unnamed
சைவம்

சுவையான ஐந்து இலை குழம்பு !

தேவையானவை: மணத்தக்காளி கீரை, கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லித்தழை, வெங்காயத்தாள் (எல்லா இலைகளும் சேர்த்து) – ஒரு கப், புளி – சிறிதளவு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, பெருங்காயத்தூள், கடுகு, வெந்தயம் – தலா அரை டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுக்கவும்.

அத்துடன் மணத்தக்காளி கீரை, கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லித்தழை, வெங்காயத்தாள் சேர்த்து வதக்கி எடுத்து… புளி, உப்பு சேர்த்து மிக்ஸி யில் அரைக்கவும். அரைத்த விழுதில் தண்ணீரை (ஒன்று அல்லது ஒன்றரை டம்ளர்) கலக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், வெந்தயம் தாளித்து, அரைத்த கலவையை அதில் ஊற்றி நன்றாக கொதிக்கவிட்டு, இறக்கிப் பரிமாறவும்.
இதை சூடான சாதத்தில் கலந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் தொட்டுக்கொள்ளலாம்.

Related posts

பாலக் டோஃபு கிரேவி

nathan

சேனைக்கிழங்கு அவியல்

nathan

தர்பூசணிக் கூட்டு

nathan

புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்

nathan

நாக்கில் எச்சில் ஊறும் அருமையான பூண்டு குழம்பு செய்ய வேண்டுமா…?

nathan

பேபி கார்ன் கிரேவி

nathan

கப்பக்கறி

nathan

சுவையான 30 வகை பிரியாணி

nathan

தர்பூசணிப் பொரியல் செய்யலாம் வாங்க…..!

nathan