மருத்துவ குறிப்பு

மூளை எப்படி நினைவுகளை சேமிக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா -தெரிஞ்சிக்கங்க…

ஓர் புதிய ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள், மூளையில் எப்படி நினைவுகள் சேமிக்கப்படுகிறது என்பது பற்றி கண்டறிந்துள்ளனர். மூளையின் மூலக்கூறு மற்றும் செல்லுலார்களில் ஏற்படக்கூடும் மாற்றங்களினால் தான் நினைவுகள் சேமிக்கப்படுகிறது என்று ஆராய்ச்சியில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

 

இதன் மூலம் நினைவிழப்பு சார்ந்த மூளைப் பிரச்சனை உள்ள நபர்களுக்கு, அவர்களது நினைவுகளை மீட்டுடெக்க இந்த ஆராய்ச்சி உதவும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கின்றனர். இது மருத்துவ உலகில் ஒரு மாபெரும் மாற்றத்தை உருப்படத்தும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

மூளைப் புற்றுநோய் பற்றி அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டியவை – இது உங்களுக்கும் கூட ஏற்படலாம்!

மேலும், மூளையில் எவ்வாறு நினைவுகள் சேகரிக்கப்படுகிறது, சேமிக்கப்படுகிறது என்பதனை பற்றிப் பார்க்கலாம்…

நியூரான்

ஒவ்வொரு முறையும் நமது மூளையில் நினைவுகள் சேமிப்பு ஆகும் போது, ஓர் நுண்ணிய இழை ஒரு நியூரானில் இருந்து எலெக்ட்ரோக் கெமிக்கலாக மாறி மற்றொரு அண்டை நியூரானுடன் இணைய வைக்கிறது.

டென்ட்ரைடிக் ஸ்பைன்ஸ் (Dendritic spines)

அவ்வாறு புதிய இணைப்பை உண்டாக்கும் இழைகளை டென்ட்ரிடிக் ஸ்பைன்ஸ் என்று கூறுகின்றனர். பல சோதனைகளுக்கு பின், இந்த ஸ்பைன் உருவாவதற்கு புரதம், Asef2 முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது. (Asef2 எனப்படும் கூறு, மூளை வளர்ச்சியினோடும், மது மற்றும் மன அழுத்தத்தினால், மூளையில் ஏற்படும் நிகழ்வுகளோடும் சார்புடையது ஆகும்)[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

மூளைப் பிரச்சனைகளுக்கான தீர்வு…

டென்ட்ரைடிக் ஸ்பைன்ஸில் (Dendritic spines) ஏற்படும் மாறுதல்கள், நியூரலாஜிக்கல் மற்றும் வளர்ச்சியடையும் கோளாறுகளான மனவளர்ச்சி குன்றுதல், ஞாபக மறதி, நினைவுகள் இழந்துப் போவது போன்றவைகளோடு தொடர்புடையதாக இருக்கிறது என்று முதன்மை ஆராய்ச்சியாளர் டொன்னோ வெப் (Donno Webb) கூறியுள்ளார்.

டென்ட்ரைட்ஸ் மற்றும் ஏக்ஸான்ஸ் (Dendrites and Axons)

நியூரான் செல்கள், மூளையில் குறுக்க நெடுக்க நெசவு போல கடந்திருக்கும் டென்ட்ரைட்ஸ் மற்றும் ஏக்ஸான்ஸை தயாரிக்கிறது. (இவை நீளமான ஃபைபர் போன்று இருக்குமாம்)

ஏக்ஸான்ஸ் (Axons)

ஏக்ஸான்ஸ், ஒரு நியூரானில் இருந்து மற்றொரு அண்டை நியூரானுடன் இணைய வைக்கும் டென்ட்ரைட்சின் எலெக்ட்ரோக் கெமிக்கல் குறியீடுகளை அனுப்புகிறது.

தொடர்பு

எப்போது ஒரு டென்ட்ரைட் ஏக்ஸான்ஸுடன் தொடர்புக் கொள்கிறதோ, அப்போதிருந்து ஸ்பைனில் வளர்ச்சியடையவும், அனுப்பப்படும் குறியீடுகளை பின்பற்றவும், கடைப்பிடிக்கவும் செய்கிறது.

புதிய இணைப்பு

ஏக்ஸான்ஸ் மற்றும் ஸ்பைன், இரு பாதியான நரம்புபினைப்புடைய இணைவளைவு சந்திப்பினை உருவாக்குகிறது. இந்த புதிய இணைப்பு தான் நினைவுகளை சேகரிக்கவும், சேமிக்கவும் அடிப்படையாக இருக்கின்றது.

மனவளர்ச்சி குன்றுதல்

முதிர்ச்சியற்ற ஸ்பைன் தான் மனவளர்ச்சி குன்றுதளுக்கு காரணமாக இருக்கிறது. புதிதாக உருவாகியிருக்கும் இணைவளைவு சந்திப்பினோடு, ஏக்ஸான்ஸ் சரியாக இணையாமல் இருப்பது தான் இதற்கு காரணமாம்.

ஞாபக மறதி – அல்சைமர்

ஸ்பைனில் தோய்வு அல்லது குறைபாடு ஏற்படுவதன் காரணமாகவே ஞாபக மறதி வருகிறது. இதனால் தான் அல்சைமர் பாதிப்பு உள்ளவர்களால் புதிய நினைவுகளை சேமிக்க முடிவதில்லை மற்றும் பழைய நினைவுகளும் வலுவிழந்து மறந்து போய் விடுகின்றன.

புதிய மருந்து

ஆராய்ச்சியாளர்கள், நினைவுகள் எப்படி சேமிக்கப்படுகிறது, பாதிப்படைகிறது என்று கண்டுப்பிடித்துவிட்டோம். இனி, இதை சரி செய்யும் சரியான மெக்கானிஸம் கொண்ட மருந்தினை கண்டுப்பிடித்துவிட்டால், இழந்த நினைவுகளை மீட்டெடுக்க முடியும் என்று கூறியிருக்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button