எடை குறைய

ஸ்லிம் அழகு பெற ஆசையா?

உலகில் ஊட்டச்சத்துக் குறைவால் அவதிப்படுபவர்கள் ஒருபுறம் என்றால், உழைப்புக்கு மீறிய உணவின் காரணமாக அதிக உடல்

எடையால் அவதிப்படுபவர்கள் மறுபுறம்.

சரி, உடல் பருமனானவர்கள், இளைத்து, ‘ஸ்லிம்’ அழகு பெறுவது எப்படி? அதற்கான வழிகள் சில…

* சாதாரணமாக தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைச்சதை குறைந்து

உடல் வடிவம் அழகு பெறும்.

* சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம் அதிகமாகச் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் குறைத்து

உடலுக்குப் புத்துணர்ச்சி தரும்.

* வாரத்துக்கு இரண்டு முறை சுரைக்காயை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுச் சதை குறையும்.

* மேலும் சதை போடுவதைத் தடுக்க வேண்டும் என்றால், ‘பிளாக் டீ’யில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்துவர வேண்டும்.

இதுதவிர, வாழைத்தண்டுச் சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தாலும் ஊளைச்சதையைத்

தடுக்கலாம்.

* இவை எல்லாவற்றுக்கும் மேலாக, காலையில் அரைமணி நேரம் நடைப்பயிற்சி மேற்கொண்டால் கொழுப்பு கரையும், உடல் எடை

குறையும். புத்துணர்வாகவும் இருக்கும்.

* சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையைக் குறைக்க உதவும். கொள்ளு ரசம், கொள்ளு சுண்டல் போன்றவை

செய்து சாப்பிடலாம். அதை விட இரவில் ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில்

அதைச் சாப்பிட்டால் நிச்சயம் எடையைக் குறைக்கும்.
1d2b32d5 691d 46b0 a941 63f451f138e5 S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button