Other News

வீட்டு கேஸ் சிலிண்டரை பாதுகாப்பாக கையாள்வது எப்படி? தெரிந்துகொள்வோமா?

ஒவ்வொரு வீட்டிலும் சமையல் எரிவாயு இல்லாத வீடே இல்லை. ஒரு பக்கம் கேஸ் சிலிண்டரின் எரிவாயு விலை அதிகரித்துக்கொண்டே செல்ல மறுபக்கம் அதை கையாளும் முறையும் பாதுகாப்பும் அவசியமானதாகும்.

கேஸ் சிலிண்டரை எப்படி உபயோகிப்பது என்பது பற்றி ஒவ்வொரு குடும்பத்தினரும் அறிந்திருக்க வேண்டும். விலை மதிப்பற்ற மனித உயிர் இழப்பை தவிர்க்க பாதுகாப்பான முறையில் சமையல் அறையை பெண்கள் கையாள வேண்டும்.

கடந்த நாளில், சேலம் கருங்கல்பட்டியில் கேஸ் சிலிண்டர் வெடித்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையே ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், கேஸ் சிலிண்டரை எப்படி பாதுகாப்பாக கையாள்வது என்பதை பற்றி பார்ப்போம்.

ஒவ்வொரு வீட்டிலும் சமையல் எரிவாயு இல்லாத வீடே இல்லை. ஒரு பக்கம் கேஸ் சிலிண்டரின் எரிவாயு விலை அதிகரித்துக்கொண்டே செல்ல மறுபக்கம் அதை கையாளும் முறையும் பாதுகாப்பும் அவசியமானதாகும்.

கேஸ் சிலிண்டரை முதலில் எப்போதும் தரை மட்டத்திலிருந்து ஏறத்தாழ இரண்டடி உயரத்திலும், சுவரை ஒட்டியும் இருக்க வேண்டும். சிலிண்டரை எப்போதும் பக்கவாட்டில் படுக்க வைக்காமல் நிற்க வைக்க உபயோகிக்க வேண்டும்.

அடுத்ததாக, ஐ.எஸ்.ஐ முத்திரை உள்ள அடுப்பு, ரெகுலேட்டர் மற்றும் இரப்பர் குழாய்களையும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அடுப்பை அணைக்கும்போது முதலில் ரெகுலேட்டர் வால்வை மூடிவீட்டுப் பிறகு அடுப்பின் வால்வை மூடுவது நல்லது.

கேஸ் அடுப்பு எரிந்து கொண்டிருக்கும்போது கவனக் குறைவாக இருக்கக்கூடாது. கவனிக்காமல் இருந்தால் பொங்கி வழியும் பால் போன்ற பொருள்கள், அடுப்பை அனைத்து வெளிவரும் எரிவாயுவினால் வாயுக் கசிவு ஏற்பட்டுத் தீ விபத்து ஏற்படலாம்.

கேஸ் ஸ்டவ் வைத்திருப்பவர்கள் வீட்டில் உள்ளக் குழந்தைகள் கேஸ் குழாயைத் திருப்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களிடம் இருந்து கைக்கு எட்டாதவாறு வைத்திருக்க வேண்டும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”] அடுப்பின் வால்வையும், சிலிண்டர் வால்வையும் மூடிய பிறகு சிலிண்டரை மாற்ற வேண்டும். சுய ரிப்பேர் வேலை ஆபத்தானது. யாரையும் கேஸ் உபகரணங்களைப் பழுது பார்க்க அனுமதிக்கக் கூடாது.
விற்பனையாளர்களிடமே இந்த பொறுப்பை விட்டுவிட வேண்டும். முக்கியமாக மாற்று சிலிண்டர் இணைக்கும்போது பூஜை விளக்குகள், ஊதுவத்தி அனைத்தையும் அனைத்து விட வேண்டும். மின்சார இணைப்புகள் இயங்க கூடாது. அடிக்கடி, ரப்பர் குழாயில் வெடிப்பு, துளை இருக்கிறதா என்பதை அடிக்கடி பரிசோதித்துப் பார்க்க வேண்டும்.
கேஸ் அடுப்பின் பர்னரை 10 நிமிடம் மண்ணெண்ணெய் அல்லது சலவை சோடா சேர்ந்த வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து பழைய டூத் பிரஷ் மூலம் சுத்தம் செய்து உலர செய்த பிறகே பொருத்த வேண்டும்.

மேலும், கேஸ் சிலிண்டரிலோ, ரப்பர் குழாயிலோ கசிவு இருப்பதாக சந்தேகம் தோன்றினால் உடனடியாகக் கதவுகள், ஜன்னல்கள் அனைத்தையும் திறந்துவிட வேண்டும்.

எரிந்து கொண்டிருக்கும் அடுப்பு, விளக்கு முதலியவற்றை அணைக்க வேண்டும். சிலிண்டருடன் இணைந்திருக்கும் சேப்பு கேப்பினால் சிலிண்டர் வால்வை அழுத்தி மூட வேண்டும். இது வால்விலிருந்து கேஸ் கசிவை தடுக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button