peanut pakoda
ஆரோக்கிய உணவு

சுவையான வேர்க்கடலை பக்கோடா

நட்ஸ்களில் மிகவும் ஆரோக்கியமான அதே சமயம் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்று தான் வேர்க்கடலை. பொதுவாக வேர்க்கடலையை வறுத்து அப்படியே தான் சாப்பிடுவார்கள். ஆனால் அதில் சில மசாலாக்களை சேர்த்து பக்கோடா போன்று செய்து சாப்பிட்டால், அதன் சுவையே தனி.

முக்கியமாக வேர்க்கடலை பக்கோடாவானது குழந்தைகளால் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இங்கு வேர்க்கடலை பக்கோடாவை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

Peanut Pakoda
தேவையான பொருட்கள்:

வேர்க்கடலை – 1 1/2 கப்
கடலை மாவு – 1/2 கப்
அரிசி மாவு – 4 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 5 பற்கள்
வரமிளகாய் – 5
மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – 1 டீஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் வேர்க்கடலையை லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

பின் பூண்டு மற்றும் வரமிளகாயை நீரில் போட்டு 15 நிமிடம் ஊற வைத்து, பின் அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, அரைத்து வைத்துள்ள பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கட்டி சேராதவாறு நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்பு அதில் வேர்க்கடலையை சேர்த்து பிரட்டி விட வேண்டும்.

இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் பிசைந்து வைத்துள்ள கலவையை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், வேர்க்கடலை பக்கோடா ரெடி!!!

Related posts

சூப்பர் டிப்ஸ் ஆண்மை குறைபாட்டை நீக்கும் அற்புதமருந்து குல்கந்து.

nathan

தெரிஞ்சிக்கங்க…உடல் எடையை அதிகரிக்க உதவும் பழங்கள்!!!

nathan

சுடச்சுட பூரி செய்து சாப்பிடலாம்

nathan

பிராய்லர் கோழி சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை பிரச்சனைகள்

nathan

உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் வெள்ளை வெங்காயம் !!

nathan

கொழுப்பை குறைத்து, நச்சுக்களை அழிக்கும் ஆரோக்கியமிக்க அவகேடா

nathan

ஆண்மையை அதிகரிக்கும் வால்நட்

nathan

எந்த உணவுகளை உட்கொண்டால் உடல் சூட்டை அதிகரிக்கும் என்று தெரியுமா?

nathan

வயது வந்த பெண்களுக்கு ஊட்டம் தரும் உளுந்து

nathan