Other News

பேரீச்சை பழத்தை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

பழங்கள் அதிகம் சாப்பிடும் பழக்கத்தை கொண்ட மக்கள் நோய்களால் பாதிக்கப்படுவதில்லை. நாம் உண்பதற்கு உகந்த பழங்கள் எல்லாமே உடலுக்கு நன்மை தரக்கூடியது. நிறைய பேர் டயட்டில் இருக்கும்போது பேரிச்சம் பழத்தையும் சேர்த்துக் கொள்வார்கள்.

ஏனென்றால் அதில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. டயட்டில் இருப்பவர்கள் பேரிச்சம் பழத்தை ஊறவைத்து சாப்பிடுவார்கள். மற்றவர்கள் பச்சையாக சாப்பிடுவது உண்டு. இந்நிலையில் இந்த பழத்தை காலையில் அதுவும் வெறும் வயிற்றில் சாப்பிடலாமா என்ற சந்தேகம் அனைவரிடமும் இருக்கும். அதுபோல இந்த நோய் உள்ளவர்கள் பேரிச்ச பழத்தை தொடவே கூடாது.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

எரிச்சல் கொண்ட குடல் நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி நேரத்துக்கு தகுந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் பேரிட்சம் பழத்தை சாப்பிடும்போது ஜீரணிப்பதில் சிரமம் ஏற்பட்டு அசௌகரியத்தை உணர நேரிடும். ஆகவே இவர்கள் கட்டாயமாக பேரிச்சம் பழத்தை சாப்பிட கூடாது.
பழங்களில் பிரக்டோஸ் இருப்பதால் வெறும் வயிற்றில் உண்ணும்போது சிலருக்கு வயிற்று வலி ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதில் இருக்கும் நார்ச்சத்து கொஞ்சம் சாப்பிட்டால்கூட வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுக்கும். ஆனால் ஜீரணிக்க நீண்ட நேரம் எடுத்துகொள்ளும்.
பேரிச்சம் பழம் அல்சர் போன்ற நோய்களைத் தடுக்க உதவுகிறது. பல வகையான புற்றுநோய்கள் ஏற்படுவதை தடுப்பதுடன், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நீரிழிவு மற்றும் பிற நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது.
மேலும், மூளை செயல்பாட்டை ஊக்குவிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. நாள்தோறும் பேரிட்சை சாப்பிட்டால் எலும்பு ஆரோக்கியம் மேம்படும். மலச்சிக்கலை குணப்படுத்தும். உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button