குந்தன் ஜூவல்கை வேலைகள்

பின்னல் மணிமாலை step by step படங்களுடன்

ஃபேஷன் ஜுவல்லரியில் எளிமையான நகைகளை உருவாக்குவதைப் பாத்து வருகிறோம். அந்த வரிசையில் மிக அழகான இந்த பின்னல் மணிமாலை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

 

dscn0127

தேவையான பொருட்கள்: சிறிய அளவிலான மணிகள், இணைப்பான் கம்பிகள், பிளைன் செயின், பீட் ஸ்பேசர்கள், கட்டர், பிளையர்.

dscn0101

 

பிளைன் செயினின் தொங்கும் பகுதியை பாதியாக வெட்டுங்கள்…

dscn0113

 

கம்பி இணைப்பானில் கழுத்துக்கு மாலை எவ்வளவு நீளத்துக்கு தேவையோ அவ்வளவு நீளத்துக்கு மூன்று கம்பிகளை வெட்டி, அதில் இப்படி மணிகளை கோர்த்து முடிச்சிடுங்கள்.

dscn0120 1

 

இரண்டாக வெட்டி வைத்திருக்கும் கம்பியின் ஒரு முனையில் கோர்த்து வைத்திருக்கும் மணிமாலைகளின் ஒவ்வொரு முனையையும் பீட் ஸ்பெசர் வைத்து இணையுங்கள்.

dscn0114

 

மூன்றையும் இணைத்துவிட்டு மறுமுனைகள் அவிழ்ந்துவிடாதபடி முனையில் முடிச்சிட்டு பின்னல்போல பின்னுங்கள்.

dscn0119

dscn0120 1

 

பின்னி முடித்ததும் செயினின் மற்றொரு முனையில் மூன்று மணிமாலைகளையும் பீட் ஸ்பேசரால் இணையுங்கள். இதோ அணிய தயாராகிவிட்டது பின்னல் மணிமாலை!

அடுத்து நாம் நீங்களே செய்யுங்கள் பகுதியில் பயன்படாத ஜீன்ஸில் ஸ்டைலான கைப்பை தைப்பது எப்படி என்று பார்க்கவிருக்கிறோம்…காத்திருங்கள்!

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button