அழகு குறிப்புகள்கண்கள் பராமரிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சென்ஸிட்டிவ் கண்களுக்கான மேக்கப் டிப்ஸ்!! | Tamil Beauty Tips

சென்ஸிட்டிவ்வான கண்களை உடையவர்களுக்கு கண்களில் எரிச்சல் ஏற்படுவது பொதுவான ஒன்று. இது அவர்களுடைய அன்றாட வேலைகளைப் பெரும்பாலும் பாதிக்கிறது.

அதுவும், பெண்களுக்கு சென்ஸிட்டிவ் கண்கள் இருப்பது கொஞ்சம் ரிஸ்க்கான விஷயமாகத்தான் உள்ளது. குறிப்பாக, அவர்கள் தங்கள் கண்களை அழகுபடுத்திக் கொள்ள நினைக்கும்போது, மிகவும் சிரமப்படுவார்கள். அவர்கள் கண்களுக்கு சரியாக மேக்கப் செய்யவில்லையென்றால், கண்களில் எரிச்சல் ஏற்படும்; கண்கள் கலங்கும்; பலருக்குக் கண்கள் சிவந்து விடும்.

சென்ஸிட்டிவ்வான கண்களுடைய பெண்கள் மேற்கொள்ள வேண்டிய சில எளிய மேக்கப் டிப்ஸ்கள் குறித்து இப்போது நாம் பார்க்கலாம்.

பிரஷ்களைக் கழுவுங்கள்

சுத்தம் செய்யப்படாத பிரஷ்ஷைக் கொண்டு உங்கள் கண்களுக்கு மேக்கப் செய்தால் அதில் உள்ள அழுக்குகள் உங்கள் கண்களைப் பாதிக்கும். எனவே, அந்த பிரஷ்ஷை சோப்பு அல்லது ஷாம்பு போட்டு சுத்தமாகக் கழுவி, சுத்தமான துணியால் துடைத்துவிட்டு, அப்புறம் உபயோகிக்கவும்.

க்ரீம் ஷேடோக்கள்

உங்களுக்கு சென்ஸிட்டிவ்வான கண்கள் இருந்தால், பவுடர் ஷேடோக்கள் அல்லது பளபளப்பான ஷேடோக்களைப் பயன்படுத்துவதை உடனடியாகத் தவிருங்கள். அதற்குப் பதில், க்ரீம் ஷேடோக்களையே பயன்படுத்துங்கள்.

உள் கண்களுக்கு லைனிங் வேண்டாம்

கண்களின் உள்பகுதிகளில் லைனிங் செய்வது நல்லதுதான். அது கண்களைப் பெரிதாகவும் அழகாகவும் காட்டும். ஆனால் சென்ஸிட்டிவ் கண்கள் உடையவர்கள் இதைத் தவிர்த்தே ஆக வேண்டும்.

நல்ல தயாரிப்புகள்

ஏற்கனவே சென்ஸிட்டிவ்வாக இருக்கும் உங்கள் கண்கள் மேலும் பாதிக்கப்படாத வகையிலான சிறந்த மேக்கப் பொருள்களைத் தேர்ந்தெடுத்து வாங்கிப் பயன்படுத்துங்கள்.

காலாவதி பொருள்கள் வேண்டாம்

கண்களுக்கான சில மேக்கப் பொருள்களை நீங்கள் சிறிது காலம் பயன்படுத்தாமல் நீங்கள் அப்படியே வைத்திருக்கலாம். அவற்றை மீண்டும் உபயோகப்படுத்த நினைக்கும் போது, அவை காலாவதி ஆகிவிட்டதா இல்லையா என்பதைச் சோதித்துக் கொள்ளவும். அவற்றில் பாக்டீரியாக்கள் உருவாகியிருக்கலாம். உஷார்!

ஃபவுண்டேசன்

பிரைமர்கள் மற்றும் ஃபவுண்டேசன் ஆகியவை மிகவும் முக்கியம். அவை உங்கள் சென்ஸிட்டிவ்வான கண்களைப் பாதிக்காத வகையில் பார்த்துக் கொள்ளும். ஆனால் சரியான மற்றும் தரமான பிரைமர்கள் மற்றும் ஃபவுண்டேசன் பொருள்களை மட்டும் பயன்படுத்தவும்.

மஸ்காரா வேண்டாம்

சென்ஸிட்டிவ்வான கண்களுக்கு மஸ்காரா ஒரு வில்லன் தான். அதில் உள்ள நார்ச்சத்துப் பொருள்கள் சென்ஸிட்டிவ் கண்களுக்கு நல்லதல்ல. எனவே, மஸ்காராவைத் தவிர்க்கவும்.

அதிக கவனம்

சென்ஸிட்டிவ்வான கண்களை அதிக கவனத்துடன் பராமரிக்க வேண்டும். மேக்கப் போடும்போது கைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். கண்களைக் கசக்கக் கூடாது.

மேக்கப்பைக் கலைக்க வேண்டும்

எவ்வளவு அக்கறையோடு உங்கள் கண்களுக்கும் முகத்துக்கும் மேக்கப் போடுகிறீர்களோ, அதே அக்கறையோடும் நேரத்தோடும் சரியான வழிமுறைகளோடும் மேக்கப்பை தேவையில்லாத போது கலைத்து விடவும் வேண்டும். உங்கள் சென்ஸிட்டிவ்வான கண்களுக்கு இதுதான் பாதுகாப்பு!

லைட் கலர்ஸ்

சென்ஸிட்டிவ்வான கண்களை உடைய நீங்கள், அடர்த்தியான கருமை நிற கண்மையைப் பயன்படுத்துகிறீர்களா? அதற்குப் பதில், சில லைட்டான நிறங்களைப் பயன்படுத்திப் பாருங்கள். அது உங்கள் கண்களுக்கு மிகவும் நல்லது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button