ஆரோக்கிய உணவு

நாட்பட்ட அசிடிட்டி வலியை உடனே நிறுத்த இத குடிங்க!சூப்பரா பலன் தரும்!!

உடல் நலன் குறித்து இப்போது ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வினால் பலரும் தாங்கள் சாப்பிடும் உணவு குறித்து அதீத அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள். உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை எல்லாமே மாறிவிட்ட சூழலில் உடலின் இயக்கமும் மாறியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

ஆம், இன்றைக்கு யாரைக்கேட்டாலுமே அஜீரணக்கோளாறு, அசிடிட்டி என்று ஏதேதோ சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார்கள் . நெஞ்செரிச்சல் என்று சொன்னதும் ஒன்று கேஸ் நிறைந்த பானங்களை குடிப்பது அல்லது எதாவது மாத்திரையை எடுத்துக் கொள்வது தான் வாடிக்கையாக இருக்கிறது. ஏற்கனவே உடலில் அதிகரித்திருக்கும் அமிலத்தினால் தான் வயிற்று வலியே ஏற்படுகிறது, இந்த நிலையில் மேலும் அமிலம் அதிகரிக்கும் வண்ணம் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் எப்படி சரியாகும்?

என்ன செய்யலாம் :

முதலில் வலி வந்த உடனேயே மாத்திரையை எடுத்து போட்டுக் கொள்வதை தவிர்த்திடுங்கள்…. உங்களால் முடிந்த அளவு மாத்திரை எடுத்துக் கொள்வதை தவிர்க்கப்பாருங்கள்… தொடர்ந்து வலி நீடிக்கிறது எனும் பட்சத்தில் அதிகமான தண்ணீர் குடிப்பது, கை வைத்திய முறைகளை முயற்சிப்பது, ஆகியவை செய்யலாம். இவற்றையும் தாண்டி வலி நீடிக்கிறது எனும் பட்சத்தில் மருத்துவ ஆலோசனை பெற்றிடுங்கள்.

இது எதற்கான வலி உணவு ஒவ்வாமையினால் ஏற்பட்டதா அல்லது வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவு அதிகரித்ததால் ஏற்பட்டதா என்பதை கண்காணித்து அதன் பிறகே அதற்கேற்ப மருந்துகளை எடுக்கவேண்டும்

வீட்டில் அசிடிட்டியை தவிர்க்க பல்வேறு பொருட்கள் சொல்லப்படும் ஆனால் நாட்பட்ட அசிடிட்டி வலியை குணமாக்க, விரைவில் தீர்வு பெற பாதாம் பாலை பயன்படுத்தலாம்.

பாதாம் பால் :

பாதாம் பால் ஒரு ஆல்கலைன் திரவமாகும். இது குடித்தவுடன் வயிற்றுக்குள் சென்று அங்கே சுரக்கக்கூடிய அமிலத்தை கட்டுப்படுத்துகிறது . அமிலம் அதிகரிப்பது தான் வயிற்று வலி மற்றும் நெஞ்செரிச்சலுக்கு காரணமாய் இருக்கிறது.

அதோடு பாதாம் பாலில் விட்டமின்கள் டி மற்றும் இ, மக்னீசியம் உட்பட பல்வேறு ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்டுகள் இருக்கின்றன அதனால் உணவை செரிமானம் ஆக்க உதவிடும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

கொழுப்பு :

பொதுவாக பால் மற்றும் நட்ஸ் வகைகளில் கொழுப்பு இருக்கும், அதனால் பாதாம் பால் தொடர்ந்து குடிப்பதினால் உடலில் கொழுப்புச் சத்து அதிகரிக்குமோ என்ற பயம் வேண்டாம். பாதாம் பாலில் கெட்ட கொழுப்பு மிக குறைவாகவே இருக்கிறது.

அதோடு இதில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் இருக்கிறது. இது வயிற்றிற்கு பாதுகாப்பினை அளித்திடும்.

தொடர்ந்து வெறும் பாதாம் பாலை குடிக்க முடியாது, பிற பொருட்களுடன் சேர்ந்து குடிக்கையில் இதோடு பாலை சேர்க்கலாமா என்ற சந்தேகம் வரலாம்…. அதனால் சில ரெசிபிகளை கொடுத்திருக்கிறோம் படித்து பயன்பெறுங்கள்.

ஸ்மூத்தி :

இவை அசிடிட்டியை போக்குவதுடன் ஆரோக்கியமான ஸ்மூத்தியாகவும் இருப்பதால் நன்றாக பசியை கட்டுப்படுத்தும். ஒரு கப் அளவ் பாதாம் பால் எடுத்துக் கொள்ளுங்கள் அதனுடன் அவகோடா, ஒரு வாழைப்பழம், சியா விதைகள் சிறிதளவு,தேன் சிறிதளவு, அரை டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அதனை ஒரு கிளாஸில் எடுத்துக் குடிக்கலாம். தேவையென்றால் ப்ரிட்ஜில் வைத்து குளிரூட்டி குடிக்கலாம்.

ஓட்ஸ்:

ஒரு கப்பில் ஓட்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள் அது மூழ்கும் அளவிற்கு பாதாம் பால் ஊற்றி லேசாக சூடாக்குங்கள். அதிக சூடு வேண்டாம், அதை அப்படியே சிற்றுண்டியாக எடுத்து சாப்பிடலாம். கூடுதலாக வாழைப்பழம் சேர்த்துக் கொள்ளலாம்.

இஞ்சி :

அசிடிட்டியை தடுப்பதில் இஞ்சி முக்கிய பங்காற்றுகிறது. இஞ்சியில் அதிகப்படியான ஆண்டி இன்ஃபலமேட்டரி துகள்கள் நிறைந்திருக்கிறது. உடலில் கேஸ் சேரமாலும் தடுக்க இது உதவிடுகிறது.

பாதாம் பாலில் ஒரு வாழைப்பழம், ஒரு கப் தர்பூசணிப்பழம், ஒரு ஸ்பூன் தேன் மற்றும் இரண்டு டேபிள் ஸ்பூன் இஞ்சி ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸியில் அரைத்து ஸ்மூத்தியாக குடிக்கலாம்.

பப்பாளி :

பப்பாளியில் இருக்கும் பபைன் செரிமானத்தை தூண்டும். அதோடு இதில் இருக்கக்கூடிய கார்போஹைட்ரேட்,ப்ரோட்டீன் மற்றும் பிற நியூட்ரிஷியன்கள் செரிமானத்தை துரிதப்படுத்தும்.

ஒரு கப் பப்பாளி பழத்துடன் பாதாம் பால் சேர்த்து இரண்டு மணி நேரம் பிரிட்ஜில் வைத்திடுங்கள். இதனை அப்படியே எடுத்து சாப்பிடலாம். வேண்டுமானால் அரைத்து ஸ்மூத்தியாகவும் குடிக்கலாம்.

பால் :

முதல் நாள் இரவே ஒரு கப் அளவு பாதாமை தண்ணீரில் ஊற வைத்திட வேண்டும். பின்னர் மறுநாள் காலை அந்த நீரை வடிகட்டி, ஊற வைத்த பாதாமை தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த அரைத்த கலவையை வடிகட்டினால் பாதாம் பால் கிடைக்கும்.

இதை அப்படியே குடிக்கலாம் இல்லையென்றால் ஒரு ஸ்பூன் தேன் கலந்தும் குடிக்கலாம்.

ஸ்ட்ராபெர்ரி :

இதுவும் ஸ்மூத்தி தயாரிப்பது போல தயாரிக்க வேண்டும். பாதாம் பாலில் ஒரு கப் ஸ்ட்ராபெர்ரீ, ஒரு வாழைப்பழம், சிறிதளவு புதினா இலைகள் மூன்றையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.

பின் இதனை குளிரூட்டி குடிக்கலாம்.

க்ரீன் டீ :

முதலில் பெரிய டம்பளரில் பாதியளவிற்கு க்ரீன் டீ தயாரித்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் ஏற்கனவே எடுத்து வைத்திருக்கும் பாதாம் பாலை சேர்த்து முழு டம்பளராக்கி குடிக்கலாம். இதில் நீங்கள் கவனமாக பார்க்க வேண்டிய ஒரு விஷயம், க்ரீன் டீ சூடாகவும், பாதாம் பால் அதிக சில்லென்றும் இருக்கக்கூடாது.

இரண்டுமே நார்மல் டெம்பரேச்சரில் இருக்க வேண்டும்.

பழங்கள் :

இதைத் தவிர எந்த பழத்துடனும் பாதாம் பால் ஸ்மூத்தி தயாரித்து குடிக்கலாம். ஆனால் அமிலம் நிறைந்த பழங்கலான எலுமிச்சை, ஆரஞ்சு,மாதுளை,திராட்சை ஆகியவற்றை தவிர்த்திடுங்கள். சதைப்பற்றுள்ள பழங்களை இதற்காக தேர்ந்தெடுக்கலாம்.

அசிடிட்டி இருக்கும் போது இந்த பழங்களை சாப்பிடுவதையும் தவிர்த்திடுங்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button