சைவம்

கேரளா பிராமின் ஸ்டைல் சாம்பார்

வெள்ளிக்கிழமை வந்தாலே அனைவரது வீட்டிலும் சாம்பார், ரசம், பொரியல் என்று ஓர் குட்டி விருந்து தயார் செய்வோம். அதிலும் ஆடி மாதம் என்றால், கட்டாயம் வெள்ளிக்கிழமைகளில் ஓரே ஜாலியாக இருக்கும். ஏனெனில் அன்றைய நாள் முழுவதும் நன்கு வயிறு நிறைய சாப்பிடும் வகையில் பல சமையல்களை சுவைக்கலாம்.

உங்களுக்கு எப்போதும் ஒரே மாதிரியான சாம்பார் வைத்து அலுத்துப் போயிருந்தால், கேரளா பிராமின் ஸ்டைல் சாம்பாரை செய்து சுவையுங்கள். இது சற்று வித்தியாசமான சுவையில் இருக்கும். சரி, இப்போது அந்த கேரளா பிராமின் ஸ்டைல் சாம்பாரை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!


31 1438329051 kearala brahmin style sambar
தேவையான பொருட்கள்:

முருங்கைக்காய் – 1 (நறுக்கியது)
வெண்டைக்காய் – 4 (நறுக்கியது)
கேரட் – 2 (துண்டுகளாக்கிக் கொள்ளவும்)
உருளைக்கிழங்கு – 1 (துண்டுகளாக்கிக் கொள்ளவும்)
வெங்காயம் – 2 (நறுக்கியது)
தக்காளி – 2 (நறுக்கியது)
புளி – 1 எலுமிச்சை அளவு
தண்ணீர் – 1 கப்
துருவிய தேங்காய் – சிறிது
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது

பருப்பு வேக வைப்பதற்கு…

துவரம் பருப்பு – 1 கப்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
தண்ணீர் – 3 கப்

வறுத்து அரைப்பதற்கு…

மல்லி – 2 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் – 4
பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு…

கடுகு – 1 டீஸ்பூன்
வரமிளகாய் – 2-3
கறிவேப்பிலை – சிறிது
தேங்காய் எண்ணெய் – 4 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் துவரம் பருப்பை நன்கு சுத்தமாக கழுவி, குக்கரில் போட்டு, அத்துடன் 3 கப் தண்ணீர் ஊற்றி, 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து, 3-4 விசில் விட்டு இறக்கி, குக்கரை திறந்து பருப்பை மசித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

பின்னர் புளியை ஒரு கப் நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 1/2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், தக்காளியை சேர்த்து மென்மையாக வதக்கவும்.

பிறகு அதில் காய்கறிகளை சேர்த்து, 5 நிமிடம் வதக்கி, பின் அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து, காய்கறிகளை நன்கு வேக வைக்க வேண்டும்.

காய்கறியானது நன்கு வெந்ததும், அதில் மசித்து வைத்துள்ள பருப்பு மற்றும் புளிச்சாற்றினை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட வேண்டும்.

இறுதியில் அதில் துருவிய தேங்காய் சிறிது சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவி மூடினால், கேரளா பிராமின் ஸ்டைல் சாம்பார் ரெடி!!!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button