ஆரோக்கியம் குறிப்புகள்

காபியை பற்றிய சில சுவாரஸ்ய ருசீகரமான தகவல்கள்!!!

பெரும்பாலும் நம் அனைவரின் காலையும் காபியுடன் தான் விடிகிறது. நமது அன்றாட வாழ்க்கையில் மனைவிக்கு அடுத்து மிகவும் ஒட்டி உறவாடும் ஒன்று உண்டென்றால், அது காபி என்று கூறுவது மிகையாகாது. தினமும் மனைவிக்கு இடும் முத்தங்களைவிட, காபி குவளைக்கு இடும் முத்தங்கள் தான் அதிகம்.

 

சிலர் காபிக் குடிப்பது நல்லது என்பார்கள், சிலர் காபிக் குடிப்பது கேடு என்பார்கள், அதெல்லாம் அவரவர் பாடு. காபியில் பல வகைகள், சுவைகள் இருக்கின்றன. நாம் மிகவும் விரும்பி சுவைக்கும் ருசியான காபியின் வரலாறு அதை விட ருசீகரமானது என்று உங்களுக்கு தெரியுமா?

 

ஆம், காபியை எந்த கேட்டரிங் படித்த மாணவரும் கண்டுப்பிடிக்கவில்லை. ஆடு மேய்த்துக் கொண்டிருந்த யாரோ ஒருவர் தெரியாமல் கண்டுப்பிடித்த பானத்தை இன்று உலகே வேண்டி, விரும்பிக் குடித்துக் கொண்டிருக்கிறது. இது மட்டுமல்ல, காபியைப் பற்றய வரலாறு முழுக்கவே “ஆஹான்..” என்று சொல்ல வைக்கிறது….

11 நூற்றாண்டுகள்

காபி எனும் பானம் கண்டுபிடிக்கப்பட்டு 11 நூற்றாண்டுகள் ஆகிறது.

ஆடு மேய்ப்பவர் கண்டுப்பிடித்தது

9ஆம் நூற்றாண்டில், எதியோப்பியாவை சேர்ந்த ஓர் ஆடு மேய்ப்பவர் எதர்ச்சியாகக் கண்டுப்பிடித்த பானம் தான் காபி.

காபித் தடை செய்யப்பட்டது

உலக வரலாற்றில் மூன்று முறை காபி தடை செய்யப்பட்டது. 16ஆம் நூற்றாண்டில் மெக்காவிலும், 1675ஆம் ஆண்டு ஐரோப்பாவில் சார்லஸ் II ஆம் மன்னராலும், 1677ஆம் ஆண்டு ஜெர்மனியில் பிரெட்ரிக் என்பவராலும் காபித் தடை செய்யப்பட்டது.

30 அடி வளர்ச்சி

பொதுவாக காபி மரங்கள் 30 அடி வரை வளர முடியுமாம். ஆனால், 10 அடியில் இருக்கும் போதே அறுவடை செய்துவிடுங்கின்றனர். அப்போது தான் எளிதாக பறிக்க முடியும்.

அதிகமாக பருகுவோர்

பின்லாந்த், ஸ்வீடன், நார்வே, டென்மார்க் போன்ற நாடுகளில் தான் காபி அதிகமாக பருகப்படுகிறது.

கேமரூன் காபி

கேமரூனில் இருக்கும் ஒரு வகை காபி (Coffea Charrieriana) தான் உலகிலேயே இயற்கையாக காஃபைன் நீக்கப்பட்ட காபி ஆகும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

இன்ஸ்டன்ட் காபி

கடந்த 1906ஆம் ஆண்டு, ஆங்கில வேதியியலாளர் ஜார்ஜ் கான்ஸ்டன்ட் வாஷிங்டன் என்பவர் தான் முதன் முதலில் இன்ஸ்டன்ட் காபியை தயாரித்தார்.

உரம்

சில நாடுகளின், சில பகுதிகளில் காபிக் கொட்டைகளை உரமாகவும் பயன்படுத்துகின்றனர்.

நியூயார்க் மக்கள்

நியூயார்க் மக்கள் சராசரியாக ஒரு நாளுக்கு ஏழு முறையாவது காபியைப் பருகுகிறார்கள்.

அதிகமாக ஏற்றுமதி செய்யப்படும் பொருள்

உலகில் எண்ணெய்க்கு அடுத்து இரண்டாவதாக, அதிகமாய் ஏற்றுமதி செய்யப்படும் பொருள் காபி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டரைக் கோடி

உலக அளவில் காபி தொழிற்சாலைகளில் மட்டுமே இரண்டரைக் கோடி பேர் வேலை செய்கின்றனர்.

காபிக் குடிப்பதனால்….

தினமும் காபிக் குடிப்பதால், டைப் 2 நீரிழிவு நோய், அல்சைமர் எனும் மறதி நோய், இதய நோய்கள் போன்ற நோய்களின் அபாயங்கள் குறையும்.

புரோஸ்டேட் புற்றுநோய்

ஓர் நாளுக்கு ஆறு தடவைக்கு மேல் காபிக் குடிப்பவர்களில் பெரும்பாலானோருக்கு புரோஸ்டேட் புற்றுநோய் வரும் அபாயம் இருக்கிறதாம்.

காபி பிரியர்கள் அமெரிக்கர்கள்

ஒருவருடத்திற்கு 40 பில்லியன் டாலர்களை காபிக் குடிப்பதற்கு செலவு செய்கின்றனர் அமெரிக்கர்கள். உலகின் மற்ற பகுதியினர் வெறும் 1.6பில்லியன் டாலர்கள் தான் செலவழிக்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button