தலைமுடி அலங்காரம்

எளிமையான ஹேர் ஸ்டைல்கள்

தலைமுடி அனைத்தையும் ஒன்று திரட்டி, ஒரு கொண்டையாகப் போட்டுக் கொள்வது அதிகம் பிரச்சனை தராத ஹேர்ஸ்டைலாக இருக்கும். நீங்கள் எந்த இடத்திற்கு அல்லது எப்படி அணிய வேண்டும் என்பதைப் பொறுத்து, கொண்டையை தளர்வாகவோ அல்லது இறுக்கமாகவோ போட்டுக் கொள்ளலாம்.

அலுவலகம் மற்றும் சாதாரண நேரங்களுக்கு ஏற்ற கொண்டைகளை போட்டுக் கொள்ளவும் முடியும். ‘கொண்டைகளை தளர்வாக விட்டு விடுதல், இறுக்கமாக தூக்கிக் கட்டுதல், பக்கவாட்டில் இழுத்து விடுதல், வெளியே தொங்க விடுதல் மற்றும் மேக்கப் சாதனங்களை அணிவித்தல் என எண்ணற்ற செயல்களை கொண்டைகளில் செய்ய முடியும்.

பிஷ் டெயில் : அழகாகவும், செய்வதற்கு ஏற்றதாகவும் இருப்பதால் தான் பின்னல்கள் சிறந்த தலைமுடி ஒப்பனையாக கருதப்படுகிறது. எளிதாகவும், வேகமாகவும் தலைமுடியை பின்னல் போட்டு விட முடியும் என்பதால், நீங்கள் பல்வேறு வகையான பின்னல்களை முயற்சி செய்து பார்க்கலாம். பிரெஞ்சு வகை பின்னலா பிஷ் டெயில், மிகவும் நவீனமான வகையாகவும், அழகாகவும் இருக்கும்.

குதிரை வால் : மிகவும் பிரபலமான மற்றும் எளிமையான ஹேர் ஸ்டைலாகவும், பெண்கள் மிகவும் விரும்பும் ஹேர் ஸ்டைலாகவும் குதிரை வால் உள்ளது. ‘நீங்கள் சோர்வாக இருப்பதாக நினைத்தால், தலைமுடியை தூக்கி குதிரை வால் ஜடை போட்டுக் கொள்ளுங்கள். புகழ் பெற்றவர்கள் பலரும் கூட, தங்களுக்குக் கிடைக்கும் சிவப்புக் கம்பள வரவேற்பின் போது, குதிரைவால் ஜடையை போட்டிருப்பதில் இருந்தே, இந்த ஜடையின் மகத்துவம் தெரியும்.

daaeee67 e5d1 421e 9ad7 5d3c4d0359c2 S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button