32.1 C
Chennai
Sunday, May 11, 2025
cover 1522644812
ஆரோக்கியம் குறிப்புகள்

ஆண்களே அப்பா ஆகப்போறீங்களா?… அதுக்கு முன்னாடியே இத தெரிஞ்சி வெச்சிக்கோங்க…

தாய்மை என்பது ஒரு அழகான தருணம். அதிலும் பிறந்த குழந்தையின் சிரிப்பும் பரிசமும் ஒரு தாய;க்கு அளவு கடந்த இன்பத்தை கொடுக்க வல்லது. இருப்பினும் பிறந்த குழந்தையை பராமரிப்பது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல. அவர்களுக்கு என்ன தேவை என்பதை உணர்த்தும் ஒரே மொழி அழுகை தான். அதை புரிந்து கொண்டு அரவணைப்பது என்பது தாயிற்கு சற்று கடினமான விஷயமும் கூட.

இப்பொழுது தான் அவர்களின் வளர்ச்சி ஆரம்பிக்கும், நோய் எதிர்ப்பு மண்டலம் மெதுவாக வலுப்பெறும், நம்முடைய சூழ்நிலைக்கு அவர்களின் உடல் ஏதுவாக ஆரம்பிக்கும், சின்ன சின்ன உடல் உபாதைகள் ஏற்படும். நீங்கள் சரியாகக் கண்டு கொள்ளாவிட்டால் அதுவே பெரிய உடல் உபாதைகளாக உருவெடுத்து நிற்கும்.

what are the health problems cause for new born babies
எனவே ஒவ்வொரு தாய்மார்களும் உங்கள் பிறந்த குழந்தையின் உடல் நலத்தை பற்றி தெரிந்து கொள்வது என்பது மிகவும் முக்கியமானது. சரி வாங்க பிறந்த குழந்தைக்கு ஏற்படும் சின்ன சின்ன உடல் உபாதைகள் எவை என்பதை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

வயிறு வீக்கம்

பொதுவாக பிறந்த குழந்தைகள் அடிக்கடி சந்திக்கும் பிரச்சினைகள் தான் வயிறு வீக்கம், வயிறு மந்தம் போன்றவை. பால் குடிக்கும் போது அதிகப்படியான வாயுவையும் சேர்த்து உட்கொள்வதால் இந்த பிரச்சினைகளை அவர்கள் சந்திக்கின்றனர். எனவே அந்த மாதிரியான சமயங்களில் அவர்களின் வயிற்றில் நன்றாக மசாஜ் செய்யும் போது ஒரு நல்ல பலன் கிடைக்கும்.மேலும் பிரச்சினை பெரிசாகமலும் தடுக்கலாம்.

பிறப்பு காயங்கள்

சில குழந்தைகள் பிறக்கும் போது ஏற்படும் அதிக அழுத்தத்தால் சில காயங்களை சந்திக்கின்றனர். காலர் எலும்பில், முகத்தில் தழும்பு, தசைகள் வலுவிழப்பு போன்ற பிறப்பு காயங்கள் அவர்களுக்கு ஏற்படும். இதை பற்றி மருத்துவரிடம் ஆலோசனை செய்து கொள்வது நல்லது. இதனால் அவர்கள் எளிதில் அதிலிருந்து மீண்டு விடலாம்.

தொடர்ச்சியான இருமல்

குழந்தைகள் பால் குடிக்கும் போது எப்பவாவது இரும்புவது என்பது சகஜமான விஷயம். ஆனால் உங்கள் குழந்தைகள் தொடர்ச்சியான இருமலை கொண்டு இருந்தால் சுவாச மண்டலத்தில் தொற்று ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். எனவே உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்று கொள்வது நல்லது.

நீல நிற சருமம்

குழந்தை பிறந்த பிறகு அதன் கை மற்றும் கால் சருமம் நீல நிறமாக மாறுவது ஒரு இயல்பான விஷயம். ஆனால் இந்த நீல நிற அடையாளம் குழந்தையின் வாயிலோ அல்லது நாக்கிலோ கண்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் இது மாறாமல் அப்படியே தங்கி விடும்.

சுவாச நோய்கள்
குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் மற்றும் புதிதாக பிறந்த குழந்தைகள் முதலில் சுவாசிக்க கஷ்டப்படலாம்.அப்புறம் சூழ்நிலைக்கேற்ப அது மாறிவிடும். ஆனால் கீழ்க்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுகி தெரிந்து கொள்ளுங்கள்

சுவாசிக்கும் போது மூக்கின் அகலம் அதிகரித்தல்

சருமும் நீலநிறமாக மாறிவிட்டால்

மார்பெலும்பு புடைத்து மூச்சு விட கஷ்டப்படுதல்

விரைவான சுவாசம்

ஏதாவது மூக்கடைப்பு இருந்தால் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சொட்டு மருந்துகளை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

காய்ச்சல்

காய்ச்சல் என்பது நமது உடல் நோய் கிருமிகளை எதிர்த்து போராடுவதை குறிக்கிறது. இருப்பினும் குழந்தைகளுக்கு 102 F க்கு மேலாக இருந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள். இல்லையென்றால் வலிப்பு வர வாய்ப்புள்ளது.

காது தொற்று

இந்த தொற்று பொதுவாக பிறந்த குழந்தைகளிடம் காணப்படும். அவர்களின் காதை இழுத்தால் போதும் வீழ் வீழ் என்று கதறி அலுவார்கள். இந்த மாதிரியான தொற்று பாக்டீரியா மற்றும் வைரல் கிருமிகளால் ஏற்படுகிறது. எனவே சரியான நேரத்தில் ஆன்டி பயாடிக் போன்ற மருந்துகளை பயன்படுத்துவதன் மூலம் இதை தவிர்க்கலாம்.

வயிற்று போக்கு

பிறந்த குழந்தைகள் அடிக்கடி வயிற்று போக்கால் அவதிப்படுவர். இதற்கு அவர்களின் நீர்ச்சத்தை நாள் முழுவதும் சரியாக பராமரித்தாலே போதும் சீக்கிரம் அதிலிருந்து மீண்டு விடுவார்கள். தேவை என்றால் மருத்துவரையும் நாடிக் கொள்வது நல்லது.

சரும வடுக்கள் மற்றும் சரும பிரச்சினைகள்

பிறந்த குழந்தைக்கு சருமம் ரெம்ப சென்ஸ்டிவ் ஆக இருக்கும். எனவே அவர்களுக்கு அணியும் டயப்பரால் சரும வடுக்கள் மற்றும் தலையில் தோல் உரிதல் போன்ற பிரச்சினைகளை சந்திப்பார்கள். எனவே அதற்கான சரும க்ரீம்கள், அடிக்கடி டயப்பரை மாற்றுதல், பிறப்புறுப்பு பகுதியை நன்றாக துடைத்து உலர்வாக வைத்து இருத்தல் மற்றும் தலைக்கு மைல்டு பேபி சாம்பு போன்றவற்றை பயன்படுத்தி சரி செய்யுங்கள்.

வாய் தொற்று

இந்த மாதிரியான ஈஸ்ட் தொற்று பிறந்த குழந்தையின் வாய் பகுதியில் பரவுகிறது. எனவே மருத்துவரை சந்தித்து அதற்கான பூஞ்சை எதிர்ப்பு மருந்துகளை கொடுப்பதன் மூலம் தடுக்கலாம்.

Related posts

உண்மையான ஆண் மகன்களிடம் இருக்கும் 8 சிறந்த குணங்கள்!!!தெரிந்துகொள்வோமா?

nathan

இந்த 5 ராசிக்காரர்கள் எப்போதும் தங்கள் மனைவிக்கு நேர்மையான கணவர்களாக இருப்பார்கள்…

nathan

உடல் ஆரோக்கியத்தில் மூலிகைகள்…தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உடல் எடையை அதிகரிக்க வழிகள்

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த 5 ராசி பெண்கள் மோசமான காதலிகளாக இருப்பார்களாம்…

nathan

கருவுற்றிருக்கும் பெண்களுக்கான சில டிப்ஸ்…! கர்ப்பிணி பெண்கள் மாம்பழம் சாப்பிட கூடாதா.?!

nathan

நீங்கள் சாப்பிட்ட உடன் இந்த விஷயத்தை செய்யும் நபரா ?அப்ப இத படிங்க!

nathan

அக்குளில் வரும் வலிமிக்க கட்டிகளைப் போக்க சில டிப்ஸ்…

nathan

நேரத்தை மிச்சப்படுத்த வண்டியில் செல்லும் போதே சாப்பிடும் நபரா நீங்கள்?அப்ப இத படிங்க!

nathan