29.4 C
Chennai
Saturday, Jul 27, 2024
honey 1296
ஆரோக்கிய உணவு

தேனுடன் கலந்து சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

ஒருவரின் உடல்நலம் என்பது அவரது உணவைப் பொறுத்தது. புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளிட்ட பிற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் நம் உடலுக்கு பல நன்மைகளைத் தருகின்றன. அதே போன்று, பொதுவாக நன்மை பயக்கும் சில உணவு பொருட்களை, வேறு சில உணவு பொருட்களுடன் சேர்த்து உண்ணும் போது, அவை உடல் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கலாம்.

அவை இரண்டும் தனித்தனியே நல்ல உணவுகள் என்றாலும், அவற்றை சேர்த்து சாப்பிடும் போது, அது ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடும் அந்த வகையில் இன்று, தேனுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத பொருட்கள் என்ன என்பதைப் பார்க்கலாம்.

தேநீர் அல்லது காபியுடன் ஒருபோது எடுத்துக் கொள்ளக் கூடாது

தேநீர், அதாவது டீ அல்லது காபியுடன் தேனை உட்கொண்டால், அது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். தேநீர் அல்லது காபியுடன் தேனை சாப்பிடுவது உடல் சூடு அதிகரிக்கும். இதனால் மன அழுத்தம் மற்றும் பதற்றம் போன்றவை ஏற்படவும் வழிவகுக்கும்

முள்ளங்கியை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது, தேன் சாப்பிடக் கூடாது

முள்ளங்கியுடன் கூட தேன் உட்கொள்ளக்கூடாது, ஏனென்றால் தேனையும் முள்ளங்கியும் ஒன்றாக உட்கொண்டால், உடலில் நச்சுகள் உருவாகின்றன. இந்த நச்சுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே, இந்த இரண்டிற்கும் இடையில் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு மணிநேர இடைவெளி இருக்க வேண்டும்.

பாலுடன் தேன்

பாலும் தேனும் என்பது இணைபிரியாத சொற்கள் தான். ஆனால், இவற்றை சம அளவில் கலந்து சாப்பிடுவது உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

உடல் சூட்டை கிளப்பும் உணவுகளுடன் தேனை சாப்பிடுவதை தவிர்க்கவும்

சூடை கிளப்பும் உணவுகளுடன் உட்கொண்டால், உங்களுக்கு வயிறு தொந்திரவு ஏற்படலாம். இது தவிர, உங்களுக்கு வேறு விதமான வயிற்று பிரச்சினைகளும் இருக்கலாம். எனவே, தேனை சூட்டை கிளப்பும் பொருட்களுடன் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

Related posts

வீட்டு/சமையல் குறிப்புகள்

nathan

நீரிழிவு நோயாளிகள் ஒரு நாளைக்கு எத்தனை பேரிச்சை பழம் சாப்பிடலாம்?

nathan

சூப்பர் டிப்ஸ் அதிக பயன்களை கொண்ட திப்பிலி எதற்கு பயன்படுகிறது தெரியுமா….?

nathan

சுவையான சத்தான ஓட்ஸ் சூப்

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…ஆரோக்கியமான முறையில் உடற்கட்டை மேம்படுத்துவது எப்படி?

nathan

ஆய்வில் தகவல்! கிரீன் டீயில் கொரோனாவை எதிர்க்கும் மருத்துவ குணங்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா தலைசுற்றலை நீக்கும் ஏலக்காய்…!!!!எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?

nathan

சோள ரொட்டி

nathan

தெரிஞ்சிக்கங்க… குழந்தைகளுக்கு பிஸ்கட்டுகளை கொடுப்பது நல்லதா கெட்டதா ?

nathan