மருத்துவ குறிப்பு

சுடுநீரில் குளித்தால் ஆண்மை பாதிக்குமா?

பல்வேறு காரணங்களினால் ஆண்களின் விந்தணு உற்பத்தி பாதிப்பிற்குள்ளாகிறது. பெண்களுக்கும் கரு முட்டை உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதனால் பெரும்பாலோனோர் மலடாகும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே ஆண்களின் விந்தணுக்களை பாதிக்கும் காரணிகளை மருத்துவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

விந்தணு உற்பத்திக்கும், உடல் சூட்டுக்கும் தொடர்புள்ளது. உடல் சூடு அதிகரிக்கும்போது விந்தணு உற்பத்தி பாதிக்கப்படும். நமது உடலின் பிற பகுதிகளில் உள்ள வெப்ப நிலையை விட விந்துப் பையின் வெப்ப நிலை 5 டிகிரி குறைவாகவே இருக்கும். அதற்கேற்றபடி விந்துப் பையானது தனது வெப்ப நிலையை சரிவிகித நிலையில் வைத்துக் கொள்ளும்.

அங்கு வெப்பம் அதிகரிக்கும்போது உற்பத்தி நிச்சயம் பாதிக்கும் என்கிறார்கள் டாக்டர்கள். மனித உடலுக்கு என்று குறிப்பிட்ட வெப்பநிலை அவசியம். அதற்கேற்ப தான் மனித உடலானது படைக்கப்பட்டிருக்கிறது. ஆண்களின் உடலில் அதிக சூடு ஏறினால் விந்தணு உற்பத்தி பாதிக்குமாம். எனவேதான் சூடு நிறைந்த பாத்டப்பில் அதிக நேரம் குளிப்பதோ, உறவில் ஈடுபடுவதோ கூடாது என்கின்றனர் மருத்துவர்கள்.

இது விந்தணு உற்பத்தியை கண்டிப்பாக பாதிக்குமாம். அதேபோல் ஆண்களுக்கு அதிகமாக காய்ச்சல் ஏற்பட்டிருக்கும் நேரத்திலும் உறவில் ஈடுபடக்கூடாதாம். ஆண்கள் அணியும் இறுகலான பேண்ட் ஆண்மைக்கு ஆபத்தாகிறதாம். அதேபோல் டைட்டான உள்ளாடை அணிவதும் விந்தணு உற்பத்தியை பாதிக்கிறதாம். அதேபோல் லேப் டாப் ஐ மடியில் வைத்து உபயோகித்தால் அதில் உள்ள கதிர்வீச்சு மூலம் விந்தணு உற்பத்தி பாதிக்கிறதாம்.

அதிக அளவில் செல்போன் உபயோகிப்பவர்களுக்கும்,செல்போனை பெல்ட்டில் அணிபவர்களுக்கு விந்தணு உற்பத்தியில் குறைபாடு ஏற்பட்டு ஆண்மை குறைபாடு. உடல் பருமனால் பாதிக்கப்பட்டாலோ ஆண்மை பாதிப்பு ஏற்படும். அதே போல் மது, சிகரெட், போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கும் விந்தணு உற்பத்தியில் குறைபாடு ஏற்படுகிறதாம்.

ஒரு சிலருக்கு ஹார்மோன் பிரச்சினைகளாலும், மரபணு சிக்கல்களினாலும் விந்தணு குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது என்கின்றனர் நிபுணர்கள். மேலும் மன அழுத்தம், மனஇறுக்கம் உள்ளிட்ட காரணங்களினாலும் விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும் என்று கூறும் மருத்துவர்கள் சரியான பரிசோதனையின் மூலம் பாதிப்பிற்கான காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

8fa0ed59 4b22 45e2 8577 653d8bbd941b S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button