ஃபேஷன்

ஆடைகளுக்கு அழகு சேருங்கள்

ஸ்டைல் பவ்யா சாவ்லா

அலமாரி முழுவதும் ஆடைகள் நிரம்பி வழிந்தாலும் ‘இன்றைக்கு அணிந்து கொள்ள எதுவுமே இல்லை’ என்று இந்தப் பூமியில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் புலம்புவது சகஜமான விஷயம்தான். உண்மையில் ஒவ்வொரு முறையும் புத்தம் புது உடைகள் வாங்க வேண்டிய அவசியமில்லை. ஒரு ஜீன்ஸ் மற்றும் டீ-சர்ட் இருந்தாலே போதும்… சிலவற்றின் கலவையுடன் காண்போரை அசத்தலாம். வித்தியாசமான பை அல்லது கண்கவர் ஜுவல்லரியுடன் ஜோடி சேர்ந்தால் ஜோராக மாறலாம். அலமாரியில் உள்ள ஆடைகளுடன் சில முக்கியப் பொருட்களைச் சேர்ப்பதன் மூலம் நாள் முழுவதும்
மகிழ்ச்சிக் கடலில் திளைக்கலாம்.

எப்படி?

Voonik.com சீனியர் ஸ்டைலிஸ்ட் பவ்யா சாவ்லா பட்டியலிட்டு விளக்குகிறார்.

சன் கிளாஸ்

குளிர் கண்ணாடிகள் ஸ்டைலுக்கு மட்டுமல்ல… சூரியனின் புற ஊதாக் கதிர்களிலிருந்தும் கண்களைப் பாதுகாப்பதால் சிறந்த பயன்பாடு உண்டு. எழில் கொஞ்சும் பைக்கர் அல்லது விண்டேஜ் தோற்றத்துக்கு பூனைக்கண் மோனோக்ரோம் ஷேட், தங்கப்பூச்சு கொண்ட ரிம்-பிளாக் எவியேட்டர்ஸுடன் கலக்குங்கள்!

ஜுவல்லரி

தோடுகள், வளையல்கள், ஜிமிக்கிகள், ஸ்டேட்மென்ட் டேங்க்ளர்ஸ், காதணிகள், மாலைகள், ப்ரேஸ்லெட்டுகள், மோதிரங்கள் ஆகியவற்றை பல்வேறு வண்ணங்களிலும், பளபளக்கும் கிரிஸ்டல்களிலும், கண்கவர் வடிவங்களிலும் அணிந்து கொண்டு, வழக்கமாக நீங்கள் அணியும் ஆடையையே இன்னும் மெருகேற்றலாம். அளவில் சிறிதாக இருந்தாலும், ஜுவல்லரிகளின் வேலைப்பாடு கூடுதல் அழகு தரும்.

பெல்ட்

அழகான பெல்ட் இல்லாமல் எந்தவொரு மேற்கத்திய ஆடையும் நிறைவு அடைவதில்லை. உங்களது அலமாரியில் எண்ணற்ற ஆடைகள் இருந்தாலும், அவற்றுக்கு ஏற்ற பெல்ட்டுகளும் அவசியம். ஒளிரும் நிறத்தில் அல்லது மெடாலிக் தோற்றத்தில் உள்ள ஸ்கின்னி பெல்ட்டுகள் பலருக்கும் பொருந்தும். சில மங்கையருக்கு இடுப்பு வளைவுகளுக்கு ஏற்ப சற்று பெரிய மற்றும் அகன்ற பெல்டுகள் கூடுதல் பொலிவைத் தரும். ஃபன் பக்கிள்களுடன் நடுத்தர அகலத்துடன் கூடிய பெல்ட்டுகள் ஜீன்ஸ், டக்ட் இன் ஷர்ட் ஆகியவற்றுடன் ஃபார்மலாக இருக்கும். அலுவலகங்களுக்குச் செல்வோர் நியூட்ரல் ப்ரௌன் அல்லது கருப்புத் தோல் பெல்ட்டையும், மாலை விழாக்களுக்குச் செல்வோர் ஃபேன்சியான மெட்டாலிக் பெல்ட்டுகளையும் அணியலாம்.

ஷூக்களும் கைப்பைகளும்

எண்ணிக்கையில் அடங்காத ஏராளமான ஷூக்களும் கைப்பைகளும் உங்களுக்காக அணிவகுத்துக் காத்திருக்கின்றன. கைப்பைகளை தேர்ந்தெடுக்கும் போது உங்கள் உடல்வாகுக்கு ஏற்பவும், செல்லும் நிகழ்ச்சிக்கு ஏற்பவும் எடுத்துச் செல்லுங்கள். டோட்ஸ், சாட்செல்ஸ், மெசஞ்சர் பேக், க்ராஸ்-பாடி, ஸ்லிங்க், க்ளட்சஸ் என நீண்ட வரிசையில் கைப்பைகள் உள்ளன. ஷூக்களை தேர்ந்தெடுக்கும் போது வசதி மற்றும் தோற்றத்துக்கு ஏற்ப அணிவது சிறந்தது. நிகழ்ச்சிக்கு ஏற்ற வண்ணங்களும் வகைகளும் காண்போரை வியக்க வைக்கும். உதாரணத்திற்கு நியூட்ரல் வண்ணப் பை மற்றும் மோனோக்ரோம் வகைகள் புரொஃபெஷனல் தோற்றம் தரும். பாப்-வண்ண டை அப் ஸிலெட்டோஸ் ப்ளிங்கி கைப்பை குதூகலத்தை அளிக்கும்.

வாட்ச்

உங்களது தனிப்பட்ட ஸ்டைலின் பிரதிபலிப்பாகவே நீங்கள் அணியும் கைக்கடிகாரம் விளங்கும். மெல்லிய உலோகப் பட்டை கொண்ட கைக்கடிகாரம் சிலருக்குப் பொருந்தும். சிலருக்கோ மிகப்பெரிய டயல் அல்லது வண்ண வண்ண கைக்கடிகாரங்கள் அழகுக்கு அழகு சேர்க்கும்.

ld3862

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button