எடை குறைய

வீட்டில் இருந்தே உடல் எடை குறைக்க சில எளிய வழிகள்

உடல் எடையை குறைப்பதற்கு எவ்வளவுதான் முயற்சித்தாலும் சிலருக்கு எடை மட்டும் குறையாது. அதிலும் சிலர் எடை குறைக்க வேண்டுமென்று ஜிம்மிற்க்குச் செல்வார்கள். ஆனால் அதனை எடை குறைக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் ஒரு வாரம் மட்டும்தான் செல்வார்கள்.

அதன் பின் அதுவும் இல்லை. சிலரோ தினமும் காலையில் எழுந்ததும் வாக்கிங், ஜாக்கிங் போன்றவற்றையாவது தொடர்ந்து செய்யலாம் என்று முடிவெடுப்பார்கள். அதுவும் தோல்வியிலேயே முடியும்.

அத்தகையவர்களுக்காக உடல் எடையை எளிதில் அன்றாட செயல்களின் மூலம் எப்படி குறைப்பது என்று எளிமையான சில வழிகள்

அனைத்து வீடுகளிலும், அலுவலகத்திலும் மாடிகள் இருக்கும். அப்போது மேலே செல்வதற்கு, லிப்ட்டுகளை பயன்படுத்தாமல், மாடிப்படிக்கட்டுகளின் மூலம் செல்லலாம். இதுவும் உடல் எடையைக் குறைப்பதற்கான ஒரு வழியாகும்.

வீட்டிலோ அல்லது வேறு எங்கோ, கீழே உட்கார்ந்தால் எழும்போது, கைகளை கீழே ஊன்றியோ அல்லது வேறு எங்காவது பிடித்துக் கொண்டோ எழ வேண்டாம். இவ்வாறு எழுவதும் ஒருவிதமான உடற்பயிற்சிதான்.

தொப்பையைக் குறைப்பதற்கு ஒரு சிறந்த உடற்பயிற்சி என்றால், தரையில் படுத்துககொண்டு டி.வி பார்க்கும்போது, கைகளை தலைக்கு பின்னால் பிடித்துக் கொண்டு, மெதுவாக முன்னே எழ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால், வயிற்றில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரையும், உடல் எடையும் குறையும்.

தரையில் குப்புற படுத்துக் கொண்டு, கைகளை தரையில் பதித்து, உடலை மேலே தூக்கிக் கொண்டு, பின் மெதுவாக மூக்கை தரையில் தொட்டு, பின் மீண்டும் உடலே மேலே தூக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், கைகள் மற்றும் மார்புகள் நன்கு வலுவோடு இருக்கும்.

ஜாக்கிங் என்று சொன்னதும் வெளியேதான் செல்ல வேண்டும் அல்லது உடற்பயிற்சி இயந்திரங்கள் மூலம்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. வீட்டில் டிவி பார்த்துக் கொண்டே, ஒரே இடத்தில் நின்று கொண்டே ஜாக்கிங் செய்யலாம்.

உடல் எடையைக் குறைக்க சிறந்த வழியென்றால் அது நடனம்தான். ஆகவே வீட்டில் சாதாரணமாக வேலையின்றி இருக்கும்போது, நல்ல குத்துப்பாட்டை போட்டு, நடனம் ஆடலாம்.
சிறுவயதில்தான் குதிக்கும் பயிற்சியை மேற்கொண்டிருப்போம். ஆனால் அத்தகைய குதிக்கும் பயிற்சியை செய்தாலும், உடலில் ஆங்காங்கு ஒட்டியிருக்கும் தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து, எடையை குறைக்கும்

இதுவும் ஒரு சிறுவயது விளையாட்டுதான். இதற்கு வெறும் கயிறு மட்டும் போதுமானது. ஆகவே வீட்டில் ஸ்கிப்பிங் கயிறு இருந்தால், அதனை நேரம் கிடைக்கும் போது, தோட்டம் அல்லது மாடியில் விளையாடலாம்.

இவ்வாறு செய்து வந்தால் நாம் வீட்டில் இருந்தே உடல் எடை குறைத்து உடலை ஆரோக்கியமாகவும் சிலிம் பியூட்டியாகவும் வைத்த கொள்ளலாம்.
1442299906 267

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button