தலைமுடி சிகிச்சை

கூந்தல் உதிர்வை தடுக்கும் தேங்காய்ப்பால் சிகிச்சை

0172b68a 9436 4109 b06c 3ad70d0e26b0 S secvpf
தேங்காய்ப்பால் மண்டைப் பகுதிக்கு ஊட்டம் அளித்து, வேர்க்கால்களைப் பலப்படுத்தி, முடி வளர்ச்சியைத் தூண்டும்

வெறும் தேங்காய்ப்பாலில், கற்றாழையைக் கலந்து கொள்ளவும். முடியை பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொன்றிலும், இந்தக் கலவையைத்

தடவி, வட்டமாக மசாஜ் செய்யவும்.

தேங்காய்ப்பால் மண்டைப் பகுதிக்கு ஊட்டம் அளித்து, வேர்க்கால்களைப் பலப்படுத்தி, முடி

வளர்ச்சியைத் தூண்டும்.

தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய் மூன்றையும் சம அளவு எடுத்து லேசாக

சூடாக்கவும். கறிவேப்பிலைப் பொடி, நெல்லிக்காய்பொடி, ஹென்னா மூன்றையும் தலா 1 டீஸ்பூன் எடுத்து, சூடான எண்ணெயில்

போட்டு, அடுப்பை அணைத்து விடவும்.

இந்த எண்ணெயை தலையில் தடவி, விரல் நுனிகளால் மசாஜ் செய்யவும். பிறகு வெந்நீரில்

நனைத்துப் பிழிந்த டவலால் தலையைச் சுற்றிக் கட்டவும். நான்கைந்து முறைகள் இப்படிச் செய்த பிறகு, சாதம் வடித்த

கஞ்சியில், சீயக்காயைக் குழைத்து, தலையை அலசவும். இந்த முறையை வாரம் ஒருமுறை செய்து வந்தால் விரைவில் கூந்தல் உதிர்வது நின்று விடும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button