மருத்துவ குறிப்பு

கர்ப்ப காலத்தில் காய்ச்சல் வந்தால் குழந்தைக்கு இந்த நோய் வருமா?தெரிஞ்சிக்கங்க…

ஆட்டிஸம் ஒரு நரம்புக் குறைபாடு ஆகும். 2-3 வயதுள்ள குழந்தைகள் பெரும்பாலும் இந்த குறைவால் பாதிப்படைகின்றனர். இந்த ஆட்டிசம் குழந்தையின் மோட்டார் இயலாமை , சைகை இயலாமை மற்றும் பேச முடியாமை போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.

pregnanc fever linked with babies autism
கர்ப்ப காலத்தில் தாய்மார்களின் ஆரோக்கியமும் உடல் நலமும் இதனுடன் தொடர்பு கொண்டுள்ளதா என்று நிறைய கேள்விகள் நம்முள் எழுகின்றன.

ஆட்டிஸம்

இந்த ஆட்டிசம் ஏற்பட மரபணு மாற்றம், வேதியியல் சமநிலையின்மை, வைரஸ் மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்ற காரணங்களாலும் பிறக்கின்ற குழந்தைக்கு ஆட்டிசம் வர வாய்ப்புள்ளது. இந்த ஆட்டிசம் பற்றிய நிறைய கருத்துக்கள் தெரியாத பட்சத்தில் சமீபத்திய ஆராய்ச்சி படி மூலக்கூறு உளவியல் என்ற நாளிதழில் கர்ப்ப காலத்தின் 2-3 காலத்தில் தாய்மார்கள் காய்ச்சலால் அவதிப்பட்டால் கருவில் வளரும் குழந்தைக்கு 40 % ஆட்டிசம் குறைபாடு வரும் அபாயம் உள்ளது என்று அதிர்ச்சி ரிப்போர்ட் அளிக்கின்றனர்.

ஆராய்ச்சி முடிவு

இந்த ஆராய்ச்சியை நார்வேயில் நடத்தும் போது 1999-2009 வரை பிறந்த 95,754 குழந்தைகளில் 583 குழந்தைகள் இந்த ஆட்டிசம் நோயால் பாதிப்படைந்து உள்ளனர். இதில் 15,701 குழந்தைகளின் அம்மாக்கள் 1-4 வார கர்ப்ப காலத்தில் காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே எந்தவொரு கர்ப்ப காலத்திலும் காய்ச்சலால் அவதிப்பட்டால் 34 % ஆட்டிசம் குறைபாடு ஏற்படவும், 2-3 வது கர்ப்ப காலத்தில் ஏற்படும் காய்ச்சலால் 40% ஆட்டிசம் குறைபாடு குழந்தைக்கு ஏற்படவும் வாய்ப்புள்ளது. அதிலும் கர்ப்பத்தின் 12 வது வாரத்தில் காய்ச்சலால் அவதிப்பட்ட தாய்மார்களின் குழந்தைகளுக்கு 300 % வரை ஆட்டிசம் வரும் வாய்ப்பு அதிகரித்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

கர்ப்ப கால காய்ச்சல்

மேலும் இந்த 2-3 மாதங்களில் தாய்மார்களுக்கு ஏற்படும் காய்ச்சலுக்கு மருந்தாக அஸிட்டமினோபீன் எடுத்துக் கொள்ளும் போது குழந்தைகளின் ஆட்டிசம் குறைபாடு அபாயம் குறைந்துள்ளது. மேலும், இப்யூபுரூஃபன்,ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்து எடுத்துக் கொண்ட தாய்மார்களின் குழந்தைகளுக்கு மத்தியில் ஆட்டிசம் குறைபாடு எதுவும் இல்லை. எனவே எங்கள் ஆராய்ச்சியின் முடிவானது கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் நோய் தாக்குதல்கள் அடைந்தால் கருவில் வளரும் குழந்தைகள் ஆட்டிசம் நோயால் பாதிப்படைகின்றனர் என்று நியூயார்க் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மடி ஹார்னிக் கூறுகிறார்.

விழிப்புணர்வு

எனவே இந்த ஆராய்ச்சி கண்டிப்பாக மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும். கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் சிறிய நோய் தாக்குதல்களையும் கவனிக்க வேண்டும். அப்பொழுது தான் தாயும் சேயும் நலமுடன் வாழலாம்.அதனால் கட்டாயம் பெற்றோர்கள் ஆட்டிஸம் குறித்த விழிப்புணர்வு பெற்றிருத்தல் மிகவும் அவசியம். அதேபோல் மருத்துவர்களும் இதுகுறித்த போதிய ஆலோசனைகளை கர்ப்பிணிக்கும் அவருடைய குடும்பத்துக்கும் தர வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button