கூந்தலுக்கு வளர்ச்சியை தூண்டும் பழங்கள்

19-haircarebrideஉடலின் உள் உறுப்புகளுக்கு ஆரோக்கியம் தரும் பழங்கள், வெளிப் பூச்சிலும் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன. அதனால்தான் அழகு சாதனத் தயாரிப்புகளிலும் பழங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

கருப்பு திராட்சையைக் கசக்கி சாறு எடுத்துக் கொள்ளவும். அதை தலையில் தடவி நன்கு மசாஜ் செய்யவும். கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அதில் திராட்சை சாறு சேர்த்துக் குழைத்து, தலையில் பேக் மாதிரி போட்டு, சிறிது நேரம் கழித்து அலசவும். இது கூந்தலை மென்மையாக்கும்.

கமலா ஆரஞ்சுச் சாற்றில் பஞ்சை நனைத்து, வேர்க்கால்களில் படும்படி தடவி, மசாஜ் செய்து விட்டு, 10 நிமிடங்கள் கழித்துக் குளித்தால் பொடுகு போகும். மேலும் கூந்தல் நன்றாக வளரும். பழங்களை கூந்தலுக்கு உபயோகிக்கிற போது, கூடிய வரையில் ஷாம்பு உபயோகத்தைத் தவிர்ப்பது நல்லது.

50 கிராம் சீயக்காயையும் 10 கிராம் பூந்திக் கொட்டையையும் முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைக்கவும். அதன் இரண்டின் சாரமும் தண்ணீரில் இறங்கிவிடும். பழ மசாஜுக்கு பிறகு இந்தச் சாற்றை இன்ஸ்டன்ட் ஷாம்புவாக தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம்.

Leave a Reply