மருத்துவ குறிப்பு

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கர்பமானால் வரும் பிரச்சனைகளும், அதற்கான தீர்வுகளும்!

சர்க்கரை நோய் என்பது கர்பிணி பெண்களை தாக்கும் ஒரு ஆபத்தாகும். கர்ப்ப காலத்திலும் கூட பெண்களை சர்க்கரை நோய் தாக்கும். ஆனால் இந்த பகுதியில் சொல்ல இருப்பது கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் சர்க்கரை நோயை பற்றி கிடையாது. ஆனால் இது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெண் கர்ப்பமானால் என்னவாகும் என்பதை பற்றியது தான்..

சர்க்கரை நோய் என்பது வயதானவர்களுக்கு வரும் என்பதில்லை. இது யாருக்கு வேண்டுமானலும் வரலாம். இந்த சர்க்கரை நோய் உள்ள போது ஒரு பெண் கர்ப்பமானால் அவள் கர்ப்பகாலத்தில் சந்திக்கும் பிரச்சனைகள் என்னென்ன? அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பகுதியில் விரிவாக காணலாம்.

சர்க்கரை நோய்

கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் வருபவர்களுக்கு அல்லாமல், கர்ப்பத்திற்கு முன்னரே சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கருத்தரித்தலில் பிரச்சனைகள் அதிகமாக உள்ளன. 100 கருத்தரித்த பெண்களில் 5 முதல் 7 சதவீதம் பெண்களுக்கு இப்போது இந்த சர்க்கரை நோய் பிரச்சனைகள் உள்ளது.

கருக்கலைப்பு

சாதாரணமாக உள்ள பெண்களை காட்டிலும், கர்ப்பத்திற்கு முன்னர் சர்க்கரை நோய் உள்ள பெண்களுக்கு கருக்கலைப்பு உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

20 வயதிலேயே..

பொதுவாக முந்தைய காலங்களில் பெண்கள் தங்களது 40 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயதில் தான் இந்த சர்க்கரை நோய்க்கு ஆளாகி இருந்தனர். ஆனால் இன்றைய காலகட்டங்களில், அவர்கள் தங்களுடைய 20, 30 வயதுகளிலேயே கூட சர்க்கரை நோய்க்கு ஆளாகிவிடுகின்றனர்.

எப்போது?

இது போன்று கர்ப்பத்திற்கு முன்னர் இருந்தே சர்க்கரை நோய் இருக்கிறது என்றால், அவர்களுக்கு கர்ப்பத்தின் முதல் அல்லது இரண்டாவது பருவ காலத்தில் கருக்கலைப்பு உண்டாக வாய்ப்புகள் உள்ளது.

சிசேரியன்

மேலும், மருத்துவர்கள் சர்க்கரை நோயானது உங்களது பிரசவத்தை சிசேரியன் பிரசவமாக மாற்றவும் வாய்ப்புகள் உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கலோரிகள்…

அதே சமயம் சர்க்கரை நோயால் முன் கூட்டியே பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் அதிக கலோர்களை கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ள கூடாது. அதே போல கர்ப்பமாக உள்ள பெண்கள் தங்களது கருவின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு குறைந்த கலோரிகள் உள்ள உணவுகளையே எடுத்துக் கொள்ள வேண்டும்.

கலோரி உணவுகள்

மேலும் பல பெண்கள் அதிகமாக கலோரிகள் அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிடுகின்றனர். இப்படி உள்ளவர்கள் கலோரிகள் குறைந்த உணவை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இதுவே ஆரோக்கியமான பிரசவத்திற்கு வழிவகுக்கும்.

பழங்கள்..

பொதுவாக பழங்களில் குறைந்த கலோரியே காணப்படுகிறது. எனவே நீங்கள் சிலவகையான குறைந்த கலோரிகளை கொண்ட பழங்களை கர்ப்ப காலத்தில் சாப்பிடுவது மிகவும் நல்லது. இது உடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

அவகேடோ

அவகேடோவில் குழந்தையின் வளர்ச்சிக்கு வேண்டிய ஃபோலிக் ஆசிட் அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே இதனை கர்ப்பிணிகள் சாப்பிடுவது மிகவும் நல்லது.

மாம்பழம்

கோடைக்காலத்தில் கிடைக்கும் மாம்பழம் சுவையானது மட்டுமின்றி, கர்ப்பிணிகளுக்கு ஏற்ற பழமும் கூட. ஏனெனில் இவை செரிமான மண்டலத்தை சீராக இயங்கச் செய்வதுடன், இதில் வைட்டமின் ஏ மற்றும் சி வளமாக நிறைந்துள்ளது.

திராட்சை

நிறைய பெண்கள் திராட்சை சாப்பிடுவது நல்லதல்ல என்று நினைக்கின்றனர். ஆனால் திராட்சையில் உடலின் மெட்டபாலிச அளவை நிலையாக வைத்துக் கொள்ள உதவும் வைட்டமின் ஏ வளமாக நிறைந்துள்ளது. மேலும் இதில் ஃபோலேட், பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம் மற்றும் சோடியம் போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன.

சாத்துக்குடி

கர்ப்ப காலத்தில் ஏற்படும் காலை சோர்வு, குமட்டல் மற்றும் பல பிரச்சனைகளை போக்க சாத்துக்குடி மிகவும் சிறந்தது. மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், இது குழந்தைக்கும் மிகவும் நல்லது.

எலுமிச்சை

எலுமிச்சையும் சாத்துக்குடியைப் போன்றது தான். கர்ப்பிணிகள் இதனை அன்றாடம் ஜூஸ் போட்டு குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு, செரிமான பிரச்சனையும் வராமல் தடுக்கலாம்.

வாழைப்பழம்

கர்ப்ப காலத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் மலச்சிக்கல். இதற்கு தினமும் ஒரு வாழைப்பழத்தை உட்கொண்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையைத் தடுக்கலாம்.

பெர்ரிப் பழங்கள்

பெர்ரிப் பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடண்ட் அதிக அளவில் நிறைந்திருப்பதால், இது சூப்பர் உணவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. மேலும் இதனை எவ்வித பயமும் இல்லாமல் கர்ப்பிணிகள் தங்களின் டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆரஞ்சு

மழைக்காலத்தில் அதிகம் கிடைக்கும் ஆரஞ்சுப் பழம் கூட கர்ப்பிணிகளுக்கு ஏற்றது. இந்த சிட்ரஸ் பழத்திலும் வைட்டமின்கள் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது.

ஆப்பிள்

ஆப்பிள் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை. எவ்வித பயமும் இல்லாமல் கர்ப்பிணிகள் இதனை உட்கொள்ளலாம். மேலும் இந்த பழமானது குளிர்காலத்தில் விலைக் குறைவில் கிடைப்பதால், இதனை தவறாமல் அன்றாடம் சாப்பிட்டு வந்தால், குழந்தை மட்டுமின்றி, தாயும் ஆரோக்கியமாக இருக்கலாம்.

லிச்சி

கோடையில் அதிகம் கிடைக்கும் இந்த பழம் கூட கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் சிறப்பான பழங்களில் ஒன்றாகும்.

Related posts

ஹார்ட் அட்டாக் vs கார்டியாக் அரெஸ்ட்

nathan

பித்தத்தை சமன்படுத்தும் நெல்லிக்காய்

nathan

அம்மா என்பவள் யார்?

nathan