மருத்துவ குறிப்பு

உடல் களைப்பை போக்குவதற்கான சில எளிய வழிகள்

உடலுக்கு ஏற்படும் களைப்பானது பல வழிகளில் ஏற்படுகிறது. அந்த களைப்பை வேலை செய்யும் நாட்களிலே போக்காமல், வார இறுதியில் போக்குவார்கள். இப்படி செய்வதால் உடலில் ஏற்படும் களைப்பானது முற்றிலும் போகாது. களைப்பை போக்க நாம் எந்த ஒரு நேரத்தையும் ஒதுக்க தேவையில்லை, அனைத்தும் நாம் செய்யும் செயலிலேயே இருக்கிறது.களைப்பை போக்க சில வழிகள்

1. நல்ல ஆழ்ந்த அமைதியான உறக்கம் வேண்டும். ஒரு மனிதன் தினமும் எட்டு மணிநேரம் தூங்கினால், அவன் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். ஆகவே வேலை செய்பவர்கள் களைப்பு போக வேண்டும் என்றால் தூங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதில்லை. எட்டு மணிநேர தூக்கம் இருந்தாலே போதுமானது.

2. நிறைய பேர் தங்கள் களைப்பு போக வேண்டும் என்று வார இறுதியில் நீண்ட நேரம் தூங்க முயற்சிப்பார்கள். ஆனால் புத்துணர்ச்சி பெற எட்டு மணிநேர தூக்கத்திற்கு பதில் 10 மணிநேரம் தூங்கினால் களைப்பு போகாது, மேலும் களைப்பு தான் ஏற்படும். ஆகவே அளவான தூக்கமே உடலுக்கு நல்லது.
sl 300x175 300x175 615x359
3. படுக்கும் முன் சிலர் நன்றாக வயிறு நிறைய சோற்றுடன், எண்ணெய் அதிகமாக உள்ள குழம்பு அல்லது மற்ற எண்ணெய் பதார்த்த உணவுகளை உண்டு பின் தூங்குவார்கள். இவ்வாறு உண்டால் எப்படி நிம்மதியான தூக்கம் வந்து, களைப்பு போய் மறுநாள் சுறுசுறுப்பாக இருக்க முடியும். ஆகவே அவ்வாறேல்லாம் உண்ணாமல் காய்கறிகள், பழங்கள் போன்ற ஆரோக்கியத்தை தரும் உணவுகளை உண்டு பின் தூங்குங்கள், நன்கு தூக்கம் வந்து மறுநாள் புத்துணர்ச்சியுடன் இருப்பர்.

4. வேலை முடித்து விட்டு வீட்டிற்கு சென்ற பின் களைப்பை போக்க ஒரு கப் சூடான காபி குடிப்போம். ஆனால் அவ்வாறு மாலை நேரத்தில் காபி குடிப்பது நல்லதல்ல. அப்படி குடித்தால் அது தூக்கத்தை பாதிக்கும். ஆகவே அந்த நேரத்தில் வேண்டுமென்றால் சிறிது நேரம் குழந்தைகளுடன் விளையாடலாம் அல்லது நடை பயிற்சி மேற்கொள்ளலாம். இதனால் இரவில் நன்கு தூக்கம் வரும்.

5. களைப்பு ஏற்பட்டால் அடிக்கடி உடலில் வலி ஏற்படும். அப்போது உடலுக்கு ஏற்ற மசாஜ் எதையாவது செய்யலாம். இப்போது தான் மசாஜ் செய்வதற்கென்றே ஆங்காங்கு மசாஜ் நிலையங்கள் உள்ளனவே. இவ்வாறு மசாஜ் செய்தால் அப்போது வரும் தூக்கத்திற்கு அளவே இல்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button