நண்டு நாவிற்கு விருந்து கொடுக்கும் வித்தியாசமான சுவையை கொண்டதோடு பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது.
இரத்த சோகை
நண்டில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திற்கு தேவையான வைட்டமின் பி12 வளமாக நிறைந்துள்ளது. எனவே நண்டு சாப்பிட்டு வந்தால், இரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்கலாம்.
முகப்பருக்கள்
பருக்கள் இருந்தால், நண்டுகளை சாப்பிடுங்கள். ஏனெனில் நண்டில் உள்ள ஜிங்க் எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தும். இதனால் முகப்பருக்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.
இதயம் பலமாக
நண்டில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளது. இவை இரத்தத்தில் உள்ள கொழுப்புக்களின் அளவைக் குறைத்து, இதய நோய்களைத் தடுப்பதோடு இதயத்தை பலமாக்கும்.
இரத்த அழுத்தம்
மக்னீசியம் நரம்பு மற்றும் தசைகளின் இயக்கத்திற்கு மிகவும் முக்கியமானது. இத்தகையது நண்டில் உள்ளது. இதனால் நரம்புகள் தளர்ந்து, இரத்த அழுத்தத்தின் அளவு சீராக இருக்கும்.