மருத்துவ குறிப்பு

சுகப்பிரசவம் ஆகணும்னா இத செஞ்சாலே போதுங்க… பெண்களே தெரிஞ்சிக்கங்க…

பெண்ணின் வாழ்வில் ஒரு பொற்காலம் இந்தக் கர்ப்பகாலம். கர்ப்பமாக இருப்பதை தெரிந்து கொண்ட அந்த நொடியிலிருந்து வாழ்வினை அணு அணுவாய் அனுபவிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். குழந்தையின் உருவம் , அதன் வளர்ச்சி, அது கொடுக்கப் போகும் நல் உறவு இதை பற்றியே சிந்திக்கவேண்டும். ஒவ்வொரு பெண்ணிற்கும் ஒரு குழந்தையை சுகப்பிரசவத்தின் மூலம் இவ்வுலகிற்கு கொண்டு வர வேண்டும் என்பது ஆசை. சுகப்பிரசவம் ஆரோக்கியமான குழந்தை பெறுவதற்கு மட்டுமல்ல, தாய் குறைந்தபட்ச சிக்கல்களுடன் விரைவாக இயல்பு நிலைக்கு திரும்பவும் வழி செய்கிறது.

1. சிசேரியன் சிக்கல்கள்

ஒரு பிரசவம் சுகப்பிரசவமாக அல்லது சிசேரியன் முறையாகவோ நடப்பதற்கு முக்கிய காரணம் தாயின் உடல்நலம் , குழந்தையின் உடல்நலம் மற்றும் பிரசவத்தின் பொழுது ஏற்படும் சிக்கல்களை பொறுத்தது. தாயையும் சேயையும் நல்ல முறையில் சில உடல் நல பிரச்சினைகளிருந்து காப்பாற்றவே வேறு வழியின்றி சிசேரியன்செய்யப்படுகிறது. இவ்வாறு மயக்க மருந்துகள் கொடுத்து சிசேரியன் செய்து ஒரு குழந்தையை ஈன்றெடுப்பது ஒரு பெண்ணை இயல்பு நிலைக்கு திரும்புவதை கடினமாக்குகிறது. கருவை சுமக்கும்போதே சில வழிமுறைகளை பின்பற்றினாலே சுகப்பிரசவம் நிகழ்வதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். அப்படி சுகப்பி.

2. சுகப்பிரசவம் உண்டாக

பெண்கள் எல்லோருக்கும் சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்ற ஆசை கட்டாயம் இருக்கும். அதற்கு கர்ப்ப காலத்தில் சில வழிமுறைகளைக் கையாள வேண்டியது அவசியம். அதுபற்றி இங்கே பார்க்கலாம்.

3. மருத்துவ ஆலோசனை

கர்ப்ப காலத்தில் எதை செய்வதற்கு முன்னும் ஒரு நல்ல மகப்பேறு மருத்துவரை அணுகி ஆலோசனை செய்வது அவசியம். ஏனெனில் குழந்தை வயிற்றுக்குள் எப்படி இருக்கிறது. என்ன நடக்கிறது என்று உங்களுக்கே தெரியாமல் இருக்காமல். ஆனால் உங்கள் மருத்துவருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். அதனால் எதையும் ஆலோசித்து செய்வது நல்லது.

4. உடல்எடை

கர்ப்ப காலம் இயல்பாகவே பெண்களின் உடல் எடை அதிகமாகும். ஆனால் ஏழு மாதத்திற்கு மேல் உடல் எடையில் மிகுந்த கவனம் தேவை. அதோடு நீண்ட நேரம் நின்று கொண்டிருப்பதை தவிர்ப்பது நல்லது.

5. தண்ணீர்

கர்ப்ப காலத்தில் சாதாரணமாக நீங்கள் குடிக்கும் தண்ணீர் உங்களுக்கு மட்டும்தான். ஆனால் கர்ப்ப காலத்தில் குழந்தைக்கும் அந்த தண்ணீர் தேவைப்புடும். அதனால் தான் கர்ப்பிணிகளுக்கு அடிக்கடி நாக்கு வறண்டு அதிக தண்ணீர் தேவைப்படும். அதனால் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

6. பழங்கள்

7 மாதங்களுக்கு பிறகு கொஞ்சமாக அன்னாசி , பப்பாளி பழங்கள் எடுத்துக் கொள்ளலாம். மாம்பழம் நன்றாக சாப்பிடலாம். ஒருவேளை கர்ப்ப கால சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், மருது்துவர் பரிந்துரைக்கும் பழங்களைச் சாப்பிடுங்கள்.

7. உடற்பயிற்சி

கடினமாக உடற்பயிற்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லையென்றாலும் யோகா தினமும் செய்யலாம். கர்ப்பிணிகள் செய்வதற்கென்றே சில உடற்பயிற்சிகள் இருக்கின்றன.அதை மருத்துவரிடம் ஆலோசனை பெற்று செய்து வாருங்கள்.

8. நடைப்பயிற்சி

தினமும் கொஞ்ச தூரம் நமைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். நடைபயிற்சி செய்ய முடியாதவர்கள் தினமும் வீட்டுப் படிக்கட்டுகளில் 15 நிமிடங்கள் வரை ஏறி இறங்கலாம். வீடுகளில் ஒருவேளை படிக்கட்டுகள் செங்குத்தாக இருந்தால் இந்த விஷயத்தைத் தவிர்த்துவிடுங்கள். தினமும் காலையிலும் மாலையிலும் நடக்கவும். இவ்வாறு செய்வதால் உடல் சீரான நிலையில் இருப்பதோடு நெகிழும் தன்மையோடு மாறுவதால் சுகப்பிரசவம் எளிதாக்க நடக்கிறது.

9. இசை கேட்டல்

கர்ப்ப காலத்தில் யாரும் அவர்களை சங்கடப்படுத்த நினைக்க மாட்டார்கள். எப்போதும் மகிழ்வாக இருப்பது நல்லது. மன அமைதியோடு இருக்க வேண்டும். அதனால் உங்களை எப்போதும் மனஅழுத்தம் இல்லாமல் சந்தோஷத்துடன் வைத்துகொள்ள வேண்டும். அதனால் உங்கள் மனம் விரும்பிய இசையைக் கேட்கலாம்.

10. வெந்நீர் குளியல்

தினமும் தூங்குவதற்கு முன்னால் இளஞ்சூடான நீரில் குளியுங்கள். இப்படி தூங்குவதற்கு முன்னால் வெந்நீரில் குளித்துவிட்டு படுத்தால் உங்களுக்கு இருக்கும் மன அழுத்தமும் உடல் சோர்வும் நீங்கும்.

11. மசாஷ்

பிறப்பு கால்வாய் விரிவடைதல் (BCW) என்பது கர்ப்பிணிப் பெண்ணின் கருவூலத்தின் மசாஜ் ஆகும். இந்த மசாஜ் குழந்தை பிறப்பதற்கு 6 முதல் 4 வாரங்களுக்கு முன்பிலிருந்து வழக்கமான செய்வதால் ஆரோக்கியமான சுகப்பிரசவம் நிகழ வழிசெய்யும்.

12. ஊட்டச்சத்து உணவு

மேற்சொன்ன எல்லாவற்றையும் விட, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியமானது. உங்கள் உடல் நலத்திற்காக மட்டுமல்ல, உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்துக்கும் சேர்த்து வழிவகுக்கும்.

சுகப்பிரசவத்தின் மூலம் ஏற்படும் வலியை மனதில் நினைத்துக் கவலை கொள்ள வேண்டாம். மன மகிழ்ச்சியோடு நிம்மதியாக இருந்தாலே சுகப்பிரசவம் நிகழும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button