மருத்துவ குறிப்பு

வேரிகோஸ் பிரச்சினையா? இதோ அற்புதமான எளிய தீர்வு

வேரிகோஸ் வெயின்ஸ்’ என்ற இந்த நரம்பு சுருட்டிக் கொள்ளும் பிரச்னையை, வாழ்க்கையில் பலரும், ஏதேனும் ஒரு காலகட்டத்தில் உணர்ந்திருப்பார்கள். பெண்களை அதிகம் பாதிக்கிற வேரிகோஸ் வெயின்ஸ் பிரச்னை பற்றி விரிவாகப் பேசுகிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.

”இதயம்தான் உடல் உறுப்புகள் அத்தனைக்கும் ஆக்சிஜன் நிறைஞ்ச ரத்தத்தை பம்ப் செய்து அனுப்பற முக்கிய இடம்னு எல்லாருக்கும் தெரியும். தலைலேர்ந்து கால் வரைக்கும் இந்த ரத்தத்தைக் கொண்டு போகும் ரத்தக் குழாய்களுக்கு ‘வெயின்ஸ்’னு பேர். அப்புறம் கார்பன் டை ஆக்சைடு கலந்த ரத்தத்தை மறுபடி இதயத்துக்குக் கொண்டு வர்றதும் இதே வெயின்ஸ்தான். இப்படி ரத்தம் இதயத்துக்குப் போக, கால் தசைகளும்கூட பம்ப் மாதிரி உதவி செய்யும். அப்படிப் போகறப்ப, கால்கள்ல உள்ள நாளங்கள் வீங்கி, புடைச்சுக்கிறதாலயும், ரத்த நாளங்கள்ல உள்ள வால்வுகள் பலவீனமா இருந்தாலும் வேரிகோஸ் வெயின்ஸ் வரலாம்.

ஆண்களைவிட பெண்களுக்கு இந்தப் பிரச்னை அதிகம் வருது. நீண்ட நேரம் நின்றபடியே வேலை பார்க்கிறவங்க, உடல் பருமன் உள்ளவங்க, கர்ப்பிணிப் பெண்கள், மெனோபாஸ் காலத்தை நெருங்கறவங்களுக்கெல்லாம் இந்தப் பிரச்னை இருக்கு. பரம்பரை ரீதியாகவும் குறிப்பிட்ட சதவிகிதப் பெண்கள் இதனால பாதிக்கப் படறாங்க.கை, கால்கள்ல வலி, வீக்கம், உள்ளுக்குள்ள ரத்தம் தேங்கி, சருமத்துல மாற்றங்கள் தெரியறது, சின்னதா அடி பட்டாலும் அதிக ரத்தப் போக்கு, சருமத்துல அங்கங்க கருப்பு, கருப்பா திட்டு திட்டா தெரியறது, நடக்கும் போது வலினு வேரிகோஸ் வெயின்ஸ் நிறைய அறிகுறிகளைக் காட்டும். சில சமயம் புண் வந்தா சீக்கிரம் ஆறாது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

அரிதா சிலருக்கு, அதாவது, 1 சதவிகிதத்தினருக்கு அது புற்றுநோயாகவும் மாறும் அபாயம் உண்டு. வருமுன் தவிர்க்கிறதுதான் இதுக்கான முதல் அட்வைஸ். அதன்படி ஒவ்வொருத்தருக்கும் உடற்பயிற்சி ரொம்ப முக்கியம். குடும்பத்துல யாருக்காவது வேரிகோஸ் வெயின்ஸ் பிரச்னை இருக்கிறது தெரிஞ்சா, அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவங்க, முன்கூட்டியே எடையைக் கட்டுப்பாட்டுல வச்சுக்கிறது நல்லது. கால்களை ரொம்ப நேரம் தொங்கவிட்டபடி உட்காராம, கொஞ்சம் உயர்த்தின மாதிரி வச்சுக்கணும். ரொம்ப நேரம் நிற்கறதைத் தவிர்க்கணும். கர்ப்பிணிப் பெண்களுக்கு கர்ப்பப்பையோட அழுத்தம் காரணமா, இந்தப் பாதிப்பு வர்றது சகஜம்.

இடது பக்கமா திரும்பிப் படுக்கிறது அவங்களுக்கு இதம் தரும். பிரச்னை இருக்கிறவங்க உடனே மருத்துவரைப் பார்க்கணும். கால்கள்ல சாக்ஸ் மாதிரி அணியற ‘கம்ப்ரஷன் ஸ்டாக்கிங்ஸ்’ உபயோகிக்கிறது பலன் தரும். பிரச்னை தீவிரமானவங்களுக்கு அறுவை சிகிச்சைகள் இருக்கு. ‘என்டோவீனஸ் லேசர் சிகிச்சை’, ‘ரேடியோ ஃப்ரீக்வன்சி அப்லேஷன்’, ‘செலெரோ தெரபி’னு நவீன சிகிச்சைகளும் குணம் தரும்.” என்கிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button