ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிஞ்சிக்கங்க…சிறந்த தொழில் அதிபராக பிரகாசிப்பது எப்படி?

அறிவியல் வளர்ச்சி இளைஞர்களை சோம்பேறியாக மாற்றிவிட்டதோ என்று எண்ண தோன்றுகிறது. விவசாய பணிகள், தொழிற்சாலைகளில் வியர்வை சிந்தி உழைக்கும் எண்ணம் மாறி, கம்ப்யூட்டர் முன்பு தவம் கிடக்கும் பணிகளை தான் இன்றைய இளைஞர்கள் பலரும் விரும்புகின்றனர். தொழில் தொடங்கி 10 பேருக்கு வேலை கொடுக்கும் வாய்ப்பு இருந்தாலும் ரிஸ்க் எடுக்க விரும்பாமல், பத்தோடு, பதினொன்றாக கிடைக்கும் பணிக்கு விண்ணப்பிக்கிறார்கள்.

எல்லோரும் அலுவலக பணியை எதிர்நோக்கி கொண்டிருப் பதால் தான் சாதாரண வேலைக்கு கூட அதிக போட்டி நிலவுகிறது. இதனால் தான் வேலை கிடைப்பது குதிரை கொம்பாகி விட்டது. கொஞ்சம் மாற்று வழியை பற்றியோசித்தால் வாழ்க்கையில் ஜெயிக்க ஆயிரம் வாய்ப்புகள் உங்கள் முன்பு இருப்பது புரியும். ஆம், சுய தொழில் தொடங்கியும் சாதிக்கலாம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் தொழிலில் ஜெயிக்க நாணயம் மட்டும் இருந்தால் போதாது. தொழில் முன்னேற்றத்தில் அக்கறையும், சிறந்த நிர்வாகத்திறமையும் அவசியம் ஆகும். இதற்காக எம்.பி.ஏ. படித்து விட்டு தான் தொழில் தொடங்க வேண்டும் என்பதில்லை.

ஆரம்பத்தில் சிறிய முதலீட்டுடன் தொடங்கிய பின்பு அந்த தொழிலில் உள்ள நெளிவு, சுழிவுகளை நன்கறிந்து தொழில் சார்ந்த அனுபவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு கொஞ்ச காலம் பிடிக்கும். இந்த முதற்கட்ட பரீட்சையில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டு தொழிலில் கைப்பிடித்தம் வராமல் லாபம் பார்த்து விட்டால், நிர்வாகத்திறமை வந்து விட்டது என்று அர்த்தம். பின்னர் காலத்தை கணித்து படிப்படியாக உங்கள் தொழிலின் வளர்ச்சியை அபிவிருத்தி செய்து கொள்ளலாம்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

சிறந்த தொழில் அதிபராக நீங்கள் பிரகாசிக்க வேண்டும் என்றால், சந்தை நிலவரத்தை அடிக்கடி கண்காணிக்க வேண்டும். காரணம், போட்டியாளர், உங்களைவிட திறமைசாலியாக இருந்தால், நீங்கள் எளிதில் வீழ்ந்து விடுவீர்கள். தொழில் தொடங்க மூலதனமே பிரதானம். அதற்கு வங்கிகள் கடன் வசதி செய்து கொடுத்து ஊக்குவிக்கின்றன. இவை தவிர பின்வரும் குணாதிசயங்களையும் தொழில் தொடங்குபவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

அதாவது தொழில் தொடர்பாக நடைமுறைக்கு வரும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதற்கான ஆர்வம், தொழில் தொடங்குபவர்களிடம் இருக்க வேண்டிய முதன்மையான பண்பாகும். தொழிலில் இலக்கை நிர்ணயித்துக்கொண்டு செயல்படும் போது இடையூறுகள் வரலாம். அந்த நேரத்தில் மன உறுதியுடன் சமாளிக்கும் மனப்பக்குவமும் வேண்டும். பொறுப்புணர்வு, வியாபார உத்தி, விற்பனை முன்னேற்றம், வாடிக்கையாளர்களிடம் சுமுக உறவு, முடிவெடுக்கும் தன்மை, நெருக்கடியான சூழ்நிலையிலும் சிறப்பாக செயல்படும் தன்மை போன்ற பண்புகளும் உங்களை சிறந்த தொழில் அதிபராக மாற்றும்.

Courtesy: MalaiMalar

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button