தலைமுடி சிகிச்சை

கூந்தல் உதிர்வை உடனடியாக தடுக்கும் ஹேர் ஆயில்

76629a4b 3586 485e a558 e298d808e60b S secvpf
முடி உதிர்வுக்கு முக்கிய காரணம் முறையான பராமரிப்பின்மை. தினசரி தலைக்குக் குளிப்பது மிக முக்கியம். இன்று சுற்றுப்புற சூழல் மாசு எக்கச்சக்கம். வீட்டை விட்டு வெளியே போகிற எல்லோரும் தினசரி தலைக்குக் குளித்தாக வேண்டும்.

வீட்டுக்குள்ளேயே இருப்பவர்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் தலை குளித்தால் போதுமானது. வேலைச் சுமை, டென்ஷன் காரணமாக தலையில் எண்ணெய் சுரப்பிகள் அதிகமாக வேலை செய்யும். தூசும் மாசும் அத்துடன் சேர்ந்து கொள்ள இரண்டும் கலந்து மண்டையின் துவாரங்களை அடைத்துக் கொள்ளும். காலையில் குளிக்க நேரமில்லாவிட்டாலும், இரவிலாவது குளிக்க வேண்டும்.

100 மி.லி. ஆலிவ் ஆயில், 100 மி.லி. விளக்கெண்ணெய், 100 மி.லி. பாதாம் எண்ணெய் மூன்றையும் கலந்து கொள்ளவும். இதில் 50 சொட்டு ரோஸ்மெர்ரி ஆயில், 50 சொட்டு லேவாண்டர் ஆயில், 25 சொட்டு பே ஆயில் (பிரிஞ்சி இலையில் இருந்து எடுக்கப்படுகிற எண்ணெய்), 50 சொட்டு சிடர்வுட் ஆயில் ஆகியவற்றைக் கலக்கவும். 1 வாரம் இந்தக் கலவையை அப்படியே வைக்கவும்.

1 வாரம் கழித்து இந்தக் கலவை எண்ணெயை தினமும் இரவில் தடவிக் கொண்டு மறுநாள் காலையில் தலைக்குக் குளிக்கவும். இப்படிச் செய்தால் முடி உதிர்வது உடனடியாக நிற்கும். 1 மாதம் தினம் இப்படிச் செய்தால் கூந்தல் நன்கு வளர ஆரம்பிக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button