாமல் விடுவது, அல்லது சகஜமாக அடிக்கடி இப்டித்தான் ஆகும் என்று எடுத்துக் கொள்வதும் தவறானது.

காரணங்கள் :

ஒவ்வொரு வகை ஸ்ட்ரோக் ஏற்படுவதற்கும் தனித்தனியாக காரணங்களைச் சொல்கிறார்கள் ஆனால் இவையெல்லாம் பொதுவானதாக இருக்கிறது. அதிக உடல் எடை கொண்டிருப்பவர்கள், 55 வயதுக்கு மேற்பட்டவர்கள், குடும்பத்தில் வேறு நபர்கள் யாருக்கேனும் பக்கவதாம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது நரம்பு தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் உங்களுக்கும் ஏற்படக்கூடும்.

போதை :

இதைத் தவிர மிக முக்கியமானது இது, இன்றைய வாழ்க்கை முறை. பலருக்கும் இன்றைக்கு ஒரேயிடத்தில் உட்கார்ந்திருக்க வேண்டிய சூழல் அதிக உடல் உழைப்பு தேவைப்படாத வேலையாகவே இருக்கிறது.

அவர்களுக்கு எல்லாம் பக்கவதாம் ஏற்பட வாய்ப்புண்டு, உடல் உழைப்பு மட்டுமல்ல அவர்களின் உணவுப்பழக்கமும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதைத் தவிர புகைப்பழக்கம், போதை, மது உள்ளிட்டவையும் ஓர் காரணியாகும்.

அறிகுறிகள் :

பெரும்பாலும் இவற்றை எல்லாம் நாம் சகஜமாக கடந்து செல்லக்கூடிய அறிகுறிகளாகத்தான் இருக்கும். பேசுவதில் தடுமாற்றம், ஒருவர் சொல்வதை புரிந்து கொள்வதில் தாமதம், குழப்பமான மனநிலை, தலைவலி, குமட்டல், முகம், கை, கால் ஆகிய பகுதிகளில் வலி அல்லது பிடித்துக் கொள்வது, பார்வையில் கோளாறுகள்,அடிக்கடி சோர்வு ஏற்படுவது, நடப்பதில் சிரமம் ஏற்படுவது, கூர்ந்து கவனிப்பதில் சிக்கல்கள் ஆகியவை ஆரம்ப கால அறிகுறிகளாகும்.

இயற்கை உபாதைகள் கழிப்பதில் சிக்கல்கள், மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு,ஆகியவற்றையும் கவனிக்க வேண்டியது அவசியம்.

தீர்வு :

இந்த பக்கவாதம் என்பது நாள்பட்ட ஓர் உடல்நலக்குறைவு. பொதுவாக ஆரம்ப கால அறிகுறிகளின் போதெல்லாம் பெரும்பாலும் இதனை யாரும் கண்டு கொள்வதேயில்லை சற்று தீவிரமானதும் தான் மருத்துவரிடமே செல்கிறோம், அப்போது ஒரு ஊசி போட்டதும், அல்லது சில நாட்களுக்கு மாத்திரை சாப்பிட்டதும் சரியாகிட வேண்டும் என்று நினைப்பதெல்லாம் முட்டாள்தனமானது.

பக்கவதாம் ஏற்பட்டால் அதனை சரியாக நீண்ட காலங்கள் ஆகும். சில நேரங்களில் சகஜ நிலைக்கு திரும்ப முடியாமலே போகலாம்.

F.A.S.T :

பக்கவாதத்திற்கான அறிகுறிகளை நினைவில் கொள்ள இந்த பெயரைக் கொண்டு நீங்கள் சரிபார்க்கலாம்.

Face – பேசும் போதோ அல்லது சிரிக்கும் போதோ அவரது முகத்தின் ஒரு பக்கம் அசையாதிருப்பது, அல்லது ஒரு பக்கம் மட்டும் தளர்ந்திருப்பது.

Arm – கைகள் அதிக பலவீனமாக இருப்பது, சிறிய பொருளைக்கூட தூக்க முடியாமல் சிரமப்படுவது, அது தட்டு, ஸ்பூன்,டம்ப்ளர் ஆகியவற்றையும் குறிக்கலாம் அதே போல கையில் கொடுத்த பொருட்களை இறுக்கமாக பிடித்துக் கொள்ள முடியாமல் தவிப்பது.

Speech – பேசுவதில் தடுமாற்றங்கள், ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப சொல்வது, வித்யாசமான ஓசைகளை எழுப்பது, பேசும் விஷயத்தை மறந்துவிடுவது.

Time : ஒருவருக்கு மேற்சொன்ன அறிகுறிகள் எல்லாம் தெரிந்தால் உடனடியாக தாமதிக்காமல் மருத்துவமனைக்கு கொண்டு செல்வது மிகவும் அவசியமாகும்.

கண்டுபிடிக்க :

உங்களுக்கு தாக்கியிருப்பது பக்கவாதம் தானா? அப்படியென்றால் அது எந்த வகை என்பதை கண்டுபிடிக்க பல்வேறு மருத்துவ உபகரணங்கள்,பரிசோதிக்கும் முறை இருக்கிறது. அவற்றில் சிலவற்றை என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.

இது ஆரம்ப நிலை, உங்களது உடல் நிலை அல்லது உங்கள் வீட்டில், உறவுகளில் யாருக்கேனும் நரம்பு தொடர்பான பிரச்சனைகள் ஏற்கனவே பக்கவாதம் தாக்கியிருக்கிறதா என மருத்துவர் கேட்டறிவார்.

ரத்தப் பரிசோதனை :

பாதிக்கப்பட்ட நபருக்கு கழுத்தில் ரத்த நாளங்களில் ஏதேனும் வீக்கம் தெரிகிறதா என்று பாருங்கள். அதே போல கண்களுக்கு பின்னால் இருக்கும் ரத்த நாளங்கள் இயல்பாக இருக்கிறதா என்பதையும் மருத்துவர் பரிசோதிப்பார்.

இதில் சந்தேகம் அதிகரித்தால் ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படும். இவற்றில் ரத்தத்தில் என்னென்ன பொருட்கள் கலந்திருக்கிறது அவற்றின் அளவு என்ன? ரத்த உறைவு ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் அவற்றின் தாக்கம் குறித்தும், அது என்ன மாதிரியான பொருள் என்பது வரையில் கண்டுபிடிக்க முடியும், மேலும் ஏதேனும் நோய்த் தொற்று,கிருமித் தொற்று இருக்கிறதா என்பதையும் கண்டுபிடிக்க முடியும்.

ஸ்கேன் :

தொடர்ந்து எக்ஸ் ரே மற்றும் ஸ்கேன் எடுக்கப்படும். இதில் மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டிருக்கிறதா அல்லது ஏதேனும் கட்டியிருக்கிறதா என்பதை கண்டறியலாம். தொடர்ந்து எம் ஆர் ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டு எந்த இடத்தில் பாதிப்பு உண்டாகியிருக்கிறது, அதனால் மூளையில் இருக்கும் திசுக்களுக்கு என்ன மாதிரியான பாதிப்பு உண்டாகியிருக்கிறது என்பதை கண்டறிய முடிந்திடும்.

காரோடிட் அல்ட்ரா சவுண்ட் :

இது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ஆகும். இதன் மூலம் உங்களது ரத்த ஓட்டத்தை துல்லியமாக கணிக்க முடியும். உடல் முழுவதும் குறிப்பாக மூளையில் சரியான ரத்த ஓட்டம் இருக்கிறதா? குறிப்பட்ட ஒரு பகுதியில் மட்டும் ஏதேனும் சிக்கல்கள் ஏற்படுகிறதா என்பதை எளிதாக கண்டுபிடித்து விடலாம்.

கழுத்திலிருந்து மூளைக்கு செல்லக்கூடிய ரத்த நாளங்கள் குறித்த விரிவான தகவல்களை நாம் இதிலிருந்து பெறலாம்.

எகோ கார்டியோகிராம் :

இதில் இதயத்திலிருந்து மூளைக்கு செல்லக்கூடிய ரத்த நாளங்கள் குறித்து கண்டறியப்படும். மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புண்டா, இந்த அடைப்பினால் பக்கவாதம் ஏற்படுமா என்பதை இந்த டெஸ்ட் மூலமாக கண்டுபிடிக்க முடியும்.

சைலண்ட் ஸ்ட்ரோக் :

பக்கவாதம் ஏற்பட்டிருக்கிறது என்பதையே அறியாமல், அறிகுறிகள் அதிகமாக தெரியாது ஏறடக்கூடிய பக்கவாதத்தை தான் சைலண்ட் ஸ்ட்ரோக் என்கிறார்கள். அறிகுறிகுறிகளைக் கொண்டு அவ்வளவு எளிதாக எல்லாம் இதனை கண்டறிய முடியாது.

ஒன்றுக்கு மேற்பட்ட முறை இந்த சைலண்ட் ஸ்ட்ரோக் தாக்கியிருந்தால் கடுமையான பாதிப்புகள் உண்டாகிடும்.

எப்படி கண்டறிவது ?:

ஸ்கேன் மூலமாக மட்டுமே கண்டுபிடிக்க முடியும், உங்களது நடை மற்றும் அன்றாட வேலைகளில் கை அசைப்பது, வாய் அசைப்பது, பேசுவது ஆகியவற்றை கொண்டு மருத்துவர் கண்டுபிடிப்பார் என்றாலும் ஸ்கேன் செய்து உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த சைலண்ட் ஸ்ட்ரோக் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு.

வாய்ப்புகள் :

தொடர்ந்து தெரபி எடுக்கும் பட்சத்தில் இந்த சைலண்ட் ஸ்ட்ரோக் பாதிப்பின் தீவிரத்தை தவிர்க்க முடியும், அதிக ரத்த அழுத்தம் இருப்பவர்கள், தாறுமாறாக இதயத்துடிப்பு ஏற்படுபவர்களுக்கு எல்லாம் ஸ்லைண்ட் ஸ்ட்ரோக் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு.

என்ன செய்யலாம்? :

ஆரோக்கியமான வாழ்க்கை முறை தான் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்களது ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருங்கள், உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள், உங்களது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் அதாவது டயாப்பட்டீஸ், ப்ரீ டயாப்பட்டீஸ் ஆகியவை ஏற்படாமல் கவனித்துக் கொள்ளுங்கள்.

புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் இருந்தால் தவிர்த்திடுங்கள்,சத்தான காய்கறி,பழங்கள்,முழு தானியங்கள் ஆகியவற்றை அதிகமாக உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். உணவில் அதிகப்படியான உப்பு மற்றும் சர்க்கரை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். தொடர்ந்து உடல் எடையை அதிகரிக்காமலும் அதே போல ஒரேயடியாக குறைக்காமலும் நார்மலான ஒரு பேலன்ஸுடு வெயிட் தொடர வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது வாக்கிங் செல்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்

Related posts

பெண் குழந்தை வளர்ப்பில் தாயின் பங்களிப்பு அவசியம்

nathan

அடேங்கப்பா! இந்த மரத்தின் பட்டையில் இவ்வளவு மருத்துவம் இருக்கா? தெரிஞ்சிக்கங்க…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…35 வது வாரத்தில் குழந்தை பிறந்தால் ஆரோக்கியத்திற்கு ஆபத்து !!!

nathan

கட்டாயம் இதை படியுங்கள்..குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாத மருந்துகள்

nathan

குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி?

nathan

உருளைக்கிழங்கில் அப்படி என்ன இருக்கின்றது? அனைவருக்கும் பயனுள்ள தகவல் !

nathan

பயனுள்ள மூலிகை மருத்துவ குறிப்புகள்

nathan

ஆண்கள் 60 வயதிலும் உடலுறவில் முழு இன்பம் காண உதவும் இந்த மூலிகை பற்றி தெரியுமா?இத படிங்க

nathan

மனிதனின் ஒரு கால் மட்டும் உயரம் குறைந்து இருப்பதற்கு காரணம்

nathan