ஆரோக்கியம் குறிப்புகள்

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த வேலைகளை செய்தால் பெண்கள் உடல் எடையை குறைக்கலாம்.!

உடல் பருமன் கொண்ட பெண்கள் வீட்டு வேலைகளை செய்வது உடலில் உள்ள கலோரிகளை எரிக்க உதவும். அதன் மூலம் உடல் எடை குறைய வாய்ப்பிருக்கிறது.

உடல் உழைப்பு இல்லாமல் போவது, நீண்ட நேரம் உட்கார்ந்திருந்து வேலை பார்ப்பது, தூக்க சுழற்சி கால அட்டவணையை முறையாக நிர்வகிக்க முடியாமை உள்ளிட்ட காரணங்கள் உடல் பருமன் பிரச்சினையை உருவாக்குகிறது. உடல் பருமன் கொண்டவர்கள் வீட்டு வேலைகளை செய்வது உடலில் உள்ள கலோரிகளை எரிக்க உதவும். அதன் மூலம் உடல் எடை குறைய வாய்ப்பிருக்கிறது.

பெண்கள் சமையல் வேலைகளில் ஈடுபடுவது கலோரிகளை எரிக்க உதவும். அரை மணி நேரம் சமையல் செய்தால் 92 கலோரிகளை எரித்துவிடலாம். அதனால் ஆண்களும் ஈடுபாட்டுடன் சமையல் வேலைகளை செய்யலாம். காய்கறிகள் நறுக்கி கொடுத்தால் கூட போதும். சின்ன சின்ன வேலைகளையும் செய்து கொடுக்கலாம். அவை கலோரிகளை எரிக்க உதவுவதோடு துணையிடம் நன் மதிப்பை பெற்றுத்தரும்.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

அரை மணி நேரம் துணி துவைப்பது 133 கலோரிகளை எரிக்க உதவும். வாஷிங் மெஷின் துணை இல்லாமல் துணி துவைக்கும் வேலைகளை கைகளை கொண்டே செய்தால் எரிக்கப்படும் கலோரிகளின் அளவு அதிகரிக்கும். துவைத்த துணிகளை அயர்ன் செய்வதும் கலோரிகளை எரிக்க வழிவகை செய்யும். நிறைய பேர் உடற்பயிற்சி செய்வதற்கு வளர்க்கும் நாயை உடன் அழைத்து செல்வார்கள்.

அப்படி நாயுடன் அரை மணி நேரம் வெளியே சென்று நடைப்பயிற்சி செய்வதன் மூலம் 149 கலோரிகளை எரித்துவிட முடியும். வீட்டு தோட்டம் அமைத்து பராமரிப்பது உடல் உழைப்புக்கு வித்திடும். மனதிற்கும் இதமளிக்கும். மன அழுத்தம், சோர்வு போன்ற பிரச்சினைகள் நெருங்காமல் தற்காத்துக்கொள்ளலாம். அரை மணி நேரம் தோட்ட வேலைகளை செய்வது 167 கலோரிகளை எரிக்க உதவும்.

அரை மணி நேரம் காரை கழுவி சுத்தம் செய்தாலும் 167 கலோரிகள் எரிக்கப்படும். வீட்டை பெருக்குவதும் கலோரியை எரிக்கும் சிறந்த வேலையாகும். வீட்டை ஒவ்வொரு முறை பெருக்கும்போதும் 240 கலோரிகள் வரை எரிக்கப்படும். அதனால் அடிக்கடி வீட்டை பெருக்கி சுத்தம் செய்வது நல்லது.- source: maalaimalar

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button