மருத்துவ குறிப்பு

முதுகு வலியை சரி செய்ய எளிய சிகிச்சைகள்

மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையில் முதுகு வலி என்பது ஏராளமானோருக்கு இருக்கும் ஓர் பொதுவான பிரச்சனையாகிவிட்டது. முதுகில் ஏற்படும் வலியை சாதாரணமாக நினைத்துவிட்டால், அதனால் நாளடைவில் பெரும் பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே ஆரம்பத்திலேயே அதனை சரிசெய்து கொள்ள வேண்டும். இப்போது முதுகு வலியை சரிசெய்வற்கான சில எளிய சிகிச்சைகள் முறைகளை பார்க்கலாம்.

* உங்களுக்கு முதுகு வலி கடுமையாக இருக்கும் போது, குப்புறப்படுத்து, கைகளை உடலை ஒட்டி வைத்துக் கொண்டு, தலையாணையை ஒரு பக்கமாக திருப்பி வைத்துக் கொள்ளுங்கள். இந்நிலையால் முதுகு வலியில் இருந்து நல்ல நிவாரணம் கிடைப்பதை நீங்கள் உணரலாம்.

* நாற்காலியில் உட்காரும் போது சாய்ந்து உட்காராமல், தோள்பட்டை நேராக இருக்கும் வண்ணம் நிமிர்ந்து பார்க்கும் படியான நிலையில் அமர வேண்டும். நாற்காலியில் அமரும் போது, கால் மேல் கால் போட்டு உட்கார்வதைத் தவிர்த்து, கால்கள் 90 டிகிரியில் இருக்கும் வண்ணம் அமருங்கள். மேலும் இப்படி உட்காரும் போது, முதுகுத்தண்டுவடம் நேராகும். இதனால் முதுகு வலி வருவதைத் தடுக்கலாம்.

* தினமும் ப்ளான்க் பயிற்சியை மேற்கொண்டு வருவதன் மூலம் முதுகு வலியைத் தடுக்கலாம். அதற்கு தரையில் ஒரு துணியை விரித்து, அதன் மேல் குப்புறப் படுத்து, முழங்கை மற்றும் பெருவிரலை தரையில் ஊற்றி, உடலை வளைக்காமல் நேராக மேலே தூக்க வேண்டும். இப்பயிற்சியை செய்து வந்தால், முதுகு வலி நீங்குவதோடு, அடிவயிற்றில் உள்ள கொழுப்புக்களும் கரையும்.

* எவ்வளவு வேலை இருந்தாலும், கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் அமர்வதைத் தவிர்த்திடுங்கள். 30 நிமிடங்களுக்கு ஒருமுறை சிறு வாக்கிங் மேற்கொள்ளுங்கள். இதனால் முதுகு வலியைத் தவிர்க்கலாம்.
b75b0100 ff07 4ab7 b8a4 2942e445d7d0 S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button