ஆரோக்கியம் குறிப்புகள்

இதெல்லாம் சைவ உணவே கிடையதாமா… இவளோ நாள் உங்கள நல்லா ஏமாத்தியிருக்காங்க!!!

நீங்கள் நினைப்பது போல நீங்கள் சைவ உணவுகள் என்று நினைக்கும் பல உணவுகள் உண்மையிலேயே சைவ உணவுகள் கிடையாது. ருசியின் காரணத்திற்காகவும், பதப்படுத்தி வைப்பதற்காகவும் அசைவ மூலப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.

 

பெரும்பாலும் நீங்கள் உண்ணும் சாக்லேட், கேண்டி, ஜெல்லி, சில வெளிநாட்டு வகை சீஸ் உணவுகள், தயிர், சிப்ஸ், ஒயின் போன்ற உணவுகளில் அசைவ சேர்க்கை உள்ளதாம். ஒருவேளை நீங்கள் சைவம் மட்டுமே உண்பவராக இருந்தால் இது கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருக்கும்.

 

பெரும்பாலும் நீங்கள் வாங்கும் பதப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் உணவுகளில் அசைவ பொருள் சேர்க்கை சேர்க்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இனி, எந்தெந்த சைவ உணவுகளில் எல்லாம் இவ்வாறான அசைவப் பொருட்களின் சேர்கை உள்ளது எனக் காணலாம்…

சீஸ்

பெரும்பாலும் இறக்குமதி செய்யப்படும் சீஸ் உணவுகளில் ரென்னேட் (rennet) அல்லது சைமோ சின் (chymosin) என்சைம்கள் சேர்க்கப்பட்டு தான் தயாரிக்கப்படுகிறது. இவை இளம் ஆட்டுக்குட்டி மற்றும் கன்றின் வயிற்று பகுதியில் இருந்து பிரித்து எடுக்கப்படும் பொருள் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் பெரும்பாலான சீஸ்களில் அதை அடர்த்தியாக, கெட்டியாக ஆக்குவதற்காக இந்த பொருள் செர்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதற்கு மாறாக, நீங்கள் வீட்டில் செய்யப்படும் (தயிரில் இருந்து எடுக்கப்படும்) சீஸை பயன்படுத்தலாம்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

தயிர்

பேக்கேஜ்களில் விற்கப்படும் சில பிராண்ட் தயிர் வகைகளில் தயிர் நன்கு மினுமினுப்பாக தெரிய ஜெலட்டின் என்னும் பொருள் சேர்க்கப்படுகிறதாம். இந்த பொருள் விலங்குகளின் சதை மற்றும் எலும்பு பகுதிகளை இணைக்கும் தசையில் இருந்து எடுக்கப்படுவதாய் கூறப்படுகிறது.

சுத்திகரிக்கப்படும் சர்க்கரையில்

நன்கு வெள்ளையான சர்க்கரை வேண்டும் என்று விரும்பி வாங்குபவரா நீங்கள். சர்க்கரையைக் சுத்திகரித்து வெள்ளை ஆக்க ப்ளீச் செய்வதற்கு மாறாய், இறக்குமதி செய்யப்படும் மாட்டு எலும்பு கரியை பயன்படுத்தி, பல வேதியல் முறைகளுக்குள் உட்படுத்தி, சர்க்கரை வெள்ளை ஆக்கப்படுகிறதாம். இதை “இயற்கை கார்பன்” என்று கூறி பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

பீர் மற்றும் ஒயின்

பெரும்பாலுமான பிரிட்டிஷ் பிராண்ட் பீர் மற்றும் ஒயின் பானங்களில் “இசிங்கிளாஸ்” (Isinglass) எனப்படும் மீனின் பாகம் சேர்க்கப்படுகிறது. இது அந்த பானங்களில் இருக்கும் ஈஸ்ட் துகள்களை வடிக்கட்ட பயன்படுத்துகின்றனர்.

சிப்ஸ்

நீரின்றி அமையாது உலகு என்பதை போல, சிப்ஸ் இன்றி அமையாது உணவு! அந்த அளவு நாம் சிப்சிற்கு அடிமையாகிவிட்டோம். நீங்கள் விரும்பி உண்ணும் சில ஃப்ளேவர் அல்லது சுவைக்கொண்ட சிப்ச்களில் சிக்கன் கொழுப்பு மற்றும் பன்றியின் என்சைம்களும் சேர்க்கப்படுகின்றன. மற்றும் சுவைக்காக இறைச்சி கொழுப்புகளும் சேர்க்கப்படுகின்றன.

வைட்டமின் மருந்துகள்

இதை பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. ஏறத்தாழ அனைத்து ஜெல் வகையிலான கேப்ஸ்களில் அடைக்கப்படும் வைட்டமின் மருந்துகள் விலங்குகளில் இருந்து எடுக்கப்படும் ஜெலட்டின் எனும் பொருள் கொண்டு தான் தாயாரிக்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button