கர்ப்பிணி பெண்களுக்கு

மசக்கையை சமாளிக்க முடியாமல் அவதியா?

கர்ப்பம் தரித்த பெண்களுக்கு முதல் மூன்று மாதங்களுக்கு மசக்கை ஏற்படுவது மிகவும் சாதாரண ஒன்று. மசக்கையின் ஆரம்பமும், எத்தனை நாட்கள் தொடரும் என்பதில் மட்டும் சிறிய வேறுபாடுகள் இருக்கும்.

கர்ப்பம் தரித்ததும் பெண்ணின் தேகம் ஹெச்.சி.ஜி என்ற ஹார்மோனை சுரக்க ஆரம்பிக்கிறது. இரட்டை குழந்தைகள் என்றால் ஹெச்.சி.ஜி சுரப்பு அதிகமாக இருக்கும். மசக்கையை முழுவதும் தவிர்ப்பது என்பது முடியாத காரியம். ஆனால் குறைக்க வழிகள் இருக்கிறது. வயிறு நிறைய சாப்பிட்டு இருந்தாலோ அல்லது காலியான வயிற்றோடு இருந்தாலோ குமட்டல் அதிகமிருக்கும்.

மூன்று வேளைச் சாப்பாட்டிற்குப் பதில் கொஞ்சம் கொஞ்சமாக அடிக்கடி உணவருந்துவது நல்லது. திரவ ஆகாரம் அதிகமாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் ஓரே நேரத்தில் அனைத்தையும் அருந்தக்கூடாது. இஞ்சி குமட்டலை தவிர்க்க வல்லது. நீங்கள் சாப்பிடும் உணவில் காரம், கொழுப்பு சத்துகள் கொண்ட எண்ணெய் பழகாரங்கள் போன்ற பதார்த்தத்தை குறைத்துக்கொள்ளுங்கள்.

ஏனெனில் இவை குமட்டல், வாந்நியை ஏற்படுத்தக்கூடியது. குறிப்பிட்ட சில உணவுகளின் வாசமே மசக்கை பெண்களுக்கு குமட்டலை ஏற்படுத்தும். மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் சில வைட்டமின் மாத்திரைகளை காலையில் உட்கொள்கிற போது சிலருக்கு குமட்டல் இன்னும் மோசமாகலாம். இவர்கள் மாத்திரையை எடுத்துக்கொண்டதும் சாக்லெட் சாப்பிடலாம். இதனால் குமட்டல் குறைய வாய்ப்புண்டு.

வயிறு நிறைய தண்ணீர் குடிக்கக்கூடாது. போதுமான அளவு மட்டுமே தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். சாப்பாட்டிற்கு அரை மணி நேரத்திற்கு முன் தண்ணீர் குடியுங்கள். நாள் முழுவதும் திரவ ஆகாரம் எடுத்துக்கொள்ளுங்கள். சாப்பாட்டின் போது தண்ணீர் குடிக்க வேண்டாம். தர்பூசணியும் குமட்டலுக்கு நிவாரணம் தரும். சாப்பிட்டதும் படுக்ககூடாது.

குமட்டலை காரணம் காட்டி உணவை தவிர்க்காதீர்கள். அளவுக்கு அதிகமாக குமட்டல், வாந்தி இருந்தால் வாந்தியோடு வலி, காய்ச்சல் வந்தால், மூன்று மாதங்களைத் தாண்டியும் மசக்கை அறிகுறிகள் தொடர்ந்து கொண்டிருந்தால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். மசக்கை கர்ப்பிணி பெண்களுக்கோ, வயிற்றில் வளரும் சிசுவிற்கோ தீங்கு விளைவிப்பதில்லை.

ஆனால் வாந்தி அதிகம் இருந்தால் உண்ணும் உணவை தங்கவிடாமல் இருக்கலாம். இந்த நிலை கடுமையாக இருந்தால் ஊட்டச்சத்து கிடைப்பது குறைந்து போய் குழந்தைக்கும், தாய்க்கும் பாதிப்பு ஏற்படலாம். இந்த நிலையில் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.
0abd133d d94d 4f63 8b6e cd5183381b9b S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button