அசைவ வகைகள்

முட்டை சீஸ் ஆம்லெட்

தேவையான பொருள்கள் :

முட்டை – 3

துருவிய சீஸ் – 2 மேஜைக்கரண்டி

மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி

குடமிளகாய் – 2 மேஜைக்கரண்டி

தக்காளி – 2 மேஜைக்கரண்டி

பெரிய வெங்காயம் – 2 மேஜைக்கரண்டி

எண்ணெய் – 3 மேஜைக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* மூன்று முட்டைகளையும் உடைத்து ஒரு பௌலில் ஊற்றி அதனுடன் மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு நுரைவரும்படி கலக்கி வைக்கவும்.

* அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், குடமிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

* பாதி வதங்கியதும் அதன் மேல் கலக்கி வைத்துள்ள முட்டையை ஊற்றவும்.

அடுப்பை சிம்மில் வைத்து மூடி வைக்கவும். இந்த ஆம்லெட்டை திருப்பி போட்டு வேக வைக்க போவதில்லை. அதனால் மூடி போட்டு வேக விடவும்.

* நடுவில் வேகாமல் இருந்தால் கடாயை எடுத்து ஒரு சுற்று சுற்றவும். இப்படி செய்வதால் நடுவில் வேகாமல் இருக்கும் முட்டை கடாயில் ஓரமாக வந்து சீக்கிரமாக வெந்து விடும்.

* கடைசியாக சீஸை முட்டையில் மேல் பரவலாக சுற்றி போடவும். ஒரு நிமிடம் கழித்து சீஸ் உருகியதும் அடுப்பை அணைக்கவும்.

* பிறகு பாதியாக மடித்து எடுத்து தட்டில் வைக்கவும். சுவையான முட்டை சீஸ் ஆம்லெட் ரெடி. கட் செய்து பரிமாறவும். பிரெட்டுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

3bc10307 d18d 40f2 887a beef78bbec1e S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button