ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிஞ்சிக்கங்க…அடிக்கடி டர்ர்ர்ர்ர்… கட்டுப்படுத்த சில யோசனைகள்!

கும்பலாக ஆட்கள் நிறைந்துள்ள இடத்தில் பலமான சத்தத்துடன் வாயுவை வெளியேற்றுவது தர்மசங்கடமாக தானே இருக்கும். இந்த சூழ்நிலை யாருக்கு வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் ஏற்படலாம். இது முக்கியமான தொழில் சந்திப்பிலும் நடக்கலாம் அல்லது காதல் பொங்கும் டேடிங்கிலும் நடக்கலாம்.

பொது இடத்தில் வாயுவை வெளியேற்றினால் அது மதிப்பு குறைவாக கருதப்படும். அப்படி வாயுவை வெளியேற்றிய பின் அந்த வாடை போக அந்நேரத்தில் அருகில் இருப்பவர்கள் நற்பதமான காற்றை தேடி அவர்கள் முகத்தை சுருக்கினால், அது இன்னமும் தர்மசங்கடமாக இருக்கும்.

இதுப்போன்று வேறு ஏதாவது படிக்க: வாயுத் தொல்லை அதிகமா இருக்கா? ஈஸியாக தடுக்கலாம்!!!

ஒழுங்கில்லா உணவு செரிமானமின்மை, ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் மற்றும் நேரத்திற்கு உண்ணாமல் இருப்பது போன்றவைகள் தான் வாயு விட காரணமாக அமைகிறது. அது தப்பாக இருந்தாலும் கூட அதை யாரும் வேண்டுமென்றே செய்வதில்லை.

இயற்கையான அதனை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான ஒன்றாகும். ஆனால் முடிந்த வரை வாயு வெளியேற்றுவதை தவிர்க்க சில வழிகள் உள்ளது. அதில் சிலவற்றை கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்:

இனிப்பு பண்டங்கள்

தவறான நேரத்தில் கெட்ட வாடை அடிக்கும் வாயு வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பது நாம் உண்ணும் இனிப்பு பண்டங்களே. பலரின் முன்னிலையில் பலத்த சத்தத்துடன் வாயு விடுவதை தவிர்க்க இனிப்பு உட்கொள்ளும் அளவை குறைத்துக் கொள்ளுங்கள். சர்க்கரையை பாக்டீரியாக்கள் எளிதில் உடைத்து, கெட்ட வாடை அடிக்கும் வாயுவை வெளியேற்றும். அதனால் வாயு விடுவதை தவிர்க்க இனிப்பு பலகாரங்கள் உண்ணுவதை குறைத்து கொள்வது ஒரு வழியாகும். நாம் உண்ணும் பல உணவுகளில் சர்க்கரை அடங்கியுள்ளது. அதனால் உண்ணும் போது கவனத்துடன் இருங்கள். முக்கியமான பொது கூட்டங்களுக்கு செல்லும் முன் இனிப்புகளை உண்ணாதீர்கள்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

கார்போஹைட்ரேட்ஸ்

பாக்டீரியாக்களால் செரிமானம் ஆகும் போது, கார்போஹைட்ரேட்ஸில் இருந்து கார்பன் டைஆக்சைட் உருவாகும். இந்த வாய்வு மிகுந்த வாடையுடன் இருக்கும். அதே போல் அது நம் உடலை விட்டு வெளியேறும் போது அதிக சத்தத்துடன் வெளி வரும். இதனை தவிர்க்க கார்போஹைட்ரேட்ஸை தவிர்க்கவும். வாயு ஏற்பட முக்கியமான கார்போஹைட்ரேட் மூலமாக விளங்குவது சோடா. அதனால் பொது இடங்களுக்கு செல்வதற்கு முன், சோடா மற்றும் சோடா அடங்கியுள்ள பானங்களை தவிர்க்கவும்.

ஸ்டார்ச்

உருளைக்கிழங்கு, தானியங்கள் என பல வகையான உணவுகளில் ஸ்டார்ச் அடங்கியுள்ளது. இவைகளை உட்கொள்ளும் போது அதிக அளவில் வாயு உருவாகி அதிகமாக வாயு விடுவீர்கள். அதனால் பொது இடங்களில் பல பேருக்கு மத்தியில் கெட்ட வாடையுடன் வாயு விடுவதை தவிர்க்க அங்கே செல்வதற்கு முன் இவ்வகை உணவுகளை தவிர்க்கவும். வயிற்றில் வாயு உருவாக, அதற்கான குணங்கள் அதிகளவில் அரிசி சாதத்தில் தான் உள்ளது. அதனால் சில சந்தர்ப்பங்களில் அதை தவிர்ப்பதும் நல்லது.

புகைப்பிடித்தல்

வாயு வெளியேறுவதற்கு புகைப்பிடிக்கும் பழக்கமும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. புகைப்பிடிப்பதால், வாயு வெளியேறுவதை தவிர, எண்ணிலடங்கா உடல்நல கோளாறுகளும் ஏற்படும். புகைப்பிடிப்பதால் உங்கள் உடலில் தேவையற்ற வாயுக்கள் சேர்ந்து கொண்டே போகும். இது வாயுவாக வெளியேறும். அதனால் முடிந்த வரையில் புகைப்பிடிப்பதை தவிர்க்கவும்.

வயிறு உப்புச்சத்தை தவிர்க்கும் மருந்துகள்

வயிறு உப்புச்சத்தை தவிர்க்கும் சிரப், மாத்திரைகள், பவுடர்கள் என பல வகையில் சந்தையில் கிடைக்கிறது. வயிற்றில் ஏற்பட்டுள்ள அனைத்து வாயுக்களையும் நீக்கி வயிற்றை சுத்தமாக வைக்க உதவும். இவ்வகை மருந்துகள் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். உங்களுக்கு வாய்வு மற்றும் வயிறூதுதல் பிரச்சனை அடிக்கடி ஏற்பட்டால், இவ்வகை மருந்துகளை எப்போதும் கைகளில் வைத்துக் கொள்ளுங்கள்.

மேற்கூறிய டிப்ஸ் எதையாவது அல்லது அனைத்தையுமே பின்பற்றி பொது இடங்களில் வாயு விடுவதை தவிர்த்திடுங்கள். பொது இடத்தில் வாயு விட்டால் அசிங்கமாகத் தானே இருக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button