14 1500040485 5
ஆரோக்கியம் குறிப்புகள்

காதில் நுழைந்த பூச்சியை வெளியில் எடுப்பது எப்படி?

காதினுள் உயிருள்ள பூச்சி சென்றுவிட்டால், முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். உடனடியாக காதினுள் எண்ணெயோ, உப்புக் கரைசலையோ காது நிரம்ப ஊற்ற வேண்டும். காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப்பட்டு உடனடியாக இறந்து விடும் அல்லது பூச்சி மிதந்து வெளியே வந்து விடும்.

தண்ணீரை மட்டும் காதினுள் ஊற்றுவது நல்லதல்ல. ஏனெனில் தண்ணீரிலும் பூச்சி வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு உண்டு. ஆகவே பூச்சி அதிகத் துடிப்போடு கடிக்க ஆரம்பிக்கும். பூச்சி வெளியே தெரிந்தாலும், பூச்சியின் காலையோ உடம்பையோ பிடித்து இழுக்கக் கூடாது. ஏனென்றால் கடித்துக் கொண்டிருக்கும் பூச்சி அதிவேகமாகக் கடித்துக் கொண்டிருக்குமே தவிர விடாது.

இன்னும் வேகமாக உடம்பைப் பிடித்து இழுத்தால், பூச்சியின் உடம்புதான் தலையிலிருந்து துண்டிக்கப்பட்டு வெளியே வரும். அல்லது பூச்சி கடித்திருக்கும் செவிப்பறையும் கிழிந்து பூச்சியின் வாயோடு வெளியே வந்து விடும். ஆகவேதான் பூச்சியை முதலில் சாகடித்து விட வேண்டும். பிறகு அப்புறப்படுத்த வேண்டும். சிறு குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் இந்தப் பிரச்சினை ஏற்படுவதுண்டு. ஜாக்கிரதையாகக் கையாளாவிட்டல் ஆபரேஷன் வரை போய் முடியும். எனவே மேற்சொன்னவாறு செயல்படவும்.14 1500040485 5

Related posts

ராசிப்படி இந்த ‘ஒரு பொருள்’ உங்க கூடவே இருந்தால், அதிர்ஷ்டம் எப்பவுமே உங்க கூட இருக்குமாம்…

nathan

பீர்…! இதுக்கு கூட பயன்படுத்தலாம், யாரும் திட்டமாட்டாங்க!!!

nathan

வீடு முழுக்க கொசு தொல்லையா? விரட்டி அடிக்க இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

தொப்பையை குறைக்க வேண்டுமா?இந்த 4 விஷயத்தை கவனத்தில் கொள்ளவும்

nathan

டான்சில்ஸ் பாதிப்பு குழந்தைகளுக்கு வரும்..

nathan

இந்த 5 ராசிக்காரங்க இயற்கையாவே கோழையா இருப்பாங்களாம்…

nathan

தாய்ப்பாலை சேமித்து வைத்து, தேவையான நேரத்தில் குழந்தைக்குப் புகட்டலாம். தாய்ப்பாலை எப்படி சேமிப்பது?

nathan

தெரிந்துகொள்வோமா? பனம்பழத்தில் பல் துலக்கலாமா?…

nathan

அறுவை சிகிச்சையால் ஏற்படும் தழும்பை இயற்கையாக மறைப்பது எப்படி?..!!தெரிஞ்சிக்கங்க…

nathan