தலைமுடி சிகிச்சை

ஆண்களே! தலைமுடி அதிகம் கொட்டி சொட்டை விழுவது போல் உள்ளதா? அதைத் தடுக்க இதோ சில வழிகள்!

ஆண்களும், பெண்களும் அன்றாடம் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் தலைமுடி உதிர்வது. இந்த பிரச்சனைக்காக பலரும் மருத்துவர்களை சந்தித்து சிகிச்சைகளைப் பெற்று வருவார்கள். முதலில் முடி உதிர்வதற்கு காரணம் என்னவென்று ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அதில் மோசமான டயட், மன அழுத்தம், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, தூக்கமின்மை, ஹார்மோன் மாற்றங்கள் போன்றவை முக்கிய காரணங்களாகும்.

ஒருவருக்கு அழகே முடி தான். அந்த முடி உதிர்ந்தால், உங்கள் அழகு பாழாகும். அதிலும் ஆண்கள் அளவுக்கு அதிகமாக டென்சன் மற்றும் மன அழுத்தத்திற்கு உள்ளாவதால், அதன் விளைவாக முடி அதிகம் உதிர்ந்து சொட்டைத் தலையை சந்திக்கின்றனர். மேலும் சொட்டை விழுந்தால் தலைமுடி மீண்டும் அவ்வளவு எளிதில் வளராது. ஆனால் போதிய சிகிச்சைகளை எடுத்து வந்தால், நிச்சயம் வழுக்கை விழுந்த இடத்தில் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.

அதற்கு மருத்துவரிடம் சென்று பணம் செலவழிப்பதற்கு பதிலாக, வீட்டிலேயே ஒருசில இயற்கை வழிகளைப் பின்பற்றினால் சொட்டை தலையில் முடியை வளரச் செய்யலாம். இங்கு முடி உதிர்வதைத் தடுக்கவும், சொட்டைத் தலையில் முடியின் வளர்ச்சியைத் தூண்ட உதவும் சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து முயற்சித்துப் பாருங்கள்.

மீன் புரோட்டீன் பவுடர் (Marine Protein Supplement)

முடியின் வளர்ச்சிக்கு புரோட்டீன் அதிக அளவில் தேவைப்படும். அதிலும் இந்த பவுடர் கடல் மீனில் இருந்து பெறப்படுகிறது. இந்த புரோட்டீன் பவுடரில் மெர்குரி மற்றும் இதர டாக்ஸின்கள் இருக்காது. மேலும் இதில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. ஆய்வு ஒன்றிலும் கடல் மீனில் இருந்து தயாரிக்கப்படும் புரோட்டீன் பவுடர் தலைமுடி உதிர்வதைத் தடுத்து, முடியின் வளர்ச்சியை அதிகரிப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டோக்ட்ரினொல் கேப்ஸ்யூல்

டோக்ட்ரினொல் கேப்ஸ்யூலில் வைட்டமின் ஈ அதிகம் நிறைந்துள்ளது. இது தலைமுடியின் அடர்த்தியான வளர்ச்சிக்கு தேவையான ஓர் சத்து. இந்த கேப்ஸ்யூலை தினமும் 100 மிகி அளவில் எடுத்து வந்தால், முடியின் வளர்ச்சி அதிகரிக்கும் மற்றும் தலைமுடி உதிர்வது குறையும்.

மெலடோனின் நீர்மம்

இது மற்றொரு சிறப்பான சொட்டைத் தலைக்கான பொருள். இந்த நீர்மம் அனைத்து மருந்து கடைகளிலும் கிடைக்கும். இதனை தினமும் ஸ்கால்ப்பில் தடவி வந்தால், மெலடோனின் ஹார்மோன் உடலில் உற்பத்தி செய்யப்பட்டு, நல்ல சீரான தூக்கத்தைப் பெற செய்வதோடு, முடியின் வளர்ச்சியையும் அதிகரிக்கும்.

பூசணிக்காய் விதை எண்ணெய்

கேப்ஸ்யூல் இதில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் இதர அத்தியாவசிய கொழுப்புக்கள் நிறைந்துள்ளது. இந்த ஃபேட்டி ஆசிட் தலைமுடியின் வளர்ச்சிக்கு உதவுவதோடு, அதன் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். அதற்கு பூசணிக்காய் விதை எண்ணெய் கேப்ஸ்யூலை தினமும் 400 மிகி அளவில் எடுத்து வர வேண்டும். இதனால் சொட்டைத் தலையிலும் முடி வளர்வதைக் காணலாம்.

புதினா எண்ணெய்

புதினா எண்ணெயை தினமும் தலையில் ஸ்கால்ப்பில் நன்கு படும்படி தடவி மசாஜ் செய்து வர வேண்டும். இப்படி 4 வாரம் தொடர்ந்து செய்து வர வேண்டும். மேலும் தலைக்கு ஷாம்பு போடும் போது, அத்துடனும் சிறிது புதினா எண்ணெய் சேர்த்துக் கொள்வது நல்லது. இந்த செயல்களின் மூலம் வழுக்கைத் தலையில் முடியின் வளர்ச்சி அதிகமாக இருப்பதோடு, முடி உதிரும் பிரச்சனை இருந்தால் குறையும்.

மைனாக்சிடிலின் கரைசல்

இந்த கரைசல் மருந்து கடைகளில் கிடைக்கும். இதனை தினமும் ஸ்கால்பில் சில துளிகள் ஊற்றி தடவி, மசாஜ் செய்யாமல், அழுத்தி விட வேண்டும். இப்படி மூன்று மாதங்கள் தினமும் செய்து வந்தால், நல்ல மாற்றத்தை நீங்களே காணலாம்.

ஆலிவ்
18 1450416404 7 olive oil
ஆயில் ஆலிவ் ஆயிலை வெதுவெதுப்பாக சூடேற்றி, தினமும் இரவில் படுக்கும் போது தலையில் தடவி வந்தால், தலையில் இரத்த ஓட்டம்அதிகரித்து, முடியின் வளர்ச்சி தூண்டப்படும். மேலும் இந்த எண்ணெயில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளதால், இது முடிக்கு ஊட்டச்சத்துக்களை வழங்கி, முடி உதிர்வதையும் தடுக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button