ஆரோக்கியம் குறிப்புகள்

இடது கையை பயன்படுத்துவது அமங்கலமான ஒன்றா?தெரிஞ்சிக்கங்க…

இந்திய பண்பாட்டில், அனைவரும் வலது கையில் தான் உண்ணுவார்கள். அதே போல் எந்த பொருளை கையால் வாங்கினாலும் வலது கையையே பயன்படுத்துவார்கள். ஏன் மேற்கத்திய நாடுகளில் கூட இடது கைக்கு பதிலாக வலது கைகளை பயன்படுத்தவே ஊக்கப்படுத்தபடுகிறார்கள். இது ஏன் என்று எப்போதாவது வியந்து இருக்கீர்களா?

நம் இதயம் உடலின் இடது பக்கத்தில் இருப்பது இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. வலது கையை பயன்படுத்தும் அளவு இடது கையை பயன்படுத்தாத வகையில் நம் உடல் அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. பந்து எறிதல் போன்ற செயல்களுக்கு இது பொருந்தும். ஆனால் கொடுக்கல் வாங்கல் ஏன் வலது கையில் நடக்க வேண்டும் என கூறுகிறார்கள்?

இடதும் வலதும் வெவ்வேறு குணங்களை கொண்டுள்ளது

இடதும் வலதும் வெவ்வேறு குணங்களை கொண்டுள்ளது. வலது கை அல்லது காலை இடது பக்கம் வைப்பதற்கு, அல்லது இடது கை அல்லது காலை வலது பக்கம் வைப்பதற்கு பெரிய வித்தியாசம் உள்ளது. யோகா பண்பாட்டின் படி, சில புதிரான நடவடிக்கைகளை தவிர எப்போதுமே நாம் இடது காலை உட்பக்கமாகத் தான் மடித்திருப்போம்.

இடது உணர்ச்சிமிக்கவை

உங்களில் உள்ள பெண்மை தான் இடது – அதனை பாதுகாத்து பராமரித்திட வேண்டும். வலது என்பது உங்களில் உள்ள ஆண்மையாகும். வெளியே நீங்கள் செய்ய வேண்டிய அனைத்தையும் வலது கையாலேயே செய்ய வேண்டும். வலது என்பது வலுவானது என்றால் இடது என்பது உணர்ச்சிமிக்கவையாகும். நீங்கள் ஒதுக்கப்படுகிறீர்கள் என்பதை உணர்த்த இடது கையை தான் பயன்படுத்துவார்கள். அதற்கு காரணம் அவை தான் வரவேற்கும் தன்மையையும் உணர்ச்சி மிக்கவையாகவும் அமைந்துள்ளது.

நுட்பமான விஷயத்திற்கு இடதை பயன்படுத்துங்கள்

இடதை மென்மையாகவும் நன்றாகவும் வைத்துக் கொண்டால், அது நல்லதையே பெறும், நல்ல உணர்வையே அளிக்கும். அதனை பிற நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தினால், அதன் உணர்ச்சி தன்மையை அது இழந்து விடும். மிக நுட்பமான ஸ்பரிசம் ஏதேனும் தேவைப்பட்டால் தான் இடது கையை பயன்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு, கோல்ஃப் விளையாட்டு விளையாடுவதற்கு குறிப்பிட்ட அளவிலான ஆண்மையை உங்கள் மனதில் இருந்து நீக்க வேண்டி வரும். அதனால் தான் கோல்ஃப் விளையாட்டில் பெரும்பாலும் இடது கை பயன்படுத்தப்படுகிறது. அதற்கு உங்களுக்கு வேண்டியது பலம் அல்ல, நுட்பமான ஸ்பரிசமே.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

இடது என்பது பெண்மையாகும்

பெண்மைக்கான இயல்பான தன்மையே இது. இடதும் பெண்மையை உணர்த்துகிறது. பலர் தங்களில் உள்ள பெண்மையை கொன்று விட்டதால், அவர்களால் எந்த ஒரு வித்தியாசத்தையும் உணர முடிவதில்லை. தங்களுக்குள் பெண்மை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தால், இதனை அவர்களால் உணர்ந்திருக்க முடியும்.

பெண்மை பலவீனமானது அல்ல

ஆண்மை மற்றும் பெண்மையை அளவுபடுத்த மேற்கத்திய நாடுகளில் பெரும் முயற்சி செய்யப்பட்டு வந்தது. இப்போது உலகத்தின் அனைத்து பகுதிகளிலும் இதற்கான முயற்சிகள் நடைபெறுகிறது. இது மிகவும் துரதிஷ்டவசமானதாகும். பெண்களின் பெண்மை குறைந்து கொண்டு வருவது மிகப்பெரிய சோகமாகும். எப்படியோ பெண்கள் என்றால் பலவீனமானவர்கள் என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது அப்படியில்லை.

பெண்மை மற்றும் ஆண்மைக்கான வேறுபாடு

பொருளாதாரத்தை வைத்தே மதிப்பீடு என்றால் ஆண்மை மட்டுமே வாழ முடியும். பொருளாதாரம் என்றாலே பிழைப்புத் திறன் செயல்முறையாகும். இந்த உலகத்திலேயே பிழைப்புத் திறன் செயல்முறையை உயர்த்துவதை தான் மிகப்பெரிய விஷயமாக நாம் கருதுகிறோம். வாழ்வதற்கு இது மிகவும் முட்டாள்தனமான ஒன்றாகும். இதனை செய்து விட்டால், பெண்மைக்கான இடமே இல்லாமல் போய் விடும். அதற்கு காரணம் உங்களுக்காகவும் உங்களை சுற்றியுள்ள மக்களுக்கு அளிப்பது என்பது ஆண்மைக்கான செயல்முறையாகும். இதற்கெல்லாம் பெண்கள் தகுதியற்றவர்கள் என கூற முடியாது. ஆனால் தரத்தின் அடிப்படையில் ஒரு தரத்தை நாம் முழுமையாக அழித்து வருகிறோம். அதற்கு பிறகு ஏன் இந்த உலகம் இவ்வளவு கொடுமையாக இருக்கிறது என எண்ணி வியக்கவும் செய்கிறோம். இன்றைய சமூகத்தில் நாம் நிலைநிறுத்தும் மதிப்புகள் வேறு வழியில் இருக்கவும் முடியாது.

வலது கை – பிழைப்புத் திறன் செயல்முறைக்காக

பெண்மை இயங்குவதற்கு இடதை மென்மையாகவும் எச்சரிக்கையாகவும் வைத்திருக்க வேண்டும். இந்த உலகத்தில் நாம் செய்ய வேண்டிய விஷயங்களுக்கு (சம்பாதிப்பதற்கு, பந்தை எறிவதற்கு போன்ற செயல்கள்) வலது கை பயன்படும். அனைத்து விதமான பிழைப்புத் திறன் செயல்முறைகளுக்கும் நாம் வலது கையை தான் பயன்படுத்துகிறோம். மிக நுட்பமாக எதையாவது நீங்கள் செய்தால் நீங்கள் இடது கையை தான் பயன்படுத்த வேண்டும். சிலர் பிறக்கும் போது வலது பக்கத்தில் இதயத்தை கொண்டிருப்பார்கள். அவர்கள் இடது கையை தான் அதிகமாக பயன்படுத்துவார்கள். அப்படி இல்லாத பட்சத்தில், இயற்கையாகவே இடதை விட வலது கையால் தான் நம்மால் பல நடவடிக்கைகளையும் செய்ய முடியும்.

உணர்ச்சி திறனுக்காக இடதை பாதுகாத்திட வேண்டும்

வேறு ஒரு காரணத்திற்காக வடிவமைக்கப்பட்டதால் இடது கையை வேறு மாதிரியாக வைத்திட வேண்டும். அதற்காக வலது கையை கொண்டு மட்டுமே ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என அவசியமில்லை. உதாரணத்திற்கு, உடற்பயிற்சி செய்வது. ஆனால் வலது பக்கத்தை பயன்படுத்துவதை போல் அதிகமாக இடது பக்கத்தை பயன்படுத்தக்கூடாது. வரவேற்பு திறனுக்காக இடது கையை நாம் பாதுகாத்திட வேண்டும். இல்லையென்றால் உங்களிடம் அந்த திறன் இல்லாமல் போய் விடும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button