தலைமுடி சிகிச்சை

முடி உதிர்வை எப்படி சமாளிக்கலாம் தெரியுமா?

அடர்த்தியான மற்றும் நீளமான தலைமுடியை யார்தான் விரும்பமாட்டார்கள். ஆனால், இன்றைக்கு உள்ள பெரும்பாலான இளைஞர்களின் மனநிலை, ‘இருக்கின்ற முடி கொட்டாமல் இருந்தாலே போதும்’ என்ற எண்ணம்தான். முடி உதிர்வு பிரச்சனையை சமாளிப்பது என்பது கஷ்டமான விஷயம் தான். அதிலும், தற்போது டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு முடி உதிர்தல் பிரச்சனை அதிகரித்துள்ளது. பெரும்பாலும் இள வயதில் முடி உதிர்வு என்பது மோசமான மன அழுத்தம், மோசமான முடி பராமரிப்பு போன்றவற்றால் நிகழக்கூடியவை. இவை தற்காலிகமானது என்றாலும் கவலை கொள்ளாமல் சில வழிமுறைகளை கையாண்டால் முடி உதிர்வை தடுக்கலாம்.

எல்லாருக்கும் டீன் ஏஜ் பருவம் என்பது மிகவும் மகிழ்ச்சியானதாகவும், சுவாரஸ்யமானதாகவும் இருக்கும். ஆனால், தற்போது உங்கள் டீன் ஏஜ் பருவம் ‘அழுத்தத்துடன்’, முடி உதிர்தலின் மன அழுத்தம் பெரும்பாலும் அதிர்ச்சிகரமானதாக இருக்கலாம் . இக்கட்டுரையில், டீனேஜரின் தலைமுடி உதிர்தல் பிரச்சனைகளை தீர்க்க உதவும் வழிமுறைகள் பற்றி காணலாம்.

டீனேஜர்களில் முடி உதிர்தல்

முடி உதிர்தல் பிரச்சனை முன்பு எல்லாம் வயதானால்தான் ஏற்படும். ஆனால், தற்போது சிறிய குழந்தைகளுக்கு கூட முடி உதிர்தல் பிரச்சனை உள்ளது. அதுவும் டீன் ஏஜ் வயதாக இருக்கும் போது,​​அது ஒரு பயங்கரமான பிரச்சனையாகும். 18 வயதில், உங்கள் தலைமுடி உங்கள் வீட்டு தரையையும், குளியலறையையும், பெட்ஷீட்களையும், சீப்புகளையும் – அடிப்படையில் நீங்கள் எங்கு சென்றாலும், அங்கு இருக்கும்போது, சற்று அதிக மன அழுத்தமாக இருக்கும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

மீண்டும் வளரும்

இளமை பருவத்தில் முடி உதிர்தல் ஏற்படுவது நோய் அல்லது மோசமான ஊட்டச்சத்துக்கான அறிகுறியாக இருக்கலாம். முடி உதிர்வை கட்டுப்படுத்தும் மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் உள்ளன . நீங்கள் எப்போதும் சிகை அலங்காரம் (ஜடை போன்றவை) அணிந்தால் கூட உங்கள் முடியை இழக்க நேரிடும். அது விளையாட்டானது இல்லை. இளமை பருவத்தில் முடி உதிர்தல் பொதுவாக தற்காலிகமானது. பொதுவாக தலைமுடியானது பிரச்சனையை சரி செய்த பிறகு மீண்டும் வளரும்.

டீனேஜ் முடி உதிர்வு தீர்வுகள்

மன அழுத்தத்தை நிர்வகிக்கவும்

உங்கள் மன அழுத்தத்தை நிர்வகிக்கவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் ஆரோக்கியமான செயல்முறைகளில் ஈடுபடவும். நீங்கள் உடற்பயிற்சி, தியானம், யோகா, நிம்மதியான தூக்கம் போன்ற நிகழ்வுகளை தினமும் திட்டமிடுங்கள். தினமும் இவற்றை வழக்கமாக செய்து உடல் ஆரோக்கியத்தையும் உங்கள் முடியின் ஆரோக்கியத்தையும் பராமரிக்கலாம். ஏனெனில், மன அழுத்தம் உங்களுக்கு பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். மன அழுத்தம் ஏற்படுவதை தவிர்த்தாலே பல பிரச்சனைகள் உங்களை விட்டு நீங்கும்.

ஆரோக்கியமாக சாப்பிடுங்கள்

ஆரோக்கியமாக சாப்பிடுங்கள் அதே சமயம் ஆரோக்கியமானதை சாப்பிடுங்கள். ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு புரதங்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளை சாப்பிடுவது சிறந்தது. உங்கள் தலைமுடி உதிர்வதை உண்டாக்கும் ஆரோக்கியமற்ற துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும். இது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாது, முடி ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.

முடி வளர்ச்சிக்கு சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்ளுங்கள்

நாம் உட்க்கொள்ளும் உணவில் இருந்து தான் ஊட்டச்சத்துக்களை உடல் எடுத்துக்கொள்கிறது. சில சமயங்களில் அந்த ஊட்டச்சத்துக்கள் போதிய அளவில் இல்லாமல் இருக்கலாம். ஊட்டச்சத்து குறைப்பாட்டால், உங்களுக்கு முடி உதிர்வு மற்றும் முடி வளர்ச்சி இல்லாமல் இருக்கலாம். ஆதலால், உங்கள் உணவில் உள்ள ஊட்டச்சத்து குறைகளை சப்ளிமெண்ட்ஸ் மூலம் நிரப்பலாம். உங்களுக்கான சரியான சப்ளிமெண்ட்டைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.

தலைமுடியை கழுவுதல்

சில மருத்துவர்கள் பேபி ஷாம்பூவைப் பயன்படுத்தலாம் எனக் கூறுகிறார்கள். ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே உங்கள் தலைமுடியைக் கழுவ வேண்டும். தலைமுடியை அலசும்போது மென்மையாக கையாள வேண்டும். ஏனெனில், நீங்கள் தலைமுடியை கடினமாக தேய்க்கும்போது, அவை உடையக்கூடும். மேலும், உங்கள் தலைமுடியை ஒரு டவலால் மிகவும் கடினமாக தேய்க்காதீர்கள். பல முடி வல்லுநர்கள் உங்கள் தலைமுடியை காற்றில் உலர்த்துமாறு பரிந்துரைக்கின்றனர்.

இரசாயணங்களை தவிர்க்கவும்

உங்கள் தலைமுடி ஈரமாக இருக்கும்போது ஸ்டைல் அல்லது சீவக்கூடாது. முதலில் ஈரமான முடியை காற்றில் உலர விடவும். உங்கள் தலைமுடியை பேக் கோம்ப் செய்ய முயற்சிக்காதீர்கள். ஏனெனில் அவை உங்கள் தலைமுடியை சேதப்படுத்தும். கடைசியாக, நீங்கள் நேராக்கிகள் அல்லது வண்ண சிகிச்சைகள் போன்ற இரசாயனங்களைப் பயன்படுத்தும்போது கவனமாக இருங்கள். அடிக்கடி இரசாயன சிகிச்சை பெறுவதை தவிர்க்கவும். இது உங்கள் தலைமுடிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

மருத்துவரைப் பார்க்கவும்

உங்கள் தலைமுடி உதிர்தலுக்கு என்ன காரணம் என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், உங்கள் மருத்துவரிடம் சென்று பேசுங்கள். உங்களுக்கு முடி உதிர்தல் அடிப்படைப் பிரச்சினையால் ஏற்படுகிறதா? என்பதை மருத்துவர் கண்டறிந்து உங்கள் தலைமுடிக்கான சிகிச்சையை பரிந்துரைக்கலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button