ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…நல்லெண்ணெய் உபயோகித்தால் உடலுக்கு இவ்வளவு நன்மை கிடைக்குமா?

எள் என்பது உலகின் பல்வேறு நாடுகளில் அதிகம் விளைவிக்கப்படும் ஒரு தானிய வகையாகும். பல ஊட்டச்சத்துக்கள் கொண்ட எள்ளை பயன்படுத்தி பல உணவு வகைகள் தயார் செய்யபடுகின்றன. அந்த எள்ளில் இருந்து தான் நல்லெண்ணெய் தயாரிக்கபடுகிறது. உலகெங்கிலும் இருக்கின்ற மக்கள் தங்களின் அன்றாட உணவு தயாரிப்பில் நல்லெண்ணெய்யை பயன்படுத்துகின்றனர்.

நல்லெண்ணெய் உணவில் அதிகம் சேர்த்து கொண்டால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். இந்த நல்லெண்ணெயில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. நல்லெண்ணெயில் முட்டையில் இருக்கும் புரோட்டீனுக்கு சமமான அளவில் புரோட்டீன் நிறைந்துள்ளது. எனவே உணவில் மற்ற எண்ணெய்களை சேர்த்துக் கொள்வதற்கு பதிலாக, நல்லெண்ணெய்யை சேர்த்தால், இன்னும் பல நன்மைகளைப் பெறலாம்.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

தென்னிந்தியாவில் இன்றும் பெரும்பாலும் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய் இதுதான். தற்போதும் பல்வேறு கிராமப்புறங்களில் நல்லெண்ணையில் சமைக்கும் முறை பழக்கத்தில் உள்ளது. அதில் பல்வேறு மருத்துவக் குணங்கள் உள்ளன.

இதய ஆரோக்கியம்

நல்லெண்ணெயில் சீசேமோல் (sesamol) என்னும் வேதி பொருள் உள்ளது. எனவே இதை உணவில் அதிகம் சேர்க்கும் போது, அது இதயத்திற்கு சரியான பாதுகாப்பு அளித்து, இதய நோய் வராமல் தடுக்கும்.

வலுவான எலும்புகள் நல்லெண்ணெயில் ஜிங்க் என்னும் கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது எலும்புகளில் கால்சியம் அதிகம் இருப்பதை உறுதி செய்யும். எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமென்றால் நல்லெண்ணெயையும் சாப்பிடுவது நல்லது.

நீரிழிவு

நல்லெண்ணெயில் உள்ள அதிகப்படியான மக்னீசியமானது – இன்சுலின் சுரப்பை தடுக்கும் பொருட்களை எதிர்த்து போராடும். இதனால் நீரிழிவு நோய் வருவது தடுக்கப்படும்.

சுத்தமான பற்கள்

தினமும் காலையில் எழுந்து நல்லெண்ணெயால் வாயை கொப்பளித்தால் (Oil Pulling), பற்களில் தங்கியிருக்கும் சொத்தைகள் நீங்குவதோடு, பற்கள் நன்கு பளிச்சென்று இருப்பதோடு ஆரோக்கியமாகவும் இருக்கும்.

மலச்சிக்கல் / செரிமான பிரச்சனை

மற்ற எண்ணெய் வகைகளை விட, நல்லெண்ணெய் மிகவும் லேசானது. இதனை உணவில் சேர்த்து சாப்பிடும் போது, குடலியக்கமானது சீராக நடைபெற்று செரிமானப் பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.

பளபளப்பான சருமம்

நல்லெண்ணெயில் உள்ள ஜிங்க் சத்தால், சருமத்தின் நெகிழ்வுத் தன்மை அதிகரித்து, சருமத்தில் கொலாஜெனின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். நல்லெண்ணெய் எளிதாக சருமத்துக்குள் ஊடுருவக் கூடியது. அதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும், பளபளப்பாகவும் இருக்கும்.

கெட்ட கொழுப்பைக் கரைக்கும்

நல்லெண்ணெயில் லெசித்தின் என்னும் பொருளும், லினோலிக் என்னும் அமிலமும் உள்ளது. இவை இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கெட்ட கொழுப்பைக் கரைத்து (LDL), நல்ல கொழுப்பின் (HDL)அளவை அதிகரிக்கும்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button